சிறகு

முகிற் சிறகு அடித்துப் பறக்க முயலும் வான்.
புகைச் சிறகு அடித்துப்
பொங்கி எழும் நெருப்பு.
ஒளிச் சிறகு அடித்து ஊர்கிறது பகல்;
கோடி
குளிர்ச்சிறகு அடித்துக்
குறண்டி நடக்கும் இரா.
அலைச் சிறகு அடித்து அலைகிறது பேராழி.
இலைச் சிறகு அடித்து
இங்குமங்கும் ஆடும் மரம்.
மனச் சிறகு அடித்து
வலம் வருமென் பொற்கனவு.
கனாச் சிறகு அடித்துக் கடக்கிறது
நம் நனவு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.