ஞான வழிக் கலங்கரை

நல்லைக் கந்தனின் கோவில் நிழல் இன்று
‘நாயன்மார்க்கட்டைத்’ தாண்டியே ‘செம்மணி’
எல்லை மட்டும் கவிந்து ஒளிர்ந்தது!
எவர்க்கும் தனது இருப்பிடத்தின் திசை
சொல்லியே வரவேற்றது! கம்பீரத்
தோற்றத்தில் ‘நல்லை வேலாய்’ நிமிர்ந்தது! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மாற்றம்?

வெளித்துக் கிடக்கிறது வானம்.
கவலையற்றுக்
குளிர்ந்து திரிகிறது காற்று.
வழமைபோல்
ஒளிர்ந்து மலர்கிறது பகல்.
வளங்கள் பெருகி Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

வியப்பு

கடல், ஆழி, சமுத்திரத்தை
தன் உள்ளங் கைகளுக்குள்
பிடித்திருக்கும் பூமி!
விரல்களெனக் கண்டம் ஐந்து!
விரல்களின் இடுக்குகளில் விழுந்து
நீர் ஒழுகாமல் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மரண வலை?

மீண்டும் அயலில் விழுந்ததா மரணவலை?
நீண்ட தனிமை
நிதான ஒடுக்கங்கள்
தாண்டிப் பழையபடி
தன்னிசையை மீட்க…அன்று
நரம்பறுந்த யாழ்…நரம்பைச் சீர்செய்து Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

நீளும் இடைவெளிகள்

இடைவெளி பெருகிடுது…
எதை எவர்தான் தீண்டினாலும்
தொடலாம் மரணம்….கை தூர விலகிடுது!
யார்மேல் யார் பட்டாலும்
தொற்று நீக்கி தெளித்து
பேதமின்றிக் கைகூப்பும் பெருமை Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

அவதிப் புள்ளி

பாவத்தின் கூலி மரணமென நீ சொன்னாய்!
பாவத்தின் கூலி மரணம்
எனும் மறைநூலும்!
பாவங்கள் செய்யாதோர் பாரினிலே யாருண்டு?
பாவங்கள் யாவுக்கும்
மரணமா பதிலிங்கு? Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

அமுதன்

அமுதம் இருக்கிறது….
அதை நீ மலமென்றாய்!
அமுதம் அரிதான பொருள்;
எவரெவர்க்கும்
அமுதம் பெரிதான அருள்;
ஆம் அயலுயிர்க்கு Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

இருளைச் சுடும் ஒளி

தீமை இருள் துரத்தி – பல
தீப வரிசை நிரலைப் பரப்பி…நற்
சாம ம் வரை கொழுத்தி – ஒளி
சாலைகள் வீடுகள் எங்கும் சுவறி..ஓர்
கோலம் இட அடுக்கி – மனம்
குளிரும் வரை திருக் கார்த்திகை நாளிலே Continue reading →

Posted in நிகழ்வுகள் | Leave a comment

புயற் ‘புரவி’

எங்கிருந்து வந்தது இவ்வளவு மாரி?
எங்கிருந்து வந்தது இந்தளவு வெள்ளம்?
எங்கிருந்து வந்தது இந்தக் கொடுஞ்சூறை?
எங்கிருந்து வந்தது இந்தக் குளிர்க் கூதல்? Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

வெல்வோம்

ஏனடா இந்நிலை? இந்த உலகுக்கு
இன்று நோய் சூழ்ந்த வாழ்வு.
எப்படி வந்தது? எப்பழி தந்தது?
எங்கும் இறப்பின் சூழ்வு.
வான்புகழ் கொண்ட நம் வாசலைப் பூட்டிற்று
மற்றோனைத் தீண்டின் தொற்று Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மீட்டெடு

தேசம் அன்றைக்கு தீயிடை வீழ்ந்தது.
திக்கு எட்டைத் தீ தின்று குடித்தது.
வாசம் வீசும் மலர் தென்றல் இரத்தத்தின்
வாடை கொண்டெழக் குண்டுகள் பிய்த்தது.
மோசம் போனவர் இலட்சம்…ஈற்றினில்
முடிந்து மாண்டது மானுடத்தின் கொற்றம். Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

சூரர் காதை

பாவமென்பதை யாருரைத்தனர்?
பாவம் கோடி நீ செய்தனை!
பண்பு என்பதை யாவர் சொல்லினர்?
பாதகங்கள் நீ பண்ணினை!
தேவை தீர்த்திட யாது செய்யினும்
தெய்வம் என்சொலும் என்றனை! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

ஏன்

பொய்கள் உரைப்போரே அஞ்சாமற் போகையிலே
மெய்யை உரைக்க ஏன்
மெய், அஞ்சித் துஞ்சவேண்டும்?
பொய்யன் திமிரோடு புவியிற் திரிகையிலே
மெய்யன் ஏன் அஞ்சி அடங்கி
ஒடுங்கவேண்டும்? Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

எது மிஞ்சும்

ஆயிரம் ஓவியம் ஆண்டவன் தீட்டிட
அற்புதத்தால் சுழல் பூமி
ஆயினும் சாவதும் அண்டிடும் நோய்களும்
ஆழுதேன் துன்பமும் சாமி?
காய்களும் வெம்பல் கனிகளும் காலத்தின்
கைகளுள் சிக்குதே காண் நீ Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

காத்துக் கிடக்கின்றேன்

கனவென்ற அன்னை நனவென்ற தந்தை
கலந்தாட வந்த சிறுவாழ்வு
கதையாகு மாமோ கவியாகு மாமோ
கதி என்ன நாளை? பதில்கூறு!
மனமென்ற மாயம் மடைதாண்டி ஓடும்
வழி தேடிப் போகத் தெரியாது Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment