கோடை

ஆறென்னும் பாம்பு அசைந்து நெளிந்தோடித்
தூரக் கடற்புற்றில்
தொலைந்த கடும் கோடை!
பாம்பின் தடம் மட்டும் பார்க்கக் கிடக்குதின்று!
பாம்பின் உரிந்து காய்ந்த
பழஞ் செட்டை போல் கரைகள்!
பாம்போடிப் போன பயணத் தடத்திருந்து
வீம்புக்கு மண்ணள்ளி
விற்கும் அதிகாரம்!
ஆறென்னும் பாம்பு அகன்ற
தடக்…கரைக்
கோரைகளும் பொசுங்கிற்று
கொழுந்துவிடும் வெயிலில்!
ஆறெங்கே என்று அலைந்து
தாகம் தணிப்பதற்கு
தேடிவரும் காற்றும் செந் நாரைகளும்
திகைத்தகல,
வேடம் புனைந்து ஆற்றுப் பாம்பாய்
வெறும் கயிறாம்
கானல் நீர்ப் பாம்பு….
கால்நனைக்க விடாய் தீர்க்கத்
தேடி வருவோரை
திகைக்கவைத்து ஏய்க்கிறது!
பழஞ் செட்டை போல் கரைகள்!
பாம்போடிப் போன பயணத் தடத்திருந்து
வீம்புக்கு மண்ணள்ளி
விற்கும் அதிகாரம்!
ஆறென்னும் பாம்பு அகன்ற
தடக்…கரைக்
கோரைகளும் பொசுங்கிற்று
கொழுந்துவிடும் வெயிலில்!
ஆறெங்கே என்று அலைந்து
தாகம் தணிப்பதற்கு
தேடிவரும் காற்றும் செந் நாரைகளும்
திகைத்தகல,
வேடம் புனைந்து ஆற்றுப் பாம்பாய்
வெறும் கயிறாம்
கானல் நீர்ப் பாம்பு….
கால்நனைக்க விடாய் தீர்க்கத்
தேடி வருவோரை
திகைக்கவைத்து ஏய்க்கிறது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply