செய் பிழை

காலம் கடத்தி ஆற்றவேண்டிய கடமை
காலம் கடத்தியே
ஆற்றப் படல் வேண்டும்!
காலம் கடத்தாது ஆற்றவேண்டிய கடமை
காலம் கடத்தாதே
ஆற்றப் படல் வேண்டும்! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

கனவாக ஏன் கலைந்தாய்?

தீயணைக்கச் சென்றவனே….
சா அணைக்க ஏன் சரிந்தாய்?
தீ அணைந்திருக்கும் அங்கு;
தீப்பிடித்து.. எம் நெஞ்சு!
நீ அணைத்த தீயாலே நிஜம்
தப்பிப் பிழைத்ததன்று! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

வேசம்

அகத்திலே… எனைவீழ்த்த அம்புகளைக்
கூர்தீட்டி,
அகத்திலே… எனைச் சாய்க்க
அரிய வியூகம் ஆக்கி,
அகத்திலே…
எனைப்புதைக்க ஆசைக் கிடங்குவெட்டி, Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

கவி அறிக!

கவிதை என்பது கசிந்து உருகியும்,
கவிதை என்பது கட்டி இறுக்கியும்,
கவிதை என்பது கொஞ்சிக் குலாவியும்,
கவிதை என்பது கெஞ்சி அளாவியும்,
கவிதை கண்ணீர் சிந்த இழக்கியும்,
கவிதை கிச்சுக் கிச்சுக்கள் மூட்டியும், Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

சுயமழிப்பு

பகலைப் பகலாய் இருக்க விடாது …கரு
முகில்கள்;
பகலின் முகத்தை அவைமறைக்கும்!
இரவை இரவாய் இருக்க விடாது…ராவில்
எரியும் விளக்குகள்;
இரவியல்பெழில் சிதைக்கும்! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

தாகம்

சாவுக்கும் வாழ்வுக்கும் சாட்சியாய்
நின்ற நம்
வீதியோரப் பனைகளை
விசிறியாக்கிப் போம்…காற்று
தேன் நக்கித் தாகம் ஆற்றும்
திக்கிலுள்ள பூக்களிலே! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

தாய்மை

எத்தனை இடர்களை எவரெவர் புரிந்தாலும்,
எத்தனை துன்பத்தை இற்றைவரை
மனுக்குலத்தோர்
செய்து அழித்தாலும்,
சிதைத்து முடித்தாலும்,
வையத் துயிர் உடலை வாட்டி வறுத்தாலும், Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

பிடி

நெகிழ்ந்த கயிறுகள் நின்று
மீண்டும் இறுகி
அகத்தைப் புறத்தை
அழுத்தத் தொடங்கியதால்…
அசைக்க முடியாமல் அலறி ஓயும்
கை கால்கள். Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on பிடி

ஊர் இதம்

வண்ணமயில் தோகை விரித்தாடுகிற போது
வாய்திறந்து சந்த கவி பாடுகிற போது
என் மனது விண் படியில் ஏறுகிற போது
இன்பமெழும்… ஆம் இதற்கு ஈடு இணை ஏது? Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on ஊர் இதம்

சிரஞ்சீவி

சாமி உறங்கியதாய்…
சாமி மயங்கியதாய்…
சாமி உயிர்விட்டுச் சமாதியாய்ப்
போனதுவாய்…
ஏதும் குறிப்பில்லை எங்கும்!
அது நிஷ்டை Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மீண்டென்றெம் வாழ்வு வாய்க்கும்?

காலங்கள் மாறிடும் கோலங்கள் மாறிடும்
கனவுகள் மாறி உதிரும்
கண்களின் காட்சியும் கவிதையின் கோணமும்
கருத்ததும் மாறி அதிரும்
ஞாலத்தின் வாழ்வியல் மாறிடும் …நீதியும்
ஞாயமும் மாறி மறுகும் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

நல்லதே நடக்கட்டும்!

பொய்யாய்ப் பழங்கதையாய்
போனதெல்லாம் போகட்டும்!
மெய்யை வருத்தி,
மேனியெல்லாம் புண் பெருக்கி,
உள்ளத்தில் ஆறா ஒருகோடி காயங்கள்
அள்ளி அடுக்கி, Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மீட்பது எப்போ?

கண்ணுக்குத் தெரியாக் கறுமக் கிருமிகளை
மண்ணுக் கனுப்பி
தனது அதிருப்தியையும்
வெறுப்பையும் மறுப்பையும் வெளிப்படுத்தி
இந்நாளில்
திரும்பிடுது தன் இயல்புத் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மூச்சைத் தேடி

நாதி யற்றவர் ஆனோர் …நிலத்தினில்
நாளை என்பதை யாரின் துணையொடெவ்
வீதி யாலே கடந்திடுவோம் …?அமர்
விபத்தில் சிக்கி முடவர் குருடராய்
வேதனை சுமந்தா நிதம் யாசகம்
வேண்டி வாழுவோம்? நாமித் திசையதன் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

உழவு?

உழப்பட்டுத் துடிக்கிறது உயிர்ப்பாய்க்
கிடந்த வயல்!
உழவு வயலுக்கு
ஒன்றும் புதிதல்ல…
உழவன், உரிமையாளன்,
உழும் ஏர், விதை நெல்,
கலப்பை, சிறுபோகம்,
காலமழை, பெரும்போகம்,
விளைவு, Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment