மாற்றம்?

வெளித்துக் கிடக்கிறது வானம்.
கவலையற்றுக்
குளிர்ந்து திரிகிறது காற்று.
வழமைபோல்
ஒளிர்ந்து மலர்கிறது பகல்.
வளங்கள் பெருகி
வழிய அலைகிறது கடல்.
இலை உதிர்வு விட்டு
செழித்துத் துளிர்க்கிறது காடு.
புத்துணர்வில்
குளித்து இசைக்கிறது குயில்கள்.
கருணையினைப்
பொழிந்து உயிர்க்கிறது இயற்கை.
மாற்றமின்றி
குழம்பித் தவிக்கிறது….
குறை களையா நம் வாழ்வு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply