தொலைத்த வாழ்வு!

கலப்படமில்லாக் காற்று,
கலப்படமில்லாக் குடிநீர்,
கலப்படமில்லாப் பொருட்கள்,
கலப்படமில்லா உணவு,
கலப்படமில்லா இயல்பு,
கலப்படமில்லா ஆற்றல்,
கலப்படமில்லா உணர்வு,
கலப்படமில்லா வாழ்வு,
கலப்படமில்லாக் கலைகள்,
கலப்படமில்லாக் கவிதை,
யாவையையும்…. இன்று Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

சுக வாழ்வு

வீட்டைவிட்டு எப்போ வெளிச்சென்று
வந்தபோதும்,
காலை மதியம் மாலையிலும்,
வீட்டு முன்முற்றம்
கிணற்றடியில் கால்முகம் கழுவித்
துடைத்துமீண்டு; Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

சென்று கழிந்தவை?

ஆயுள் ரேகைகள் நீண்டு வளர்ந்திட்ட
அழகுக் கை பல அன்று சிதைந்தன.
ஆயுசு நூறு என்றொரு சாத்திரம்
அளந்த மெய்களும் தானே சிதறின.
காவல் நூல்கள், தாயத்துக் கட்டிய
கவிதைகள் கூடக் காணாமற் போயின.
கோவில் கடவுளே தஞ்சம் என நம்பிக்
குனிந்த குடி(ல்)களும் கூட நீறாகின! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

அப்பா(கா)விகள்

குண்டுகளைக் காவிக் கொடிய
சமர்க்களத்தில்
சென்று
மனித வெடிகளாகிச் சிதைந்து
அந்த இடமழித்த அநேககதை இங்குண்டு!
இந்தமுறை குண்டுகள் இல்லை
கண்காணாச் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

நேர்த்தி

தவழ்ந்து… நடந்து… இன்று
தானாய் வேகம் எடுத்து
எவரையும் கணக்கெடாது இங்கும்
ஓடத் தொடங்குது நோய்!
தனிமைச் சிறைக்கதவு ஏன் திறந்த
தெனும் தர்க்கம்
கனவில்; Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

கடன்

யாரையும் குறைசொல்லத் தேவையில்லை!
நாமெலோரும்
யாரிலும் குறைகளைக் கண்டும் பயனில்லை!
உச்ச அழிவுற்ற உயர்நாட்டில்
எவ்வாறு
அச்சம் கொள வைத்து
மடங்கில் அடுக்குகளில்
தொற்றிற்றோ இந்தத் துயரம்…. Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

இன்றும் நாளையும்

மரணத்தின் தூதுவர்கள்
வழமைபோல் அல்லாமல்
திரிகின்றார் ஓய்வொழிச்சல் இன்றி
திசையெட்டும்!
மேலதிக நேர வேலைசெய்து
அவர் உழைக்க,
காலனும் கண்ணுறக்கம் இன்றிக்
கடன் செய …முச் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

நன்றே நடக்கவேணும்!

காட்டுத்தீ கருக்கிற்று கனவினது காற்பங்கை!
நேற்றுவந்த நோய்த்துயரம்
நீறவைக்கும் அரைப்பங்கை!
“இயற்கைக்கு மீள்வோம் எல்லோரும் ”
எனநனவில்
தயங்கி விதையூன்றி … Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மீட்பு

தங்குதற்கு மட்டுமல்ல வாழுதற்கும்
வீடுகள்தாம்
சங்கையான இடங்களெனச்
சகலரும் உணர்ந்தார்கள்!
வீடுகளுள் உறைந்து பல வித்தை புரிந்தார்கள்!
ஆடு மாடு கோழிகளை
அரவணைத்துக் கொண்டார்கள்!
ஓய்வை எடுத்தார்கள்! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

இறைவரை கண்டோம் நேரில்!

 

தெய்வங்கள் தம்மை நேரில்
திசைகளில் கண்டோர் இல்லை!
தெய்வங்கள் சிலையாய் நிற்கும்;
செயற்படும் அழகைப் பார்த்து
உய்தவர் இல்லை! நஞ்சைத்
தான் உண்டு உலகைக் காத்த
செய்தியைச் சிவனில் கேட்டோம்….
செய்ததைக் கண்ட தில்லை!

Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

புதுமை ஆண்டு

புதிய தானதோர் ஆண்டு மலர்ந்தது!
புதுமை இம்முறை….யாரும் எவர்களும்
புதிதுடுத்து உயிர்த்து திருத்தலம்
போய்…அறுசுவை உண்டு சிலிர்த்திடும்
கதைகள் இல்லாது வீட்டில் இருந்துயிர்
களித்து குடும்பத்தி னோடு கதைத்துண்டு
அதிலும் இன்புறும் ஆண்டு; ‘கொரோனாவால்’
ஆடம் பரமற்றுப் பிறந்த புத்தாண்டிது! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

சத்தியம் வாழும் வரை

கண்களில் தெரியட்டும் கனவதன் எல்லை.
கைகளில் கனியட்டும் வாழ்கையின் காய்கள்.
புண்களும் ஆறிடும் பொழுதுகள் தோன்றும்.
பூ இனம் நாளையும் பூத்திடும் பாரும்.
எண்ணில் நரர்…கணம் அழுதிடும் போதும்
இதயத் துடிப்பூமை ஆகுமா தேறும்?
வண்ணம் வெளுக்காது வரும் தினம் வானம்…
வல்லமை வீழ்ந்திடா துயிர் பெறு நீயும்! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

அநாதை உலகு

அநாதையாச்சு வானம். அநாதையாச்சு முகில்கள்.
அநாதையாச்சு காற்று.
அநாதையாச்சு வெய்யில்.
அநாதையாச்சு கதிரும். அநாதையாச்சு நிலவும்.
அநாதையாச்சு கடலும். அநாதையாச்சு கரையும்.
தனிமைப் படுத்தல் …சுய
தனிமைப் படுத்தலென
மனிதர்… சகமனிதர் உடன் தானும் சகஜமாக
உரையாடக் கூட உதவாதோர்
எனப் பழித்துக்
கொரோனா சபிக்க; Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

அஞ்சுதல் அஞ்சாமை பேதமை!

ஏனின்னும் நாங்கள் எதிலும் அலட்சியமாய்,
ஏனின்னும் நாங்கள்
எதிலும் அசட்டையாய்,
ஏனின்னும் நாங்கள் எதையும் புரியாது,
ஏனின்னும் நாங்கள் எதற்கும் பயப்படாது,
அஞ்சுதல் அஞ்சாமை பேதமை
என் றறியாது,
கெஞ்சி…’விளங்கியவர்’ கேட்க
செவிகொடாது, Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

உலகு உணர்ந்ததெதை?

விண்ணிலும் மண்ணிலும் விரிந்த கடல்களிலும்
நின்ற கபாட நெடுங் கதவம்
எல்லாமும்
ஒவ்வொன்றாய் மூடப் பட
முகத்தைத் தத்தமது
ஒவ்வொரு எல்லைகளின் உள்ளும்
வளை எலிகள் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment