கனவின் சிறகுகள்

சிறகுகட்டி எங்கெங்கோ சென்று வரும் கனவு!
வெறும் காலால் மட்டும்
இவ்வளவு வேகமாக
வெவ்வேறு திசைகட்கு விரைந்தேக முடியாது!
அவ்வளவு வேகமாக
அடுத்த அடுத்த நொடி
எவ்கெங்கோ சென்று,
எதையெதையோ கண்டு,
அங்கங்கு சம்பவத்தில்
அப்படியே மூழ்கி மீண்டு,
நிஜம்போல எம்மை நினைக்கவைத்து,
விழித்தெழுந்தால்
விசயம் விளங்கவைத்து,
ஏக்கமே மிஞ்சவைத்து,
மறந்தும் தான் போகிறது
மணிமணியாய் வரும் கனவு!
அறுந்து அங்காங்கு அகன்று
சிதைந்த அந்தச்
சிறகுகளைத் தேடுகிறேன்…
அவற்றினது மாதிரியைத்
அறிந்து ;அதன் நுட்பம் துணிந்துணர்ந்து;
அதைப்போல
சிறகுகளைப் பூட்டிவிட்டால்
திசை அளக்கும்
நம் நனவு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.