ஏற்றவைகள்

எங்களிடம்இருப்பவைவேர்களற்றமரங்களல்ல!
எங்களிடம்இருக்கின்றஎல்லாமும்
இம்மண்ணில்
ஆழவேரூன்றிஅசையா…விருட்சங்கள்!
ஆம்எங்கள்கவிதை,
அபூர்வஇசை, ஓவியங்கள்,
நாடகமும்கூத்தும்நம்பேச்சும்
பாட்டுகளும்,
கல்லில்உலோகத்தில்
காய்ந்தமரம்மண்ணில்
எல்லையிலாநுட்பங்கள்
இயற்றுசிற்பக்கலைமுயல்வும்,
என்னும்…செழித்தவிருட்சங்கள்
அவற்றினெழில்
இன்றைக்குஏற்பஇருந்தாலும்
அதன்வேர்கள்
எங்களதுதொன்மையை, எம்மரபை,
எம்மண்ணின்
பரம்பரைவிருப்பத்தை,
பண்பாட்டின்அடிமுடியை,
ஊடுருவிஅவற்றில்இருந்து
சத்துநீர்உறுஞ்சி
ஆம்எங்கள்மண்ணின்
நிறம்வெக்கைமணம்சுவையின்
ஆழ்ந்தகுணஇயல்பைஅறிந்துணர்ந்து
இன்றைக்கும்
வாழ்ந்துசெழிப்பவை;
மலர்காய்கள்கனிவிதைகள்
நாளும்தருபவை;
அவற்றின்சுவைவாசம்
வேற்றூர்விருட்சத்தில்
விளைந்ததுபோல்இருக்காதே!
நாமெப்பதிவைத்தும், நட்டும்,
ஊர்உலகிலுள்ள
மேலானவைதெரிந்து
‘ஒட்டுக்கள்’ போட்டெடுத்தும்,
எம்மரத்தில்பூத்துக்காயாய்க்
கனிவிதையாய்
எமக்குக்கிடைப்பவைகள்…
எம்மண்ணின்இயல்புகளில்
அமிழ்ந்துமுளைத்தவையே!
அவை‘கலந்துபிறந்து’ வந்து
எமதூரில்வாழ்வதற்குஏற்ப
கூர்ப்படைந்தவையே!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply