கவிப் பெருமை

கவிஞன் இவனுக்குக் கட்டளை இடுவதுயார்?
கவிஞன் எழுதுவதைக் கையால்
மறிப்பதுயார்?
‘கவிஞா இதைத்தான் கவியாக்கு’
எனச் செடிலைப் Continue reading

Posted in கவிதைகள் | 4 Comments

அமைதிப் பரிசு

அமைதி வந்து அமர்ந்த தென்று
ஆடிப்பாடித் துள்ளினீர்.
அருளும் திருவும் அனைத்துச் சுகமும்
அமையும் என்று சொல்கிறீர். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தெய்வத் திருமகள்

கையில் உருகிக் கரையும் பனிமலர்.
கண்களில் ஒளி ததும்பும் சிறுசுடர்.
பொய்மையற்ற சிரிப்பில்…என்உயிரெனும்
பூவை வாடாத மல்லிகை ஆக்கியே… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கனவு வேண்டுதலும் நனவும்

கனவுகள் நனவில் வேண்டும்.
கவிதைகள் கணமும் வேண்டும்.
மனதினில் இரணங்கள் மாறி
மல்லிகை மலர வேண்டும்.
நினைவெலாம் நிறைய வேண்டும். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காரணக்கல்

கவிதைக் குளத்தில் கல்லெடுத் தெறிந்திருக்க
கல்விழுந்த இடம்கலைந்து
வளையம் வளையமாக
கவிஅலைகள் பரவிற்று!
பரவிய கவிஅலைகள்
காற்றின் இதழ்களினால் கவனமாக
ஒவ்வொன்றாய் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

விதைத்ததும் அறுத்ததும்

நேற்று விதைத்ததனை நீஇன்று அறுத்தெடுத்தாய்!
நேற்றுவரைச் சோள விதைகளென
நிறையவே
பாவம் பழியையெல்லாம்
பரபரப்பு ஏதுமின்றி
காட்டுகிற கண்ணசைவால் நீவிதைத்தாய்.
அவற்றுக்கு Continue reading

Posted in கவிதைகள் | 1 Comment

கனவுகளின் எல்லை

நனவுகள் நமக்குத் துயரையே நல்கிடினும்,
நனவுகளில் நமக்குத்
தீமையே நிகழ்ந்திடினும்,
நனவுகள் எம்மை நசித்துப் பிழிந்திடினும்,
நனவுகளில் ஏதும் நன்மை நடவாதா?
நனவுகள் இன்பத்தை
நமக்கு அருளாதா? Continue reading

Posted in கவிதைகள் | 2 Comments

தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுப் பெருவிழா

27-7-2013 அன்று திருமறைக் கலாமன்றத்தில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுப் பெருவிழா நடைபெற்றது. இதில் இடம் பெற்ற கவியரங்கம் நிகழ்வின்போது.

 

Posted in நிழற்படங்கள் | 1 Comment

இதயத்தை அறுத்து எடுமின்கள்

இதயத்தைக் கல்லாக்கி இருக்கின்றோம்
உயிர்ததும்பும்
இதயத்தைக் கல்லாக்கித் தான் நாம்
கதையளந்தோம். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தூக்குக் கயிறாகும் கேள்விகள்

உலகத்தைப் பற்றி உயர்ந்த இயற்கைபற்றி
உயிர்மூலம் பற்றி,
உருண்டோடும் வாழ்வுபற்றி,
இயக்குகிற சக்திபற்றி,
கடவுள்என்னும் ஒன்றுபற்றி,
கேள்விகள் நூறுநூறு கேள்விகள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பனையும் பைனும்

பனைக்கு நிழலில்லை பார்
நானும் என்செய்வேன்?
பனைதான் எம்முன் இருக்குமரம்.
பயன் நூறு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உலகியல்

வல்ல உலகில்,
வரத்தைவிடச் சாபத்தை
அள்ளி வளங்கி ஆனந்தப் படும் உலகில்
எத்தனையோ சுத்து மாத்து
அரசியல்கள்
சத்தியத்தை விற்றுச் சாதிக்கும் பூவுலகில்,
மற்றவனைத் தட்டிச் சுற்றி
மடக்கிலாபம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வெறுப்பு விசம்

வெறுப்பை…
கொடிய விசந்தன்னை நாகமொன்று
மிரட்டுகிற பாணியிற் படமெடுத்து
மிகச்சீறி
உமிழுவதைப் போல
உமிழ்ந்தாய் நீ என்மீது!
உனக்குப் பிடிக்காத எனக்கு மிகமிகவும்
அவசிய மான ஒன்றை.. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பாவக்கரம்

இரத்தக் கறைபடிந்த கையைநான் பார்க்கின்றேன்…
இரத்தம் கருஞ்சிவப்பு இரத்தந்தான்
பீறிட்டுக்
கையிற் தெறித்துச் சுடுகிறது அந்திவானாய்!
இரத்தத்தில் உயிரினது சூடும்
அதன்வாசமதும்
குறையா திருப்பதனை என்கை உணர்கையிலே
குருதித் துளியைத் துடைத்து
மாயமாயென் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மறந்துபோன ஒப்பாரி

இரவு முழுவதும் ஓயவில்லை… மழையினது
புறுபுறுப்பும்
அதனின் புலம்பல் அழுகையதும்.
நீண்ட பலநாளாய்
நினைத்துவைத்த அனைத்தையும்
வேண்டும் வரைகொட்டித் தீர்ப்பதென
விடியுமட்டும்
ஒப்பாரி சொல்லிற்று ஓயாமல்: Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment