கனவு காண(ன)ல்

என்னென்ன கனாக்கள்
இனிமேல் பலித்திடுமோ?
என்னென்ன கனவுகள்
இனி நனவாய் மாறிடுமோ?
எந்தெந்தக் கனாக்கள்
இடையில் கலைந்திடுமோ?
எந்தெந்தக் கனவுகளை
இதயம் மறந்திடுமோ?
யாரறிவார்?
எனது கனவுகள் மட்டுமல்ல
ஊரவரின் உலகத் தவரின் கனவுகளும்
நாளையென்ன ஆகுமென
யாரெவரும் அறியமாட்டார்!
ஆனாலும்…எல்லோரும்
கனவுதினம் காண்கின்றார்!
காணுவதில் நாலோ ஐந்தோ
பலிக்குமென்ற
நம்பிக்கை மனதை நகரத்த
சலி(ளை)க்காமல்
ஏராளம் கனவுகளை
எல்லோரும் நிதம் காண்பார்!
கலைந்துவிடக் கூடாத கனாக்கள்
என்றென்றும்
கலைந்து விடாமல் காக்க
எவர் எண்ணுகிறார்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.