கடன்

கடன்பெற்றுப்பசிபோக்கலாம்-பட்ட
கடன்தீர்க்ககடன்கேட்டும் பொழுதோட்டலாம்.
கடன்பட்டுக்கலியாணமும்-கட்டிக்
கடனோடுபதினாறும்பெறக்கூடலாம்.
கடன்தீர்க்கும்வழிமறந்து-நாளை
கடன்தீர்ப்பான்பிறனென்றும்விளையாடலாம்.
கடனின்றுகலைக்கின்றது-மீளக்
கதியென்னதெரியாதூர்தடுமாறுது!

”கடன்பட்டம்தினம்” என்றுமே-யாரும்
கலங்கலை…கவலைகள்எதுமற்றுமே
கடன்மேலேகடன்பெற்றமே-இன்று
கடன்மீள…கடன்வாங்கிஅலைகின்றமே
கடன்காரர்களைநம்பியே-இன்று
கறிசோறும்கிடையாமல்பசிவீழ்ந்தமே
கடன்தீர்க்கும்நிலைதாண்டியே-சென்று
கடனுக்குஅடைமானம்எமைவைத்தமே!

உழைக்கின்றமனமில்லைகாண்-யாரும்
உபகாரம்செயஉண்டுஉயிர்காத்ததால்
களைக்காமல்பசிபோக்கவும்-காசு
கடல்தாண்டிநிதம்அன்றுவரைவந்ததால்
பழுதானநிதிஆளுகை-மாற்ற
பரிகாரம்எதும்செய்யமுயலாததால்
அழுகின்றோம்…பசிசூழுதாம்-இன்றிவ்
அவலங்கள்தமைமாற்றிக்கடன்தீர்ப்பதார்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.