பனையும் பைனும்

பனைக்கு நிழலில்லை பார்
நானும் என்செய்வேன்?
பனைதான் எம்முன் இருக்குமரம்.
பயன் நூறு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உலகியல்

வல்ல உலகில்,
வரத்தைவிடச் சாபத்தை
அள்ளி வளங்கி ஆனந்தப் படும் உலகில்
எத்தனையோ சுத்து மாத்து
அரசியல்கள்
சத்தியத்தை விற்றுச் சாதிக்கும் பூவுலகில்,
மற்றவனைத் தட்டிச் சுற்றி
மடக்கிலாபம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வெறுப்பு விசம்

வெறுப்பை…
கொடிய விசந்தன்னை நாகமொன்று
மிரட்டுகிற பாணியிற் படமெடுத்து
மிகச்சீறி
உமிழுவதைப் போல
உமிழ்ந்தாய் நீ என்மீது!
உனக்குப் பிடிக்காத எனக்கு மிகமிகவும்
அவசிய மான ஒன்றை.. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பாவக்கரம்

இரத்தக் கறைபடிந்த கையைநான் பார்க்கின்றேன்…
இரத்தம் கருஞ்சிவப்பு இரத்தந்தான்
பீறிட்டுக்
கையிற் தெறித்துச் சுடுகிறது அந்திவானாய்!
இரத்தத்தில் உயிரினது சூடும்
அதன்வாசமதும்
குறையா திருப்பதனை என்கை உணர்கையிலே
குருதித் துளியைத் துடைத்து
மாயமாயென் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மறந்துபோன ஒப்பாரி

இரவு முழுவதும் ஓயவில்லை… மழையினது
புறுபுறுப்பும்
அதனின் புலம்பல் அழுகையதும்.
நீண்ட பலநாளாய்
நினைத்துவைத்த அனைத்தையும்
வேண்டும் வரைகொட்டித் தீர்ப்பதென
விடியுமட்டும்
ஒப்பாரி சொல்லிற்று ஓயாமல்: Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பதிலறிந்த கடல்

கேள்வி…துளித்துளியாய் வீழ்ந்து
பெருக்கெடுத்து
வாரடித்தெம் ஒழுங்கைகளால்
ஓடுகிற வெள்ளமாகி
காட்டாறாய்ப் பொங்கி களனி வெளிகள் ஊடு
பாய்ந்து எமைச்சுற்றிப் படிந்துளன!
நான்குபுற Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மேய்ப்பனல்ல

மேய்ப்பர்கள் மேற்பார்வை யாளராக இல்லாமல்
மேய்ப்பர்கள் எல்லோரும்
வேட்டையர்களாக இன்று
மாறிக்கொண் டிருக்கின்ற வரலாறு நீள்வதனால்
மேய்ப்பனாக நானெனையே
எண்ண விரும்பவில்லை!
யானோர் திசைகாட்டி,
யானோர் உபாத்தியாயன், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வனங் கடத்தல்

திக்குத் திசைதெரியா இருள்இறுகும் காட்டுக்குள்
சுற்றிவரக் கொடிய
ஜந்துகளும் பாம்புகளும்
நிற்கும் வனத்துள்
நெருஞ்சிகளும் முட்புதரும்
கல்லும் புதைகுளியும் கால்வைக்க முடியாது
புற்றாழும் கானகத்துள்
புகுந்து வெளிவரவோ
நகரவோ பாதை எதுவுமற்ற நெடுவனத்துள் Continue reading

Posted in கவிதைகள் | 1 Comment

இயலாமையை உணரும் கணங்கள்

எழுதிய கவிதை எங்கே…நான் தேடுகிறேன்!
எழுதி இடையில்
இரண்டோர்சொல் செம்மையாக்கித்
திருத்திச் செதுக்குமுன்னே,
செல்வம் தொலைந்ததபோல்
கரம்விட்டுப் போயிற்றக் கவிதை:
எங்கேதான்
தொலைத்தேன் அக் காகிதத்தை
எனஎந்தன் நினைவுவெளி Continue reading

Posted in கவிதைகள் | 1 Comment

மரணம் அணுகும் தருணம்

குண்டு விழுகிறது:
குலைஅறுந்து சிதறியதாய்
குண்டு விழுந்தூரே குலுங்க வெடிக்கிறது.
ஒன்றாய் படுத்து உறங்கிய
ஒருகுடும்பம்
சின்னா பின்னமாகிச் சிதைய
அதேஅறையில்
தொங்கிய தொட்டிலில் துயின்ற சிசுமட்டும்
ஒன்றுமே ஆகாமல்
உறவுதேடிக் கதறிற்றாம்! Continue reading

Posted in கவிதைகள் | 1 Comment

என்னுடையவை

என்வாய் என்மூக்கு என்பல் என்கண்கள்
என்நாடி என்கன்னம் இவளில்
இருக்கென்றேன்!
தன்வாய் தன்மூக்கு தன்பல் தன்கண்கள்
தன்நாடி தன்கன்னம் இவளில்
எனத்துணையாள்
சொல்வாள்:
ஒருகுறும்பு தொடங்குமென எதிர்பார்த்தேன்!
என்னை இழுத்து
இறுக்கி அணைத்தமகள்
சொன்னாள்…
‘இவையனைத்தும் தன்னுடையவை’ என்று!

Posted in கவிதைகள் | Leave a comment

மழைபார்த்த குருடன்

இரவெல்லாம் நல்ல மழையென்றேன் மகளிடத்தில்.
முறிந்த துயிலை
முழுதாய் உதறிவிட்டு
மழைவந்த தடத்தை,
மழைஉதிர்த்த வெள்ளத்தை,
மழையினது எஞ்சிநிற்கும் வாசத்தை
இரசித்தபடி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நகரங்கள் பற்றிய பாடல்

உங்கள் பெருநகர்கள் உவகைக் கடலிலூறி
பொங்கியெமும் போதையிலும்,
போகக் கிறுக்கினிலும்,
ஆடிக் களித்திடையில்…அயலிலுள்ள நம்திசைகள்
தீப்பிடித்து…இரத்தமும் கண்ணீரும்
தெளித்தேனும்
அணைக்க முடியாமற் சாம்பராச்செம் நகர்களன்று! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எழுதல்

விழுதல் என்பது நிரந்தர வீழ்ச்சியல்ல!
எழுதல் மீண்டும் எழுதல்
இருப்பின்எங்கும்
விழுதல் என்பது நிரந்தர வீழ்ச்சியல்ல!
விழுதல் எழவே முடியா திருந்துவிட்டால்…
விழுதலும் நிச்சயமாய்
நிரந்தர வீழ்ச்சியாகும்!
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தேறல்

விடியலென்ற ஒன்று இங்கு வாராதா?
வினையறுத்த நாட்கள் எம்மைக் கூடாதா?
அடிமையாம் விலங்குடைந்து நீறாதா?
அகதிவாழ்வு என்பதிங்கு வீழாதா?
கடினமான பாதைநாம் கடந்தோமே!
கடவுள் காக்கும் என்றுதான் இருந்தோமே!
மிடிசுமந்து நொந்து நொந் திடிந்தோமே!
விதியும் மாறவில்லை சோர்ந்து சாய்ந்தோமே!
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment