பங்கம் துடைப்பேன்!

சொற்கள் நதியாய்ச் சுரந்து கொண்டே
இருக்க,
கற்பனை
ஆழம் அகலம் காணாக் கடலாய்
விரிந்த படி பெருக,
விந்தைப் பொருள் வகையோ
பரந்த வெளியாக,
பயணித்த கவிதை…இன்றோ
சொற் சுவை வற்றி,
கற்பனைக் கடல் சுருங்கி…
இல்லையென் றாகி,
‘பாலை’ மாத்திரம் எஞ்சிச்
சுருங்கி உயிர்ப்புமின்றி
சூடு துடிப்பின்றி
‘விரிந்து பரந்தபொருள்’
விற்கப் பெறுமதியும்
தரமும் குறைந்து சப்பென்று கிடக்குதின்று!
எங்கள் பரம்பரையின்
ஈடு இணையற்ற
சிங்கக் கவிதை
நவீனச் சிறைசிக்கி
‘தொங்குமான்’ ஆகித் துடிக்கிறது!
புதுமை தேடிப்
பங்கப் படுத்தியவர்
பலியானார் வரலாற்றில்!
தங்கத் தமிழ்க்கவியை
தற்காலத்திற் கேற்ப
பொங்கவைத் துலகம் புரியவைத்து
அதைவளர்க்க
“எங்கும் எவருமில்லை”
என்ற வசை மாறவைத்து
இங்கு வேறெவரும்
இல்லை துணை என்றாலும்
பங்கம் துடைப்பேன்;
பார் போற்ற உயரவைப்பேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.