Category Archives: கவிதைகள்

குணம்

சூரியன் ஒன்றுதான் . அதன் குணங்கள் என்றும் ஒன்றே! சூரியனின் செயற்பாட்டில் துளியும் வேறு பாடில்லை. சூரியனின் வரவு மறைவில் ஏதும் மாற்றமில்லை!

Posted in கவிதைகள் | Leave a comment

உய்வோம் முருகால் உயர்ந்து

நல்லூரின் நாதன், நமைஇயக்கும் ஞானசக்தி வல்லோன், நினைத்த வரம் தருவோன் –எல்லோரும் ஏற்கும் எழில்நிபுணன், ஈடில் அருள்மழையோன் காற்று நிலம்அவன்தீ காண்!

Posted in கவிதைகள் | Leave a comment

வருஷத்தில் ஒரு வசந்தம்

நல்லூர் கொடியேறின் நாடொளிரும். தீர்த்தமாடி எல்லா முகமும் எழில் சாத்தும். காஞ்சிபுரம் மாறுகரை வேட்டியுடன் நகைநட்டும் படையெடுக்கும். கோவிலடி மின்னிக் கொலுவிருக்க

Posted in கவிதைகள் | Leave a comment

அரசியல்

தவிர்க்க முடியாத சக்தியாய் அரசியலில் தவிர்க்க முடியாத சாதனையாய் வரலாற்றில் இருந்தவரைக் கூட இன்று தவிர்த்துவிட்டு அரசியல் நகர்வதுதான் அரசியல் புரிகிறதா?

Posted in கவிதைகள் | Leave a comment

பண்புடைமை

மரணத்தை விடவுமோர் மாபெரிய தீர்ப்பேது? மரணத்தில் ஒருவர் மரணத்தில் அவர் தவறைச் சுட்டி அவர்புகழைத் தூற்றி இழிவு செய்தும், சற்றுமே நாகரிகம் இல்லாமல் சபைகூட்டி

Posted in கவிதைகள் | Leave a comment

மனிதம்

மனிதர்கள் வாழ்கிறார்கள் மனிதத் தன்மை வாழ்கிறதா அவர்களிடை? பிறந்தோ ரெல்லாம் “புனிதர்கள் தாம்” என்று புசத்திக் கொண்டு பொல்லாங்கே புரிகின்றார் மற்ற வர்க்கு! இனம் சாதி மதம் என்றும் தங்க ளுக்குள் இவன் சிறியோன் அவன் பெரியோன் என்றும் கொண்டு மனங்களில் பேய் வளர்த்து; வெளியே தேவ வகையென்று வாழ்பவரே அநேகர் இன்று!

Posted in கவிதைகள் | Leave a comment

பிரச்சனைத் தெருநாய்

பிரச்சனைத் தெருநாய் பெரிதாய்க் குலைத்துத் துரத்தும் தினம்; நாமும் துணுக்குற்று அது கலைக்க… மருண்டு, இதயம் படபடக்கவே மாய்ந்து, பயந்தோடக் கண்டால்….

Posted in கவிதைகள் | Leave a comment

எல்லாம் அவனே எனக்கு

“ஈழத் தமிழரின் ஈடில் அடையாளம் யாழின் தமிழ்சைவ யௌவனமும் –யாதென்றால் நல்லூர் பெருவிழாவாம்”…நாடுரைக்கும்! அவ்விழாவின் எல்லைக் குவமைவேறு ஏது?

Posted in கவிதைகள் | Leave a comment

வழித்தடம்

வானில் பறவைகளின் வழிமாறிப் போனதில்லை! நீரிலே மீன்களது நிலை, வழி பிழைத்ததில்லை! ஊரும் எறும்புகளை எப்படிக் கலைத்தாலும் பாதை அவை மாறிப்

Posted in கவிதைகள் | Leave a comment

ஏக்கம்

இன்றைக்கும் தோன்றின எலும்புகள் சில…நேற்று மண்டையோடு ஒன்று வந்தது…. இரு துளைகளுடன்! காலெலும்பு விலாவெலும்பு

Posted in கவிதைகள் | Leave a comment

காலக் கணக்கு

எங்கள் செயல்கள் எவையெவையோ அவையவைக்கு எங்கோ வரவு செலவுக் கணக்குக்கள் சற்றும் பிழைக்காமல் பதிவுசெய்யப் படுகிறது!

Posted in கவிதைகள் | Leave a comment

அற்புதங்களுக்காக

அற்புதங்கள் நடக்குமென்று காத்திருந்தோம். அடிக்கடி நாம் எதிர்பார்த்துத் தோற்றுப் போனோம். அற்புதங்கள் அதிசயங்கள் எவையும் நம்மை அணுகவில்லை…

Posted in கவிதைகள் | Leave a comment

கால ஒளி தேடி

இருட்டுள்தான் இருக்கின்றோம் எல்லோரும்; கருவறைபோல் இருட்டுள் தான் இருக்கிறது எவ்விடமும்; காலந்தான் ஒளிமுதலாம் சூரியன்!

Posted in கவிதைகள் | Leave a comment

எட்டா நிலவு

எட்டா நிலவுக்கு இன்னுமின்னும் எத்தனைநாள் கொட்டாவி விட்டுக் குறண்டிக் கிடக்கவுள்ளோம்? தொடுவானம் தாண்டித் தொலைவில்

Posted in கவிதைகள் | Leave a comment

சிந்துமென்றும் ஞானமெனும் தேன்!

வாய்ச்சொல்லில் வீரர்களால் மாயும்… தமிழ் சைவ நோய் தீர்க்க நித்தநித்தம் நோன்பிருக்கும் –‘ஆறு திருமுருகன்’….செல்வர் ‘மனோமோகன்’ சேர்ந்து வரந்தந்தார் உய்ததெங்கள் வாழ்வு!

Posted in கவிதைகள் | Leave a comment