உனதுநெற்றிக்கண்ணும் எனதுநீர்ப்பரப்பும்

அனலாய்த் தெறிக்கிறதுவார்த்தைகள்.
அவைபட்டு
பொசுங்கியேதோலெல்லாம்
கொப்புளங்கள் மொட்டுவிட்டு
இதழ் தேனைச் சிந்திடுது!
நெருப்புத் தணற்துண்டைதொட்டாற்போல்
மிதித்தாற்போல்
சுள்ளென்றுசுட்டுத் துடித்துப் பதைபதைத்து
வலியாற் சுருண்டேன்
சிரித்தகன்றதனதுவிரல்!
கண்ணிரண்டின் சுவாலைகாங்கைகளாய்
தானசைய
நின்றுநேரேபார்க்கச் சகிக்காத்
தகிப்பினிலே
முகத்தைத் திருப்பினேன் நின்மூன்றாம் நெற்றிக்கண்
இமைகள் திறக்கப்
பொசுங்கிற்றென் சென்னிமுடி!
இன்னுமின்னும் என்றால்….
என்னைஎரிபொருளாய்
என்னைநீபற்றிஎரித்துமுழுச்சாம்பல்
ஆக்கிடுவாய்….
பீனிக்ஸ்நான் அல்ல…பொசுக்கிடுவாய்!
நான்யார் என்றேநீயும் அறியவில்லை…,
நீயார் என்பதனைநானும் புரியவில்லை..,
சமூகமே…உன்னோடுசரிக்கட்ட
யாரிடந்தான்
வரங்கேட்பேன்?
யார்தயவில் உனக்குமுகம்கொடுப்பேன்?
நானாய் உனைஎதிர்க்கும் நாள்வரைக்கும்
எனைமறைத்து
நின்வெக்கைதனைஒடுக்கும்
மழையாகமாறுதற்கு
என் நீர் மைதனைக்காத்தேன்…
சந்தர்ப்பம் பார்த்துள்ளேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply