கார்த்திகை மழை

ஒவ்வொரு துளிகளும் உடைந்து சிதைந்திடுது!
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு முகங்களாக
என்மனக் கண்ணில் தெறித்திடுது!
முன்னோர்கால்
ஒவ்வொரு சுடரினிலும்
ஒவ்வோர் முகந்தோன்றி
மழைத்துளிகள் மண்ணெய்த் துளிகளாக
முளாசிற்றே!
இன்றும் மழைத்துளிகள்
தண்ணீர்த் துளிகளாகி
முகங்காட்டும் சுடர்களை அணைக்க…
என்மனதில்
ஒவ்வொரு மழையின் துளிகளிலும்
ஒவ்வொரு
முகங்கள் தெரிந்து
துளிகளெல்லாஞ் சேர்ந்து…சிறு
வெள்ளமாகி…வெவ்வேறு
வழிகளிலே திரண்ட வெள்ளம்
தூரத் திருந்தும் தாழ்வுநோக்கி வந்தவெள்ளம்
ஆக்ரோஷமாகப்
பாய்ந்து ஊர்முழுவதினதும்
பாதங் கழுவி
புத்துயிர்க்க வைத்தபடி
‘ஓ’ வென்ற இரைச்சலுடன்
வாய்க்கால் வழியோடி
மாகடலைச் சேர்க்கிறது கார்த்திகை மழை…
இன்றும்
‘சோ’வென்று கொட்டிக் கொட்டியே தீர்த்திடுது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply