குருதி இரயிலோட்டம்

நாடிநாளம் என்ற.. சென்றுவரும்
தண்டவாளம்
மீதுதொடர்ந்தோடும் இரயில்களாய்
குருதியூற்று
ஓடிக்கொண் டிருக்கிறது.
ஓயாதெதிர்த் திசையில்
இரயில் ஓடிஏற்றி இறக்கும் பயணிகளாய்,
பொருட்களாய்,குருதியிலே
சத்தும் கழிவுகளும்
பரிமாற்றப் படுகிறது…அங்கநிலையங்களிலே!
இதயம் தான் மத்திய இரயில் நிலையம்
அதிலிருந்து
புறப்படும் வந்துசேரும்
நாடிநாளத் தண்டவாளம்!
இரயில்கள் தொடர்ந்து
வெவ்வேறு வழித்தடத்தில்
நகருவதாய் ரத்தம் நகர்ந்தோடிவந்துபோகும்!
எங்கேனும் தண்டவாளம் சேதமானால்
இரயில்கள்
அங்கங்கேதடம்புரளும்!
இரயில்சேவை ஸ்தம்பிக்கும்!
உடனடியாய் தண்டவாளம் திருத்தாட்டில்
முழுநாடும்
நிச்சயமாய்ப் பாதிக்கும்!
நாடிநாளம் சிதைவுற்றால்
குருதி இரயில் தடம்புரளும்!

அன்றொருநாள் தலைநகர்க்குப்
போகின்ற தண்டவாளத்தில் பெருவெடிப்பு.
ஆம் இரயிலும் தடம்புரள
தொடர்சேவை இரத்தாச்சு!
மூளைநாடித் தண்டவாளம் தகர
குருதி இரயில்
தடம்புரளமுழுஉடலும் இறந்துதான் போயிற்று!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply