Archive for the ‘கவிதைகள்’ Category

பேதம்

எத்தனையோ பேதம்
எத்தனையோ பிரிவுகளால்
நித்தம் அடிபட்டு நிலைகுலையும் எம்குலத்தில்
ஊசியாலும் வந்திடுமோ
அடுத்த உயர்வு தாழ்வு?
ஊசியிட்டோர் ஓர் பிரிவு, Read the rest of this entry »

என்று வென்று வாழுவோம்?

கோடி செல்வ முத்தினில் குளித்தெழுந்த துன்பெயர்.
கூடி நட்பு உறவு சூழ கொஞ்சி நின்றதுன் புகழ்.
வாடிடாத தோட்டமாய்ச் செழித்ததுன் நனவுகள்.
வந்த நோயில் வெந்து நீயும் போனதேனோ தனிமையில்? Read the rest of this entry »

இயற்கையின் கண்ணீர்

கப்பல்களின் சுக்கான்கள்
ஏர்களென உழ…கடலில்
உப்பும் பலகோடி உயிர்களும் நிதம் விளையும்!
கடலின் படைகள் அலைகள் காண்;
அவை நிரையாய்
அடுத்தடுத்துத் தாவி Read the rest of this entry »

மீண்டென்றெம் வாழ்வு வாய்க்கும்?

காலங்கள் மாறிடும் கோலங்கள் மாறிடும்
கனவுகள் மாறி உதிரும்
கண்களின் காட்சியும் கவிதையின் கோணமும்
கருத்ததும் மாறி அதிரும்
ஞாலத்தின் வாழ்வியல் மாறிடும் …நீதியும்
ஞாயமும் மாறி மறுகும் Read the rest of this entry »

என்றுதான் மாறும் எம் விதி?

ஒருகோடி துன்பங்கள் தருகின்ற காலத்திற்-
குண்மையாய் இரக்க மிலையா?
உயிரதும் இதயத்தில் உருக்கமும் கருணையும்
உளத்தில் ஈரமுமில்லையா?
தருகின்ற துன்பங்கள் தம்மையோர் இடைவெளி
தனில் தரும் குணமுமிலையா? Read the rest of this entry »

என்ன செய்யப் போகிறோம்?

காலகாலமாக நம்மைக் காத்திருந்த தெய்வமும்
கையை விட்டகன்றதெங்கு? மாய்கிறோமே நித்தமும்.
ஆலகாலம் உண்டு அன்று அன்பர்உயிர் மீட்டதும்
அற்புதம் புரிந்ததும் மறந்ததேன்…அதன் மனம்? Read the rest of this entry »

எப்படித்தான் கிளைக்கும்?

மரணத்தின் தூதுவர்கள் வருகின்றார் மிக அருகில்!
எருமைகளில் அல்ல
எவரின் கண்ணும் காணாக்
கிருமிகளில் ஏறிக் கிளைக்கின்றார்
திசை திக்கில்!
எமனெறியும் பாசக் கயிறு Read the rest of this entry »

வாழும் வழி செய்வோம்!

நாளை எதுதான் நடக்கும்?
எனத்தெரியாக்
காலம்.
நோயும்,கவலை, துயர், சாவும்,
யாவரிலும் தொற்றும்,
தனிப்படுத்தல் சிகிச்சைகளும், Read the rest of this entry »

எழு மனிதா!

விதி என வாழ்ந்திடும் வில்லங்க வாழ்க்கையை
விட்டின்று வெளியில் வா மனிதா!
மேவியே…சாத்திரம் வெற்றி நல்காது நின்
வேர்வையை நம்படா மனிதா!
சதிபுரி காலமும் தடையிடும் துன்பமும்
தாண்டி நீ கால்பதி மனிதா! Read the rest of this entry »

தங்கப் பொழுது

கண்களில் கோடி கனவு மிதக்கக்
களித்தது அந்நாளே -எங்கள்
காதல் மடியினில் கன்றுகளாகக்
கலந்தது அந்நாளே -புதுப்
பண்வகை பாடி பல விளையாட்டுப்
பயின்றது அந்நாளே -உயிர்ப் Read the rest of this entry »

காலக் குரல்

காலத்தி னுக்குக் கருணை சிறிதுமில்லை!
வேத நிபுணனையும்,
வீர மறவனையும்,
கோடி திருவின் மேல் குடியிருக்கும்
குபேரனையும்,
ஆளும் அரசனையும், Read the rest of this entry »

எம்மை இன்றேன் கதறவைத்தாய்?

“எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டான்”
எப்படி நடந்ததிது?
இது போகும் வயதல்ல!
இருக்கும் இடமெல்லாம் எமைச்சிரிக்க
வைத்தவனே!
மருந்தாய்ச் சிரிப்பருளி Read the rest of this entry »

மனிதம் என்று மீள்வது?

இப்படியோர் காலம் மீண்டும் எழுந்ததிங்கு!
துப்பாக்கி பூபாளம் பாடிய
துயர் நாளில்
கூடித் திடீரென்று குண்டுவிழும்.
வேட்டதிரும்.
சாவரக்கன் ஆட Read the rest of this entry »

எம் மண் இதம்

காற்றினில் ஏறியே கவிதைகள் சொன்னோம்.
கடலதன் ஆழமும் நீளமும் கண்டோம்.
ஊற்றுநீர்ச் சுவையில் அமுதம் உருசித்தோம்.
ஊர் வயல் வெளியிலும் உயிரைத் தொலைத்தோம்.
சேற்றிலும் செல்வம் செழிப்ப தறிந்தோம்.
திசையெலாம் சொர்க்கம் சிரிப்ப துணர்ந்தோம். Read the rest of this entry »

மகிழ்வு?

நிலவின் ஒளியில் நெடுநேரம் குளித்து
அழகிரவு நனையும்
அகாலப் பொழுது இது!
பாலால் அபிஷேகப் பாணியிலே
பெளர்ணமியின்
பாலில் அயலும் பரவசமாய் முழுகிடுது! Read the rest of this entry »

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 113068Total reads:
  • 82803Total visitors:
  • 0Visitors currently online:
?>