வாழவேணும்.

எரிவாயுவரிசையிலேநின்றுதூங்கி,
“இல்லைஅது” என்றாகவிறகைவாங்கி,
எரிபொருட்காய்அனுமான்வால் நீளந்தேங்கி,
எம்பொறுமைகாக்கின்றஎல்லைதாண்டி,
பொரிகின்றோம்கொஞ்சஎரிபொருளைவேண்டி
புலர்விருந்துஅலர்வுவரை ஏங்கி! “இன்னும்
வரும்நாளைஇடர்…அரிசிசீனிமாவை
வாங்க”என்றார்; பிழைப்போமா? அதையும்தாங்கி?

‘ஆட்டக்காரி’ மும்மடங்குவிலைக்குவந்தாள்.
அவளுக்குஇளைத்ததில்லை…வெள்ளைப்பச்சை,
தீட்டல், சம்பா, கறுப்பன், தாமும்உயர்ந்துகொள்ளும்.
சிறுதளம்பல்இன்றுகாணும்சீனிமாவும்
ஆட்டத்தைத்தொடங்கும். தலைமறையும். “எங்கே
ஆட்கள்” எனநாம்தேடத்தொலையும் யாவும்.
ஏட்டிக்குப்போட்டியாகஎவைதான்எம்மை
ஏய்த்தொழியும்? எம்வயிற்றைப்பசியாதின்னும்?

“அரிசிக்கும்வரிசையிலேநிற்கும்கோலம்,
‘அம்மாப்பச்சை’கூடநாளைகிடையாச்சீலம்,
மரக்கறியைமீன்இறைச்சிமுட்டைநண்டை
மனக்கண்ணால்கண்டுபசிஆறும்காலம்,
உருவாகும்” என்கின்றார்! உரத்தைத்தேடி
உதிராமல்…’உள்ளஉரம்’ கொண்டு; அன்று
வரலாறுபடைத்ததாய்நம்காலில்நின்று
வாழவேணும்! நாளையைநாம்ஆள்வோம்வென்று!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.