Category Archives: கவிதைகள்

நம்பிக்கை

கால்கள் இன்றைக்கும் ஓய்ந்திட வில்லையே. கைகள் இன்றும் களைத்ததும் இல்லையே. வாய்கள் ஊமையாய்ப் போனது இல்லையே. மனங்கள் என்றும் மயங்கிய தில்லையே. தாகம், பசி, நோ, தணியாத போதிலும் தவிப்பின் ஏக்கம் அடங்கிட வில்லையே.

Posted in கவிதைகள் | Leave a comment

கண்ணீர்க் குமுறல்

கண்ணீர்த் துளி சிறிது. கடல் கோடி தரம் பெரிது. என்றாலும் உங்கள் ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் ஒன்றல்ல இரண்டல்ல ஒரு நூறு துயர்க்கடலைக்

Posted in கவிதைகள் | Leave a comment

துயில்

மூன்றாம் பிறையினது மூலைகளில் கயிறிணைத்துத் தூளிகட்டி உன்னைத் துயிலவைக்க நான் நினைக்க… மூன்றாம் பிறையே முழுத்தூளி என என்னை

Posted in கவிதைகள் | Leave a comment

மாற்றம்

திடீரென்று காற்று திசையினை மாற்றிற்று! அடித்திங்கு நின்றகாற்று அப்பக்கம் போயிற்று! என்ன குழப்பம்? எம்மீது ஏன் கோபம்? என்னதான் காரணம்?

Posted in கவிதைகள் | Leave a comment

இரவு

இரவினது மெளனத்தைக் கலைத்தது பெருமூச்சினோசை. கருமிருளில் புதைந்துளன கணக்கற்ற ஏக்கங்கள். கவியும் குளிரில் களைத்து அடங்கிடுது அவிந்த இதயத்தின் அனல்.

Posted in கவிதைகள் | Leave a comment

தவிர்த்துச் செல்.

எழுதாதே கவிதைகளைத் தினமும் என நீ சொன்னாய். சுவாசிக்க வேண்டாம் நீ தொடர்ந்து எனச் சொன்ன மாதிரி இருந்தது… என் கவியே என் சுவாசம்!

Posted in கவிதைகள் | Leave a comment

பொய்மைகள் என்றுதான் போகும்?

உண்மையாக உழைத்துக் களைப்பவன் உரிமை, ஊதியம், பலன்கள், கவுரவம் என்பவை இன்றி அவமதிக்கப் பட ஏய்த்து மேய்ப்பவன் பொய்வேடம் பூண்பவன் தன் நடிப்பால் உலகை மயக்குவோன் தகுதிகள் அற்றும் தலைவனாய் மாறுவான்!

Posted in கவிதைகள் | Leave a comment

ஞான வழிக் கலங்கரை

நல்லைக் கந்தனின் கோவில் நிழல் இன்று‘நாயன்மார்க்கட்டைத்’ தாண்டியே ‘செம்மணி’எல்லை மட்டும் கவிந்து ஒளிர்ந்தது!எவர்க்கும் தனது இருப்பிடத்தின் திசைசொல்லியே வரவேற்றது! கம்பீரத்தோற்றத்தில் ‘நல்லை வேலாய்’ நிமிர்ந்தது!

Posted in கவிதைகள் | Leave a comment

மாற்றம்?

வெளித்துக் கிடக்கிறது வானம்.கவலையற்றுக்குளிர்ந்து திரிகிறது காற்று.வழமைபோல்ஒளிர்ந்து மலர்கிறது பகல்.வளங்கள் பெருகி

Posted in கவிதைகள் | Leave a comment

வியப்பு

கடல், ஆழி, சமுத்திரத்தைதன் உள்ளங் கைகளுக்குள்பிடித்திருக்கும் பூமி!விரல்களெனக் கண்டம் ஐந்து!விரல்களின் இடுக்குகளில் விழுந்துநீர் ஒழுகாமல்

Posted in கவிதைகள் | Leave a comment

மரண வலை?

மீண்டும் அயலில் விழுந்ததா மரணவலை? நீண்ட தனிமை நிதான ஒடுக்கங்கள் தாண்டிப் பழையபடி தன்னிசையை மீட்க…அன்று நரம்பறுந்த யாழ்…நரம்பைச் சீர்செய்து

Posted in கவிதைகள் | Leave a comment

நீளும் இடைவெளிகள்

இடைவெளி பெருகிடுது… எதை எவர்தான் தீண்டினாலும் தொடலாம் மரணம்….கை தூர விலகிடுது! யார்மேல் யார் பட்டாலும் தொற்று நீக்கி தெளித்து பேதமின்றிக் கைகூப்பும் பெருமை

Posted in கவிதைகள் | Leave a comment

அவதிப் புள்ளி

பாவத்தின் கூலி மரணமென நீ சொன்னாய்! பாவத்தின் கூலி மரணம் எனும் மறைநூலும்! பாவங்கள் செய்யாதோர் பாரினிலே யாருண்டு? பாவங்கள் யாவுக்கும் மரணமா பதிலிங்கு?

Posted in கவிதைகள் | Leave a comment

அமுதன்

அமுதம் இருக்கிறது…. அதை நீ மலமென்றாய்! அமுதம் அரிதான பொருள்; எவரெவர்க்கும் அமுதம் பெரிதான அருள்; ஆம் அயலுயிர்க்கு

Posted in கவிதைகள் | Leave a comment

புயற் ‘புரவி’

எங்கிருந்து வந்தது இவ்வளவு மாரி? எங்கிருந்து வந்தது இந்தளவு வெள்ளம்? எங்கிருந்து வந்தது இந்தக் கொடுஞ்சூறை? எங்கிருந்து வந்தது இந்தக் குளிர்க் கூதல்?

Posted in கவிதைகள் | Leave a comment