கொடூரர்

பிணங்களைத்தின்கிற
பெரியஅலகுடைய
கழுகுகள்…
காடுகளில்கற்பாறைமலைத்தொடரில்
வாழும்!
தமதுவயிற்றுப்பசிக்கும்…தம்
சுற்றங்கள்குஞ்சுகட்கும்…
தூரப்பறந்துசென்று
வேட்டையிடும்!
எங்கும்விழுந்துபிணம்சடலம்
கிடந்தாலேவட்டமிடும்,
கிள்ளிக்கொண்டேபோகும்!
காணும்சிறுஉயிரைக்காவெடுக்கும்!
அவைகளுக்கும்
குஞ்சுகள்மேல்பாசம்தம்
குடிகள்மேல்நட்புறவு
இருக்கும்தான்!
சுயநலமும்சிறிதுஇருக்கும்தான்!
உறவுகளின்பெறுமதியை
அவையும்உணரும்காண்!
தன்னுணவுதுடிதுடித்துச்சாவதைக்
கணக்கெடாது
தன்சுற்றம்துடிதுடித்தால்
தானும்கலங்கும்தான்!

ஆனால்உறவுபாசமெனப்பாராமல்
தன்தாகம்தன்பசிதணித்தல்,
தன்நலம்காத்தல்,
தான்வாழ்ந்தால்போதுமென்று
தன்சேயைக்கூடவீழ்த்த
அஞ்சாமைஎன்றுஅயலைஉயிரோடு
தின்னத்தயங்காத…
தீட்டியகூர்அலகற்ற
மானிடர்கள்வாழ்கிறார்கள்!
பாவம்பிணம்தின்னும்
கழுகுகள்!
மானுடர்கழுகுகளைவிடக்கொடூரர்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply