அருளாதோதெய்வம்?

பசியென்றபொறிஇன்றுபுகைகின்றது-“நாளை
பலிகேட்கும்அது” என்றகதைவந்தது.
உசிரோடுவிளையாடும்விளையாட்டிது-பாய்ந்து
உயர்கின்றவிலைவாசிசதிசெய்யுது!

இதுபோன்றஇடர், பஞ்சம்சமர்நாளிலும்-வந்து
எமைமாய்த்ததிலை; உள்ளபொருள்செல்வமும்
அதிகாரம்அறத்தேயும்; பணவீக்கமும்-எங்கள்
அபிலாஷைகளைக்கொல்லும்; மனம்ஏங்கிடும்!

“அதுஇல்லைஇதுஇல்லை” கதைநீளுதே-காசு
அதும்அற்பப்பொருளாச்சு; பயம்சூழுதே
உதவாதுவருமானம்; விலைஏறுதே-‘ஏழ்மை’
உயிர்வாழும்சகலர்க்கும்பொதுவாகுதே

எதனாலேஎதனாலேபிழைநேர்ந்ததோ-இங்கு
எவர்செய்தசெயலாலேபழிசூழ்ந்ததோ?
விதிமாற்றிபெருஇலாபம்சிலர்கொண்டரோ-செய்த
வினை…எட்டுத்திசைதிக்கும்அழவைக்குதோ?

நதிமூலம்ரிஷி

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.