Category Archives: கவிதைகள்

நம்பிக்கை நிழல்

  எங்கேதான் போவதென இலக்கற்ற ஓர்இலவம் பஞ்சாய் அலைந்தபடி முடியாப் பயணத்தில் ஒவ்வொரு திசையுமோர் விபச்சாரி போலழைக்க எவ்வாறு மீண்டேன் என அறியா தெனைக்காத்து இங்கின்று நிற்கின்றேன்! எப்படிநான் இங்குவந்தேன்? என்மூளை சொன்னபடி, என்னிதயம் சொன்னபடி, என்னுணர்வு சொன்னபடி, என்னுள்ளே கேட்கின்ற அந்த அசரீரி அழைத்தபடி, வந்தேனா? என்னென்று இங்குவந்தேன்? எப்படி இந்நிலையடைந்தேன்? என்னென்று வந்ததடை … Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காணாமல் ஆக்கப் பட்டவர்கள்

காலப் பனிக்கட்டி உருகிக் கரைந்து…கண் ணீராய்ப் பரவி குடியிருந்த நிலங்களினை மூழ்கடிக்க… குடும்பச் சுமைமுதுகில் கட்டியதால் மீட்க முடியாமல்

Posted in கவிதைகள் | Leave a comment

பணிப்பெண்

(இலங்கையிலிருந்து பணிப்பெண்களாக சென்ற 12 பெண்களின் சடலங்கள் சவூதி அரேபிய பிணவறைகளில் —அண்மைய செய்தி) தேட்டம் உனதுழைப்பால் திரளும்எனக் காத்திருப்பர் வீட்டின் தலைவர் விளையாடும் பிள்ளைகள், வாழ்வை நகர்த்த

Posted in கவிதைகள் | Leave a comment

உழவுப் போர்.

நீரற்று வாடும் நிஜப்பயிர்க ளாய்… நீவிர் தார்வீதி வெயிலில் தளிர்போல் வதங்குகிறீர்! வரண்டு இலையுதிர்த்த மரங்களென உடைகளைந்தீர்! வெறுங் கோவணம் பூண்டீர் வரங்கேட்டுத் தவஞ்செய்தீர்! எலிகளும் பாம்புகளும் எத்தனையோ படிமேலாய்… இறந்தபின் நிம்மதியாய் இருக்க இறந்தஅவை கௌவிக்… கிடைக்காத நிம்மதி நியாயத்தை எவ்வாறேனும் பெறவே பசிப்போர் புரிகின்றீர்! பொறுக்க முடியாமல் பொத்திவைத்த மானத்தைத் துறந்துங்கள்… வாழ்வின் … Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அனல் வெயில்

சாதுவான பிராணிபோலத் தான் வெய்யில் இருந்ததன்று! வீட்டுநாய் போல வாலைக் குழைத்துவந்து ஈரமென்றும் வெக்கையென்றும் இல்லாது

Posted in கவிதைகள் | Leave a comment

தமிழுடன் வாழ்தல்

சென்ற நாட்களைக் கணக்கில் எடுக்கையில் செந்தமிழ்ச் சுவை பற்றி நினையாத, வென்ற நம் தமிழ்க் கவிதை பயிலாத, வேறு வேறு புதுமை புகுத்தியே நன்றெனக் கவி செய்து மகிழாத, நாளெலாம் பயனென்றுமே இல்லாது சென்ற நாட்கள்தான் என்பேன்: தமிழனாய்ச் சிறந்திடாத நாள் வீண்நாள் உரைக்கிறேன்.

Posted in கவிதைகள் | Leave a comment

பசி

  சின்ன உணர்வுக்கே சுழன்றடிக்கும் கைகளுக்குள்… இரத்தம் உறுஞ்சுவதைக் கண்டால் விரல் அம்மி குழவியில் அரைத்தே சம்பலாக்கத் துணிபவர்முன்… உயிரைப் பணயமாக வைத்து தனைக்கொல்லும் பசியை எப்படியும் தணிக்கத் துடிதுடித்து ஒருநேர ஒருவேளை உணவை உண்டாறுதற்குள் நுளம்புகள் படும்பாடு யார்பட்டார் இவ்வுலகில்?

Posted in கவிதைகள் | Leave a comment

சாபம்

விபரம் தெரியாதோர் விபரீதம் தேறாதோர் இதுநல்ல முடிவென்று, இதுஅருமை மாற்றமென்று, இதைவிட ஒன்று இனிக்கிடைப்ப தரிதென்று, அனுபவங்கள் அற்றுக் களிக்கின்றார்

Posted in கவிதைகள் | Leave a comment

நட்பு முள்

  முறித்திருக்க வேண்டும் முளையினிலே வளர்ந்தபின்தான் அறிய முடிந்தது நீ…முட் செடியென்று! இளமையிலே முட்களை எப்படி மறைத்துவைத்தாய்? வளர வளரச் செடியே முள் ஆகிநின்றாய்! முள்ளாற்தான் முள்ளை

Posted in கவிதைகள் | Leave a comment

வரம்

சிறப்போ டிருக்கையிலே, புகழ்குன்றாப் பொழுதினிலே, மரியாதை கிடைக்கையிலே, மதிப்பும் தொடர்கையிலே, வெறுப்பு வருமுன்பே,

Posted in கவிதைகள் | Leave a comment

வெளி

சாய்ந்துதான் போனது தலைமுறை தலைமுறையாய் வேரோடி விழுதெறிந்து நின்ற குலவிருட்சம்! சாய்ந்ததுதான் தாமதம்… தடதடென்று கிளைகளினை யார்யாரோ வந்து பங்குபோட்டு வெட்டிவிட்டார்!

Posted in கவிதைகள் | Leave a comment

மாறாதபோட்டிகள்

கரைமணலில் நண்டு கால்களினால் எழுதுகிற கவிவரியின் அர்த்தமெது? அதன் ‘தலைப்புத்’தான் என்ன? அந்தக் கவிதைகளை அனைவரும் பார்த்துவிடக் கூடாது என்று

Posted in கவிதைகள் | Leave a comment

மெய்

உண்மை சிறையிருந்த தித்தனைநாள்! நீ…அதனால் இன்றுவரை சுதந்திரனாய் எதுஞ்செய்தாய்! சிறையிருந்த உண்மை வெளிவந்த சிலநாளில் இன்று…சிறை

Posted in கவிதைகள் | Leave a comment

ஒழுக்கு

காற்றின் இழைகளைத் தென்னோலையாய் எண்ணி நேற்றிருந்து கிடுகு பின்னிக் கொண்டிருந்த அந்த இரு தும்பிகளும் அசராமல் இன்றைக்கும்

Posted in கவிதைகள் | Leave a comment

ஓயேன்

உனக்கு… எந்தன் கவிபிடிக்க வில்லை என்றாய். உன்கணிப்பில்… என்கவிதை மட்டம் என்றாய். உனக்கு…எந்தன் கவிவடிவம் தூரம் சொன்னாய். உனக்கு… எந்தன் கவிக்கொள்கை கசக்கும் என்றாய். உனக்கு… எந்தன் கவிப்பொருளோ “குப்பை” என்றாய்.

Posted in கவிதைகள் | Leave a comment