அமுதன்

அமுதம் இருக்கிறது….
அதை நீ மலமென்றாய்!
அமுதம் அரிதான பொருள்;
எவரெவர்க்கும்
அமுதம் பெரிதான அருள்;
ஆம் அயலுயிர்க்கு
சாகா வரமளிக்கும் சத்து;
நிறம் சுவை மணத்தில்
யாவரையும் கவரும் மருந்து;
அதை நீயும்
மலமேதான் என்றால்…”மடையன் நீ”
என்றே தான்
உலகம் சிரிக்கும்!
“அமுது மலமானது காண்”
எனும் உனது செய்தி கேட்டு
எண் திசையும் பரிகசிக்கும்!
கனவினிலும் ‘அமுது மலமாகா தென’ உணர்ந்து
உனை, உன் மனதின் வக்கிரத்தை,
உன்குறையை,
உலகும் தெரியும்!
அமுதுக்கும் மலத்திற்கும்
அடிப்படை வேறுபாட்டை
அறியா நின் தகமையற்ற செயலைக்
கணக்கெடாமல்,
உணரும் ஊர்…உனது இயலாமைப் பதிவுகளை!
உனதுண்மை அற்ற செய்கையை விதி தெளியும்!
அமுதம் யான்…
நீயோ மலமென்றே சொல்கின்றாய்!
அமுதா மலமா யான்?
அயலுரைத்துன் வாயடைக்கும்!!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply