யாமறிவோம்

எங்களுக்குத் தெரியும் எதைச் செய்ய வேணுமென்று!
எங்களுக்குத் தெரியும் 
எதுசெய்தால் தவறென்று!
உங்களது கட்டளையை,
உங்களது வேண்டுகோளை ,
உங்களது ஆதரவை,
உங்கள் புறக்கணிப்பை,
உங்கள் உடன்பாட்டை,
உங்கள் மறுதலிப்பை,
உங்கள் பகை உறவை,
உம் விருப்பு வெறுப்பை,
உம் இலாப நட்டத்தை,
உம் வெற்றி தோல்விகளை,
எம்மீது திணிக்காதீர்!
எமக்கேதும் விளங்காது 
என்றா நினைக்கின்றீர்!
எதும் புரியா மடையர் நாம் 
என்றா கருதுகிறீர்?
நிஜம் உணராத் தற்குறிகள் 
என்றா எடைபோட்டீர்?
சொல்புத்திக் காரர் நாம் 
என்றா முடிவெடுத்தீர்?
சுய புத்தியோடுதான் 
நாங்கள் இருக்கின்றோம்!
நேற்று இன்று நாளை பற்றி 
நாங்கள் தெளிவு கொண்டோம்!
சரி பிழைகள் நன்மை தீமை 
நாமும் அறிவோம்!
நாம் சுயமாய் முடிவுசெய்வோம்!
என்னநீர் சொன்னாலும் சொல்லாமல் 
விட்டாலும் 
என்செய்ய வேணுமென்று யாமறிவோம்;
அதைச்செய்வோம்!

Leave a Reply

You must be logged in to post a comment.

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 6This post:
  • 77022Total reads:
  • 56353Total visitors:
  • 0Visitors currently online:
?>