வேட்டை

வாளை எடுத்து நல் வேதியர் –முன்னே 
வந்து கம்பீரங்கள் காட்டிட –திரு 
வேல்கள் பிடித்து நிரையென –பலர் 
வீறுடன் தோன்றித் தொடர்ந்திட –கொம்பு 
பேரிகை ஆர்க்க Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தேரோட்டம்

தேரசைந்து வாற நேரம் திசைகள் வேர்த்திடும் –நம்மைத் 
தேடி ‘ஆறு முகர்’ கிளம்ப ஆன்ம அதிர்வெழும்.
ஊர் உலகம் கூடி நல்லை வீதியில் விழும் –தேரும் 
ஓட…கற்களாக எங்கள் இடர்கள் பொடிபடும்!

Continue reading
Posted in கவிதைகள் | Leave a comment

பிழைபோக்கி அணை

அருளூட்டி அரசாளும் தேவன் –ஞான
அழகூறும் தமிழ் மண்ணின் சீலன்
பொருளோடு புகழ் கூட்டும் பாலன் –நாளும்
புதுமைகள் தரும் நல்லை வேலன்!
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கரையேற்றும் கரம்

திருநல்லை தனில் வேலன் கொடியாடுதே –நான்கு
திருக்கோபுரங்களிலே அருளூறுதே
வரலாறு வளமைபோல் கொடியேற்றுதே –நல்லை
வடிவேலெம் மரபுக்கு முடிசூட்டுதே!
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நம் விழா

எல்லை அற்ற நல்லருள் சுரப்பவா
ஈடிலாப் பெரும் அன்பு கொண்டவா
தொல்லை சூழ்ந்திடும் போத ரூபமாய்த்
தோன்றி…அன்னதின் சென்னி கொய்பவா!
செல்லம் தாறவா, செல்வம் தாறவா
செந்தமிழ்க் கக லாத காவலா
நல்லை வாழ்ந்திடும் நாயகா…உனை
நம்பி நிற்கிறோம்…உய்ய வையடா! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஓரவிழிப் பார்வை ஒன்றுக்காய்….

தேரடியில் வில்வமர நிழலில் ஆறினோம் –வள்ளி
தெய்வயானை யோடு வருவாயா தேடினோம்!
ஊரடங்கி விட்ட பின்னர் ….நல்லை வாசலில் –வந்துன்
-னோடு பேசக் காத்திருந்தே வாடி…ஓடினோம்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உயிர்கள் உன் விழிப் பார்வைக் கேங்குது !

கால காலமாய் வாழு கின்றவா!
காற்று மூச்சையும் ஆளுகின்றவா!
கோல மாமயில் ஏறி… எண் திசைக்
குற்றப் பாம்புகள் கொல்லுகின்றவா!
வேல் தரித்தவா! சூர…மும்மலம்
வீழ்த்தி நெஞ்செலாம் சாந்தி சேர்ப்பவா!
‘நாலரைக்’ கெழுந்தூர் மனங்களில்
ஞான மூட்டிடும்….நல்லை வேலவா! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தெய்வீகக் காலை

‘நாலரைக்கு’ நல்லூரின் மணியின் நாதம்
நாற்திசையைத் துயிலெழுப்பும்! சேவல் கூட
பாடும் ‘பள்ளி எழுச்சியின்’ தேன் பாடல் கேட்டே
படபடென்று எழுந்து கூவும்! கிழக்கில் மெல்ல
ஊறிவரும் ஒளி…இருளோ டூடல் செய்யும்!
உயிரை …வரும் குளிர் காற்று வருடிச் செல்லும்!
பூசையெழும் …தீபத்தால் மூலஸ் தானம்
பொன்விடிவை அயலுக்குப் பரிசாய் நல்கும்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வெற்றி இரகசியம்

கிடைத்ததை வைத்து வாழத் தெரியாது
கிடைத்ததைக் கொண்டு வாழ்வை விளைக்காது
கிடைத்த நன்மையால் மாற்றம் வளர்க்காது
கிடைக்காத ஒன்று என்றோ ஒருதினம்
கிடைக்கும் கிடைக்கும் என்று நிதம் காத்துக்
கிடந்து…வாழ்க்கையை முற்றாய்த் தொலைத்தெதும்
கிடைத்திடாமலே வாழ்வை முடிக்கிறார்!
கிடைத்ததை வைத்து வாழப் பழகிடார்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஆதிக்கம்

என் முகத்தோ டாழ முடியாது எந்தனுக்கு!
என் விருப்பில் வாழ
இடமில்லை எந்தனுக்கு!
என் பாஷை பேச,
என் உணவை உண்ண,
என்னுடை உடுக்க,
என் இயல்பில் நடக்க,
என் கவியைப் பாட, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சொர்க்கம்

சொர்க்கம் எங்கெனத் தேடி எண் திக்கெலாம்
சுற்றி வந்தாலும் காணக் கிடைக்குமா?
சொர்க்கம் என்பதைக் கற்பனை பண்ணியே
சுழன் றடித்தாலும் சேர்ந்திடக் கூடுமா?
சொர்க்கம் என்பது சௌந்தர்ய லோகம்தான்!
தொட்டுப் பிடிக்க இயலாத தூரம் தான்!
சொர்க்கம் தேடி ..நம் காலடி மண்ணதன்
சுகங்களைத் துய்க்கா திருத்தல் துயரந்தான்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அமைதியின் குறியீடு

காலடி பதிக்கக் கனவல்ல நனவென்று
காற்றின் குளிர்ச்சி 
குளிர்ச்சாரல் தூவிநின்ற 
வேளை …’அமைதி ஞாபகார்த்தப் பூங்காவின்’
வாசலில் எனைக்கிள்ளிப் பாரத்துச்
சிலிர்த்த படி 
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வீடு

காதலின் கீதங்கள் காற்றினில் என்றுமே
காவியம் பாடிட வேண்டும்.
கருணையும் அன்பதும் கட்டிப் பிடித்தெங்கள்
கன்னத்தில் கொஞ்சவும் வேண்டும்.
வாழ்கின்ற காலங்கள் வரையறை கொண்டவை
வாழ்க்கை வரம்; அது மீண்டும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பசி

சிங்கங்கள் மீண்டும் சிலிர்த்தெழுந்து
கர்ச்சித்து
தங்கி…இதுவரையும்
அமைதி தவம் செய்த
குகைவிட்டுக் கோபமுடன்
குமுறி வெளிவந்து Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வரம்

“என்ன வரம் வேண்டும்”
என்றிறைவன் கனவில் வந்தான்!
என்ன வரம் கேட்கலாம் என்று
மிகக் குழம்பி
என்ன பெரிதாகத் தரப்போறான்
எனத் தயங்கி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment