மர(ன)ம்

மரம் தனது அன்பை
அயலிலுள்ள உயிர்களுக்குத்
தருகிறது… பூக்கள், காய்கள்,
பழம் விதையாய்;
இதநிழலாய்;
கிளைகள் இலைகள் அசையவரும்
காற்றாய்;
கமழுகிற பூமணமாய்;
இனிமைமிகு
தேனாய்;
பட்டைகளில் பூச்சி புழு தங்க
இருப்பிடமாய்;
நாங்கள் மனிதர் இதன்மீது
இருக்கும்நம் அன்பை
எப்போதும் காட்டினோமா?
இரக்கமேதும் கொண்டோமா? இல்லை…”அதில் என்ன
பிடுங்கிடலாம் இலாபம்”
என அதனின் நிழலடியில்
அமர்ந்தபடி யோசிப்போம்!
அப்பொழுதும் அதுநல்கும்
பழம் காயை எடுத்துண்போம்!
சுவைப்போம்!
பசிதணிப்போம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.