தா.நாகபாஸ்கரன்

சரசாலை வடக்கு,
சாவகச்சேரி,
10.03.2015.

அன்புக்கும் மதிப்புக்குமுரிய கவிஞர்,
திரு.த.ஜெயசீலன் அவர்கட்கு,
இனிய வணக்கம்,

ஐயா,
உங்கள் கவிதை கொண்டு நாங்கள் காணாததை எல்லாம் காட்டுகிறீர்கள் ஓவியனும் கவிஞனும் நாம் காணாதை எல்லாம் காட்டுவதாகவே இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பொருளை உள்ளபடி விளக்குபவர் அப்பொருளை உருவாக்கியவனுக்கு சமாதானமாகின்றான். என்று சித்பவானந்தர் கூறுவார் இலயஞானதிலகம் என்ற கவிதையில் இரயிலைக் கண்டுபிடித்த ஜோர்ச் ஸ்ரீவன்சனுக்கு கிட்டப் போய்விட்டீர்கள்.
உங்கள் கவிதைகளில் எதைத் தொட எதைவிட என்று தெரியவில்லை. தலை கால் சுற்றுகிறது. ஒவ்வொரு நயமாக ரசமாக நவரசங்களும் உங்கள் கவிதைகளில் விரவிக்கிடக்கின்றது. பழத்தின் சுவையை உண்பவனுக்குத்தான் தெரியும். படைத்தவனுக்கும் தெரியாது. உங்கள் கவிதைக் கனிகளை நேரம் கிடைக்கும். போதெல்லாம் தனித்துச் சுவைத்துக் கொண்டிருப்பேன். மனம் சோர்வடையும் போதெல்லாம் குறிப்பெடுத்த கவிதை வரிகளை வாசிப்பேன். மனதுக்கு எழுச்சியையும் உற்சாகத்தையும் உங்கள் கவிதைகள் தந்திருக்கின்றன. உதாரணம் பல கூறுவேன். நேரம் வரும்போது
பல தளங்களிலும் நற்கவிதைகளை தந்து கொண்டிருக்கும் தங்களை கவிஞன் என்ற வகையில் பாராட்டிப் பெருமைபட்டுக் கொள்கின்றேன். தங்கள் பணிச்சூழலும் கவிதை உலகமும் ஒன்றோடொன்று இசைந்து ஒத்திசைவு பெற்று புதுப்பொலிவு பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை மீண்டும் மீண்டும் வழுத்தி மீண்டும் சந்திக்கும் வரை நன்றி கலந்த நட்புடன் விடைபெறுகிறேன்.
நல் உறவை நனி விரும்பும்
தா.நாகபாஸ்கரன்