தீ அணைப்பு

நெருப்பொன் றெரிவதற்கு…
தகனம் நிகழ்வதற்கு…
‘எரிவதற்கு ஏற்றபொருள்’,
‘எரிபற்று நிலை’, ‘எரியத்
துணையான வாயு’ வேண்டும்!
அமாம்…இவை மூன்றும்
இணையாத போது எந்நெருப்பும் பற்றாது!
பற்றிய நெருப்பு
படர்ந்தெங்கும் பரவாது!
நிற்க…
எரிவதற்கு ஏற்றபொருள் எரியா
நிலையடைந்தால்;
எரிய ஏற்ற வெப்பத்தின்
நிலையான ‘எரிபற்று நிலை’ குறைந்தால்;
எரிதற்கு
உகந்த பொருளோடு ‘பிராண வாயுவின்’ தொடர்பு
தகர்ந்தால்;
தடுக்கவே பட்டால்;
அந்நெருப்பு
அணையும்!
எந்நெருப்பும் அணையும்!!
இதே…தீயை
அணைக்கின்ற நுட்பத்தின்
அடிப்படையும் ஆகும்!
நெஞ்சில்
கனல்கின்ற தீயினது காங்கைகளை
அணைப்பதற்கும்
இதே ‘தீ அணைப்பு நுட்பம்’
எங்கும் அரங்கேறும்!
இதன் அர்த்தம் புரியாமல்
எதார்த்தமோ முட்டி மோதும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.