தர்மம்

தருமர் மட்டுமா உலகில் இருக்கிறார்?
சகுனி களாகவே அநேகர் திரிகிறார்!
தருமர் …தருமம் நீதி என நிற்க
சகுனிகள் சூழ்ச்சி செய்தே ஜெயிக்கிறார்!
தருமர் மட்டுமே வாழும் உலகுக்கு
தருமம் சரி; ஆனால் சகுனிகளே மிகப்
பெருமளவில் புழங்கும் உலகினில்
பிழைக்க சூழ்ச்சியும் கற்பதே நல் வழி! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கோடை

ஆறென்னும் பாம்பு அசைந்து நெளிந்தோடித்
தூரக் கடற்புற்றில்
தொலைந்த கடும் கோடை!
பாம்பின் தடம் மட்டும் பார்க்கக் கிடக்குதின்று!
பாம்பின் உரிந்து காய்ந்த Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பகைமையை வீழ்த்தல்

பகைமை என்பது பகைமையால் தீர்ந்ததாய்
பாரில் சம்பவம் சரிதம் எதுமில்லை.
பகையை மேலும் பகைத்து வளர்ப்பதால்
பாவம் பழி மிகும்; யாரும் உணரலை!
பகையுணர்வு சிறு பொறி யாகவே
பதுங்கினும்…ஐயம் கோபமாம் காற்றுகள்
புகையை மூட்டி எரித்துப் பொசுக்குமாம்!
போரைத் தூண்டுமாம், சாவைப் படைக்குமாம்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தட்டுப் பாடு

எப்போ வரும் போகும்?
என்று தோன்றும் மறையும்?
எப்போ உறங்கும்?
எப்போ விழித்தெழும்பும்?
என்று எவரறிவார்?
போர்நாளில் திடீரென்று
மண்ணெண்ணை, பெற்றோல், சவர்க்காரம், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

புன்னகைக் கேங்குதே மண்ணும்

சரித்திரம் சென்று சாம்பலாய் அன்று
தாண்டு கரைந்தது கடலில்.
தலைமுறை ஒன்று தலை, விலை தந்து
தவறிற்று வாய்க்காலின் கரையில்.
பெரும்துயர் நனவு பிய்த்த…எம் கனவு
பேச வார்த்தை அற்ற நிலையில்
பிணி நிதம் சூழ பிளவுகள் கூட
பிழைக்குமா தப்பி இன் றுலகில்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மனிதனாய் வாழ்தல்

மண்ணிலே மாணிக்க மாமலை போல நீ
மாண்புகள் காணலாம் மனிதா
வானமும் வையமும் வாழ்த்திட…வானவர்
மாலையும் சூடலாம் மனிதா
எண்ணிய யாவையும் எய்திடும் மேன் நிலை
எட்டலாம் நீயடா…மனிதா
என்றாலும் மனிதனாய் என்று நீ வாழ்கிறாய்
என்பதே வென்றிடும் மனிதா! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இரவின் பிடியில்

கருமை நிறவானாம்
தீப்பெட்டிச் சுவரின்
மருந்தில்…விண் கற்கள்
தீக்குச்சிகளாய் வழுக்கி
உரச…அவை எரிந்து ஒளிகொடுத்துச்
சாம்பலாகும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

புதுக்கவி

“ஆடத் தெரியாதோன்…..
மேடை சரி யில்லை”யென்ற
வேடிக்கை தாண்டி
விவகாரமாய் நின்ற
ஆடத் தெரியாதோன்…. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

செய்வது ஏன் துரோகம்?

வீசி நுரை வீசி அலை மூசி விளையாடும்.
வீடுவரை தேடிவரும் தென்றல் சுகம் கேட்கும்.
ஓசை கடலோசையுடன் மீன்களது பாட்டும்
ஓடங்களின் கானங்களும் கூடும்…சுதி சேரும்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தழைப்போம் ஒருநாள்

வெடிகள் அதிர்ந்தாலும் இடிகள் விழுந்தாலும்
விடிவின் ஒளிக்கீற்றைக் கண்டோம் –ஒரு
விடியல்… இருள்சூழ்ந்த பொழுது கனவோடு
விழிகள் குருடாகி வெந்தோம் !
அடிகள் விழும் மேலும் கொடிகள் அறும்…மீள
அருள துணையின்றி நொந்தோம் –முழு
அழகு தொலைந்தின்று அடிமைச் சுகம் கண்டு
அசந்து துயில் கொள்ளு கின்றோம் ! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஏன் தொடருதெங்கள் நிலச் சோகம்?

ஈரவிழி ஓரம் ஏறுதொரு சோகம்
ஏன் துடைக்க யாருமில்லை பாரு?
ஏங்கிவிழும் போதும் எண்ணி அழும் போதும்
ஏன் அணைக்க தோள்களில்லை கூறு?
பாரமனம் தன்னை பார்த்து சுமைதாங்க Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தணிப்பு

நெருப்பே வெக்கையிலே நீறும்
இக் கோடையிலே….
மர நிழலும் எரிந்து கருகுகிற வேளையிலே…
சூரியனும் புவிவெப்பம் சுட்டு
நடுங்கையிலே… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அறம்

வண்ணத்துப் பூச்சியொன்று
சிலந்தி வலை சிக்கி
“என்னென் றிதிலிருந்து எழுந்து மீளத் தப்புவது”
என்று சிறகடித்து அடித்து
வலைநூலை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நாளையை நம்பு

எங்கும் அடிதடி எங்கும் கொலைவெறி
எங்குஞ் சண்டித்தனம் ஆச்சு –யார்….அம்
பெய்த விழுதெங்கள் மூச்சு? –அட
தங்கு தடையின்றி தாயின் தமிழ் வென்ற
சாலைகளில் வாளின் வெட்டு —தினம்
சாகும் இனம் வதை பட்டு! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வெளிச்சம்

கருவி பிழைவிடாது கடைசிவரை
என உரைத்து
கரங்கள்தான் பிழையை விட்டு இருக்கவேணும்…
பொறுக்கிய போதல்ல
அனுப்பிய போதென்று…அவ் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment