ஆன்மாவில்இட்ட அனல்!

ஆன்மாவில்இட்ட அனல்அணைந்து
போனாலும்…
ஊன்எரிந்தநாற்றம்இன்றும்
எம்உளமூக்கில்
அடித்துக்கொண்டிருக்கிறது!
அதால்வந்தவடு, காயம்
படிந்தின்றும்ஆறாமல்பாடாய்ப்படுத்திடுது!
எம்அறிவுப்பசிக்கு
இடையறாதுஉணவிட்ட
எம்சொந்தஅன்னசாலை…
இறந்தகாலத்தில்இருந்து
எங்கள்நிகழ்காலம்எதிர்காலம்பயனகொள்ள
என்று; மெய்ப்பொருள்’ சேர்த்த
எங்களூர்க்களஞ்சியம்…
எங்கள்கலைத்திரட்டு…
எங்கெங்கோசென்றுதேர்ந்து
தேனிகளாய்எம்மவர்நூல்
திரட்டிவைத்ததேன்கூடு…
காலக்கறையான்அரிக்காத
வரலாற்று
ஏடுகளைபூச்சிபுழுஏறிஅழிக்காதுகாத்த
பரம்பரைப்பெட்டகம்…
பகலிரவாய்க்கலைஞர்கள்
அறிவுத்தீவளர்த்து
அதில்ஞானம்மிகு‘அவி-
பொருள்’ எடுத்துஉண்டு
புத்துயிர்த்த யாககூடம்…
எம்ஊர்ப்படைப்புகளைஎடைபோட்டு
ஆராய்ந்த
சங்கப்பலகை….
சரித்திரத்துயராக;
அடையாள, விழுமியஅழிப்பினதுசாட்சியாக;
சடமாகநாகரிகம்
சமைந்ததற்குச்சான்றாக;
பரிகாரம்தேடவொண்ணா
வரலாற்றுப்பழியாக;
ஒருலட்சம்நூல்கள்சுவடிகளைக்
குவித்தன்றெம்
ஆன்மாவில்இட்டஅனல்
அணைந்துபோனாலும்
ஊன்எரிந்தநாற்றம்இன்றும்
எம்ஊர்மூக்கில்
அடித்துக்கொண்டிருக்கிறது!
அதால்வந்தவடு, காயம்
படிந்தின்றும்ஆறாமல்
பாடாய்ப்படுத்திடுது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.