Category Archives: கவிதைகள்

அவன் செயல்

‘பணிப்-பகை மயிலில்’ பவனிவந்து எங்களது ‘பிணிப்- பணிகள்’ தம்மை பிய்த்துக் குதறிடுது ஆழ்ந்தகன்று நுணுகிய ‘அழகுவேல்’! நம்…புரியா

Posted in கவிதைகள் | Comments Off on அவன் செயல்

கார்த்திகை நாளினில் கதி நீயே!

“தந்தனத் தானன தன தான” மெட்டு நல்லையின் கோபுரம் வரவேற்க நாதமும் வேதமும் உயிரூட்ட பல்வகை வாத்தியம் இசைமீட்ட பாரடா கண்கள் எம் இடரோட்ட!

Posted in கவிதைகள் | Comments Off on கார்த்திகை நாளினில் கதி நீயே!

முழுதும் உன் செயல்.

வாயினால் உனைப் பாடிப் பரவலே வாழ்க்கை… என்றுதான் வாழும் பலரிடை யானுமோர் மகன்; உன்றனின் வாசலில் யாசகன்; வரும் இன்பங்கள் துன்பங்கள், யான் அடைகிற வெற்றிகள் தோல்விகள், நன்மை தீமைகள்,யாவும் நின் செய்கையாய்

Posted in கவிதைகள் | Comments Off on முழுதும் உன் செயல்.

‘ராஜ பவனி’

‘ராஜ பவனி’ ‘வசந்த மண்டபத்’திருந்து ஆரம்ப மாக, தவில் நாத சுரம் பொழியும் “தந்ததன தானா தந்த தன தா” வாம் கம்பீர மல்லாரி கலையாட்ட, வகைவகையாயக்

Posted in கவிதைகள் | Comments Off on ‘ராஜ பவனி’

ஆளவைப்பான்

‘அலங்காரக் கந்தன்’ எழில் நல்லூரான் – யாழின் அடையாளம் என என்றும் பொலிகின்றான். ‘நிலை’ என்ன வரும்போதும் நிழலாவான் -எங்கள் நிஜக் காவல் அரணாக நிலைக்கின்றான்.

Posted in கவிதைகள் | Comments Off on ஆளவைப்பான்

நல்லூரான் புகழ்

எல்லையற்ற எழில்குவிந்து ஒளிர்ந்து இருக்கும்.- திக்கு எட்டினிலும் புனித அருள் நிறைந்து கொழிக்கும். ‘நல்லை’ கொடியேறி விட்டால் ஊரே சிலிர்க்கும் -திரு நாள்கள் ஒவ்வொன் றினிலும் புது மேன்மை துளிர்க்கும்.

Posted in கவிதைகள் | Comments Off on நல்லூரான் புகழ்

ஞானம் பெறுக!

கண்கள் திறந்திருப்பீர் – இரு காதுகள், மூக்கை, விரித்து இரசித்துமே எண்ணத்தினைக் குவிப்பீர் – உங்கள் இதயத் தினையும் வெளியாக்கிக் கொள்ளுவீர். வண்ணம் மிகு எழிலும் – இசை வார்ப்பும், கவியும், மலர்களும், தென்றலும்

Posted in கவிதைகள் | Comments Off on ஞானம் பெறுக!

ஏமாளி

“ஏமாளி நீ” என்றாய். “இந்த உலகத்தில் வாழத் தெரியா வகையில் நீயும் ஒன்று” என்றாய். நீதி நியாயங்கள், நேர்மை அறம் உண்மை பாவத்திற் கஞ்சல்,

Posted in கவிதைகள் | Comments Off on ஏமாளி

வளர்வோம்

விடிவெள்ளி எழுமென்று விழிபூத்திருந்தோம். விதிமாற்றும் திசைநோக்கி வழிபார்த்திருந்தோம். தொடுவானில் தெரிகின்ற திலக்கென்றிருந்தோம். தொடர்ந்தேனோ தடம்மாறித் தடுமாறுகின்றோம்?

Posted in கவிதைகள் | Comments Off on வளர்வோம்

சான்று

எப்படி வந்தது இக்குழிக்குள் அப்பொம்மை? எப்படி வந்தது? இதன் ‘உரிமையாளனுடன்’ விளையாடிக் கொண்டிருந்த வேளையிலே… அவனோடு அளவளாவி நின்றதுவோ?

Posted in கவிதைகள் | Comments Off on சான்று

இன்று வரை…

தோண்டக் கிழங்குவரும் வளம்சூழ்ந்த நம் அயலில் தோண்ட… எலும்புகளின் கூடுவரும் துயர்க்காலம்! சுடலைதான்; ‘எரிக்கும் சுடலைதான்’; அதற்குளின்று

Posted in கவிதைகள் | Comments Off on இன்று வரை…

வேண்டாத போர்

“வாழத்தான் பூமிவந்தோம்; வதைசுமக்க அல்ல” என்று போரை வெறுத்து புதுமையுடன் அன்பினது ஆழ இணைப்பில் அனைவருமே ஒற்றுமையை ஆளத்தான் காத்திருந்தோம்!

Posted in கவிதைகள் | Comments Off on வேண்டாத போர்

உலகமும் நாமும்

ஓரிரு நொடிப் பொழுதில் பெரும்பெரும் ஒளிர் நகர்கள் இடிந்திருள் சூழ்ந்தது. பேயிரைச்ச லோடேவு கணை நிரை பேரிடிகளாய் இலக்கைச் சரித்தது. ஆயிரம் மைல் தாண்டி அவைபாய்ந்து அழித்தன நெடு மாடிகள் யாவையும்.

Posted in கவிதைகள் | Comments Off on உலகமும் நாமும்

பதிலென்ன?

யாரென்ன சொன்னாலும் யார் எதுதான் செய்தாலும் யாரெவரைத் தேரிலேற்றி முடிசூட்டி விடுவதென்றோ… யாரெவரைத் தள்ளிவீழ்த்தித் தாழ்த்தி மிதிப்பதென்றோ… யாரெவரின் உயிரை எப்போது எடுப்பதென்றோ… யாரெவரை மயிரிழையில்

Posted in கவிதைகள் | Comments Off on பதிலென்ன?

என் சாபம்

ஓரிரு நொடியில் உயர்ந்த பெருவிமானம் கீழே தடுமாறி வீழ்ந்து வெடித்ததையோ! இயக்கி நகரவைத்த எரிபொருளே விமான உடல் உயிரைத் தகனக் கிரிகைசெய்து தீய்த்ததையோ!

Posted in கவிதைகள் | Comments Off on என் சாபம்