போகேன்

“நீங்களாயேநாட்டைவிட்டுநீங்குங்கள்
இங்கிருந்தால்
ஓங்கியுயரஏலாதுஓடுங்கள்” எனஆள்வோர்
சொல்லாமல்சொல்கின்றார்!
சோப்பு, வாயு, எரிபொருட்கள்
இல்லாதுவாழ்வதுஎவ்வாறெனப்பலரும்
‘ஆச்சர்யம்’ ஆன
அன்னைமண்ணைவிட்டுவிட்டுப்
“போனாலேகாணும்போதுமடாசாமி” என்றும்
“போயிருக்கலாம்முன்பே” என்றும்
புலம்புகிறார்!
‘கோழியைமேய்த்தாலும்கவுண்மேந்தில்’
என்றவர்க்கும்
“ நாலைந்துஆண்டுகள்நன்றாய்விடுமுறையில்
எங்கேனும்போங்கள்…
இல்லை; மீளவருகையிலே
உங்கள்பதவிக்குஉபத்திரவம்”
எனச்சொல்ல
கடவுச்சீட்டலுவலகவரிசைக்கனவுகளும்
விடைதெரியாஎதிர்கால
வினாக்களுடன்நீள்கிறது!
உடும்புபிடித்துஉருண்டுபுரண்டமண்மேல்
நம்பிக்கைஅற்று
“நாம்பிழைத்தாற்போது”மென்று
இம்மண்ணின்ஓர்கூட்டம்
எழுந்துபறப்பதற்கும்
இன்றுதயாராச்சு!
ஏக்கமுடன்பார்க்கின்றேன்!

என்னென்றுஇம்மண்ணைவிட்டுவிட்டு
நான்போவேன்?
என்னென்றுஎன்மண்ணைத்தனிக்கவிட்டு
யான்தொலைவேன்?
குண்டுவிழவிழவும்
கூடுகுலைந்திடவும்
நின்றுபிடித்தநிலம்;
“நீவா” எனஅன்றே
எல்லோரும்கேட்க
“இல்லைஇதைவிட்டுவரேன்
தொல்லைகள்வரினும்தொடர்ந்திருப்பேன்”
என்றுசொல்லி
துன்பங்கள்தாங்கித்துணிந்து
உயரவைத்ததரை;
எத்தனையோநண்பர்கள்இங்குவந்து
தம்நிலங்கள்
விற்றுவெளியேற
எனதுழைப்பில்ஒருதுண்டுக்
காணியினைவாங்கிக்
கருக்கொண்டகனவுகளால்
வீடொன்றைநான்கட்ட
அதிலென்குடும்பமோங்கி
வாழவைத்ததிந்தமடி;
நான்வளரஎனக்குஊட்டம்
நாளும்வழங்கும்முலை;
நானிதையாபிரிவேன்? என்
வானை, மழைமுகிலை,
மனம்உடலைஉயிர்க்கவைக்கும்
பூங்காற்றை,
எந்தன்பூர்வீகவயல்தோட்டம்,
தாங்கிஅருளும்தரவை, குளம், கடலை,
தீங்கிலாதஎம்கிணற்றின்தீர்த்தத்தை,
என்அயலில்
ஓங்கியமரஞ்செடியை,
உறவானஉயிரிகளை,
தேங்கியதிரவியத்தை,
திசைதிக்கின்செழிப்புகளை,
நாளும்எனைஎழுப்பிநடத்திப்
படிப்படியாய்
ஞானம்எனக்கருளும்
நல்லூர்மணியொலியை,
கோவிற்திருவிழா, கொண்டாட்டம்,
பண்டிகையை,
கட்டிஎமைமயக்கும்கலைவகையை,
மரபுகளை,
கட்டுக்கள்அற்றகவின்வாழ்வை,
பரம்பரையின்
செட்டுச்செருக்குகளை,
தேவாமிருதஉணவை,
எந்தஇடருள்ளும்எனைக்காத்தசுற்றத்தை,
சந்தோசம்குறைவின்றித்தரும்
இரத்தஉறவுகளை,
அந்தரத்திற்குஉதவும்
ஆபத்பாந்தவநட்பை,
வந்தஎந்தக்காயமதும்விரைந்துமாற்றும்
சூழலினை,
விட்டிந்தப்பஞ்சம்விரட்ட…
சிலநாளாய்
மட்டுப்பாடெம்மைமருட்ட…
எனைவளர்த்து
இன்றைக்கும்பார்க்கும்
எனதிரண்டாம்தாய்…நிலத்தை
என்னென்றுவிட்டு
இல்லையிங்குவாழவழி
என்றுபிரிவேன்?
இடர்ப்போதில்கைவிட்டுச்
சென்றாசிறப்பேன்?
என்முன்னோர்கணம்துணிந்து
பாறைபிளந்துபண்படுத்தியேசாறி
வேர்வைமழையூற்றி
விளைத்துத்தன்னிறைவுகண்ட..,
முயன்றாலோகைவிடாத..,
முப்பாட்டன்வாழ்ந்தொளிர்ந்த..,
பொன்மண்ணைத்தவிக்கவிட்டு
போய்எங்கேவாகைகொள்வேன்?
இந்தஇடைக்கால
இடர்தடையைத்தகர்த்து…யாரோ
அன்றுசெயற்கையாக
ஆக்கியதுயருக்கு
நின்றுமேநீதிகேட்டு…
நிஜம்சாகாமற்காத்து…
மீண்டும்எனதூரைமீட்டெடுத்து…
மிடுக்குடுத்து…
தாண்டபொருளாதாரம்தளைக்கவைக்கும்
ஓயாஉழைப்பில்
உண்மையன்பரோடிணைந்து,
காய்ந்தஎன்மண்ணில்களனிசெய்து,
பசுமைசேர்த்து,
ஆய்ந்துஅதில்செல்வம்
ஆயிரமாயிரம்பறித்து,
ஓய்ந்ததொழில்கள்உயிர்க்கவைத்து,
தாழ்விருந்து
மீண்டும்நான்வாழ்வேன்மிடுக்கோடு…
என்றபடி
‘போவோர்க்குக்’ கைகாட்டி
புரிந்தோரைஒன்றாக்கி
வாழப்புதியவரம்கேட்டுத்
தவம்தொடர்வேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.