எண்ணம்போல் வாழ்வு

காற்றைப்போல் நானிருப்பேன்…கட்டுக்குள் அடங்காத
காற்றைப்போல் தானிருப்பேன்.
யாருக்கும் கைகட்டி
தோற்றவரின் முன்துவண்டு குனிந்து தொழுவதற்கோ
ஏற்றுக்கொள் வீரென்று
எவரின் அடிபணிந்தோ
வாழும் வகையறியேன்!
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நேற்றைய காற்று

நேற்றைய காற்று இன்றைக் கிருக்கிறதா?
நேற்றைய காற்று
நேற்றோடே போயிற்றா?
நேற்றைய காற்றின் நிழலோ..அதன்சுவடோ…
நேற்றைய காற்றின் ஸ்பரிச நினைவுகளோ…
இன்றிருக்கும் காற்றில் இருக்கிறதா? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

துயரின் கயிறுகள்

துயரக் கயிறென்னைத் துவளவும் விடாமல்
அயலோடு கட்டி
அப்படியே பேர்ட்டுவிட
கைகால் அசைக்க முடியாச் சிறைப்பிடிப்பில்
செய்வ தறியாமல்
திகைத்துக் கிடக்கின்றேன். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உனதொரு சொல்

வீசுகிற காற்றைப்போல் வெளியில் நடக்கின்றேன்.
தகிக்கும் வெயிலில் பொசுங்கி
தளர்ந்துகாய்ந்த
புல்போலக் காலைவரை
ஒடுங்கிக் கிடந்தவன்தான்!
துயரமெனுந் தடியால் தொடர்ந்து
விளையாட்டாய் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மனதின் பட்ட கனவுமரம்

கனவுக் கனிநூறு காய்த்துக் குலுங்குகிற
மனமரமோ இன்று
இலையுதிர்த்துக் கனிகளற்று
வெறும் எலும்புக்கிளைகள் விண்ணளைய
நின்றிருக்கு.
இரவு பகலென்று இல்லை
மழைவெய்யில் Continue reading

Posted in கவிதைகள் | 2 Comments

கலைத்தாயின் திருக்கோவில்

நூறு அகவைதாண்டி நோகாமல் நொடியாமல்
சீரால் சிறப்புகளால்
நாளும் செழிப்புற்று
ஏறு முகமாக எழுச்சிபெற் றுயர்ந்துசெல்லும்
யாழ்இந்துத் தாயின்
யௌவன அருட்கழலில்
ஆறி அமர்கையிலே… Continue reading

Posted in கவிதைகள், நிகழ்வுகள், நிழற்படங்கள் | 2 Comments