கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராக விளங்கிய கலாநிதி சபா.ஜெயராசா அவர்களால் இயற்றப்பட்ட ‘பாலர் கல்விப பாடல்’ நூல் ஐPவநதி பதிப்பகத்தின் ஊடாக மீள் பதிப்பாக வெளிவர இருப்பது மகிழ்ச்சிக்குரியது.
இந் நூல் ‘நகர்ப்புற நிகழ்ச்சித்திட்ட யுனிசெவ் அனுசரனையுடன்’ யாழ்ப்பாண மாநகர சபையினால் வெளியீடு செய்யப்பட்டு இருந்ததும், அந் நூலுக்கான அணிந்துரை அக்காலத்தில் மாநகர சபை ஆணையாளராக விளங்கிய திரு.வே.பொ.பாலசிங்கம் அவர்களால் வழங்கப்பட்டிருந்ததும், அதில் “கலாநிதி சபா.nஐயராசா அவர்கள் எமது பிரதேச மக்களினுடைய பல்வேறு மட்டங்களிலான அபிவிருத்திகளிலும் அக்கறை உள்ளவர்.ஆரோக்கியமான சிறார்கள் நாட்டினுடைய செல்வங்கள் என்ற கருத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்.சிறார்களின் உடல் உள ரீதியான வளர்ச்சியின் அவசியத்தை வற்புறுத்துகின்றவர்.இவரால் ஆக்கப்பட்ட பாலர் கல்விப்பாடல்கள் பாலர் துறைக்கு அரிய பங்களிப்பாக விளங்கும் என்பதில் நாம் ஐயம் அடைய தேவையில்லை”என ஆணையாளர்; அவர்கள் சுட்டிக்காட்டி இருந்ததும், அவ் நூல் வெளியீட்டுக்கு யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி திரு.இ.தெய்வேந்திரம் மற்றும் நகர்ப்புற திட்ட அலுவலராக பணியாற்றும் திரு அ.யோகரத்தினம் ஆகியோரின் பங்களிப்பை ஆணையாளர் பாhராட்டி இருந்ததும், யாழ் மாநகர சபை அக்காலத்தில் சமூகத்திற்கு பயன்தரும் பல விடயங்களில்,வேலைத்திட்டங்களில்; நேரடியாக ஈடுபட்டு இருந்தமையும் அதன் அறுவடையாக ‘பாலர் கல்விப்பாடல்’ அன்று வெளிவந்து அந் நூல் பாலர் கல்வித்துறைக்கு பெரும் பங்காற்றி இருந்ததையும் இன்று புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சபைகள் செயற்பட்டு இராத அக் காலத்தில் ஆணையயாளரின் நேரடியான நிர்வாகத்தின் கீழ் இவ்வாறான செயற்பாடுகள் அன்று இடம்பெற்று இருந்தன.கடந்த சுமார் 06 வருடங்களுக்கு மேலாக யாழ் மாநகர சபையன் ஆணையாளராக கடமையாற்றியவன் என்ற அடிப்படையில் இவ்வாறான சமூக நோக்கு சார்ந்த செயற்பாடுகளை தனித்துவ அதிகாரங்களினைக் கொண்டு இயங்கும் மாநகர சபை முன்னெடுக்க வேண்டியது எவ்வளவு அவசியமானது என்பதனையும் உணர்ந்து கொள்ள கூடியதாக இருக்கிறது.
பாலர் கல்விப் பாடல் நூலை படைத்து அளித்த கலாநிதி சபா.nஐயராசா அவர்கள்
“முன்னாரம்பப் பள்ளிக்கூட மாணவரின் உடல்
உள்ளம்,மனவெழுச்சி,அழகியல் உணர்வு
ஆக்கத்திறன்கள் என்பவற்றை அடிப்படையாகக்
கொண்டு இப்பாடல்கள் எழுதப்பட்டுள்ளன” என்றும்
“குழந்தை உளவியல்,குழந்தை அழகியல்,ஆகிய
துறைகளினூடாகவே குழந்தை இலக்கியங்களை
வளப்படுத்தவேண்டியுள்ளது” என்றும் அந்நூலிலே அக்காலத்திலேயே தெரியப்படுத்தி இருக்கின்றார்.
இந் நூல் வெளிவந்த காலத்தில் முன்பள்ளி செயற்பாடுகள் ஒழுங்குமுறைப்படுத்தப்படாது இருந்தது.அக்காலத்தில் முன்பள்ளிகள் என்பவை மிக அரிதாகவே செயற்பட்டன.அந் நேரத்திலேயே முன்பள்ளி கல்வியின் அவசியத்தையும் அதனை குழந்தைகள் இலகுவாக புரிந்து கொள்ளக் கூடிய வடிவமான பாலர் பாடல்களை தெரிவுசெய்து இந் நூலை ஆக்கினிருந்தது முக்கியமானது. குழந்தைகளின் புலன் உணர்வு,உடல் இயக்க அசைவுகள்,ஊடாக அவர்களின் ஆரம்ப மனப்பாங்கை விருத்தி செய்தல்,உடல் அசைவுகளில் ஈடுபடவைத்தல்,அவர்களின் கண்டுபிடிக்கும் திறன்களை வளர்த்தல்,போன்ற விடயங்களை இப்பாடல்க;டாக கலாநிதி சபா.nஐயராசா அவர்கள் அறிவு பூர்வமாக வளர்த்தெடுத்து நூல்வடிவாக்கி இருக்கிறார்.இந் நூல் ஐPவநதி பதிப்பகத்தால் மீள் பதிப்பாக மீள உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது தெளிவான திட்டமிடல், வரையறைகள், பாடத்திட்டங்கள் என்பவற்றின் மூலம் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு இயங்கும் முன்பள்ளிகளுக்கு ஒரு உசாத்துணை நூலாக பயன்படுத்தப்பட்ட கூடியதாக இம் மீள் பதிப்பு இருக்கும் என நம்புகின்றேன்.