இன்றையமுடியாட்சி!

முடியாட்சிஓய்ந்துகுடியாட்சிவந்ததன்பின்
‘படை, குடி, கூழ்,
அமைச்சு, நட்பு, அரண்’ என்ற
அங்கங்கள்ஆறுகொண்டஅரசனை;
அவனினது
சங்கைமிகுமிடுக்கை;
சாம்ராஜ்யம்தன்னை;
கோட்டையை, கொத்தளத்தைக், கொடியை;
மனங்களினை
ஆட்கொள்ளும்ஆட்சியை;
அழியாத்திறன்புகழை;
மும்மாரிமாதமும்பொழியவைக்கும்
செங்கோலை;
சிம்மாசனத்தை;
அத்தாணிமண்டபத்தை;
காணக்கிடைத்ததில்லை!

நாம்வாழும்நாளில்நம்
நாலுதிசைகளதும்எல்லைவரைவிரிந்த
சாம்ராஜ்ஜியம்அமைத்து;
சனங்களதுவாழ்வின்
சகலநிலைகளிலும்சகதுணையாய்வந்து;
புகழும்பொருளும்பொலியப்
பேராற்றலினால்
அரசனுக்குரியஅங்கங்கள்பெற்றுஆண்டு;
இரசிகமனங்களெனும்எண்ணற்ற
கோட்டைகள்,
கொத்தளங்கள்கொண்டு;
தன்கொடியைஇன்றுவரை
எத்திக்கும்பறக்கவிட்டு;
தன்படைப்புஆளுமையால்
எண்ணடங்காச்சாதனைகள்…
இனியகீதக்கோபுரங்கள்…
தொன்மைநவீனம் துளிர்த்தமெட்டுநகரங்கள்…
இன்றும்தரம்பெருகும்
இலயஞானச்சங்கதிகள்…
நன்றாம் உடல்நோய்க்கு
நலமருளும் அருமருந்து…
தந்து..,உயிர்உய்யஇணையற்றஅமுதமென்னும்
இன்னிசையை
நாளும்மும்மாரியாய்
பொழிந்து…உலகை
ஆளும்இசையரசன்…
ஆம்எங்கள்அடையாளம்
ஆன‘இளையராஜா’ என்ற
பேரரசனினைக்
கண்டு.. அக்கலைவேந்தன்
‘கலக்கும்’ மேடை‘அத்தாணி
மண்டபத்தை’
அவனிருக்கைச்‘சிம்மாசனம்’ தன்னை
சுதிபிசகாதியக்கும்
அவனின்கைச்‘செங்கோலை’
ரத, கஜ, துரத, பதாதை
நிகர்இசைக்குழுவை
நிதம்இரசித்து…அவனின்இசைமுடியாட்சிப்
பெருமைதேர்ந்தோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.