சசி. கிருஸ்ணமூர்த்தியின் கடிதம்

திரு.த.ஜெயசீலன்,
02.01.1996.

.அன்புள்ள ஜெயசீலன்,

நலம் நாடுவதும் அதே. நீண்ட நாட்களாக கடிதம் எழுதயோசித்ததுண்டு. ஆகவில்லை.
‘சுந்தரன்’ பார்த்தேன் சந்தோசமாக இருந்தது. ‘சிரித்திரன்’ போல் இருந்தாலும், அதன் வருகை அவசியமாக இருக்கின்றது. மிகவும் வரையறுக்கப்பட்ட அச்சு வசதிகளுக்கிடைப்படவும் நல்லாச் செய்கின்றீர்கள். பல நண்பர்களுக்கும் அறிமுகம் செய்திருக்கின்றேன். ஏதாவது எழுத யோசிக்கின்றேன்.
உங்கள் கவிதை பெயராற்று ‘ மடலில்’ பிரசுரமாயிருக்கின்றது. அனுப்புவதற்கு மறந்து விட்டேன். இப்பொழுது களத்திலும் ஒன்று பிரசுரமாயிருக்கின்றது. அதன் புகைப்படப்பிரதி இத்துடன் உள்ளது. உங்களுக்கும் பிரதி அனுப்புவார்கள் என்று நம்புகின்றேன். புட்டம் புத்தகசாலைக்கு ‘களம்’ 10 பிரதிகள் அனுப்பி வைப்பார்கள். களத்தில் எனது திரைப்படம் பற்றியதொரு கட்டுரையும், இடம்பெற்றுள்ளது. வானொலியிலும் பேச முடிகின்றது. இடைக்கிடை உங்கள் கவிதைகள் நல்லா வருகின்றன. நிறைய எழுத வேண்டும் என்று யோசிக்க வேண்டாம். நன்றாக வருவது பற்றி யோசிக்கவும். மற்றதைக் கொண்டு தொகுதி ஒன்று போடலாமே.
வேறு என்ன? முடியுமாயின் கடிதம் எழுதவும்.

என்றும் அன்புடன்,
சசி. கிருஸ்ணமூர்த்தி.