நல்லூரடி மாலை

மந்தை வரிசையாய் வானில் முகிற்கூட்டம்.
சந்தனத்தை அனைத்தினிலும்
சாத்திற்று பொன்அந்தி.
வடக்கிருந்து தெற்காக
நகருதந்ந முகில் மந்தை.
இடைக்கிடை சிலுசிலுத்து Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

ஜெயிப்பமா?

ஈரமான இதயம் படைத்தவர்
எங்கு எங்கென நாற்திசை தேடினேன்!
பாரம் துன்பம் பகிர்ந்து சுமந்திடும்
பண்புளோர்களின் பாதமும் நாடினேன்!
கோரம் கொடுமை கண்டு குளிர்ந்திடும்
கொள்கையர்களே கூட்டணி சேர்ந்தனர். Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மனித மனம்

சிங்கத்தி னுள்ளே சிங்கமனம் இருக்கிறது!
பொங்கும் புலிக்குள்
புலிமனம் இருக்கிறது!
நாகத்துள் நாகமனம்,
நரிக்குள்ளே நரியின் மனம்,
காகத்துள் காகமனம், Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

உறவு

உன்னுடைய கண்ணீரைத் துடைத்துவிட
என்விரலும்
என்னுடைய கண்ணீரைத் துடைத்துவிட
உன்விரலும்
உன்னுடைய கண்ணீரை
நிறுத்துதற்கு என்மனமும் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

பார்த்துக்கொள்!

பொருள்பெரிதாய்த் தேவையில்லை புண்ணியனே..
நின் நீங்கா
அருளைத்தான் வேண்டி அழுதோம்
நல்லூரவனே!
வந்து தொடு;
எங்கள் மனவருத்தம் தீர்; தீர்த்தம் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

சூர சங்காரம்

தங்கு தடையின்றித் தருமத்தைச்
சாய்த்தவரைச்
சங்காரம் செய்வதற்கு
சண்முகன் அவதரித்தான்!
ஆணவம் கன்மமொடு மாயை
அவுணர்களில் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

நன்றருள்வான் என்றும்.

துன்பத்தில் தேவர்கள் துவண்டு
பரம்பொருளை
அன்றழுது நேர அரனும்
நுதல்விழி
திறந்தான்…பொறி ஆறு
செந்தாமரை சேர்ந்து Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

சொல் வழி

புதியதானதோர் எண்ணம் பிறந்திட
புத்துயிர்த்து நும் சிந்தனை தன்னிலோர்
விதி எழுதிட வேணும் என் தோழனே!
விதை இடு சிந்தை தன்னை நீ சாறியே!
நதியைப் போல நகரும் எம் வாழ்விலே
நாகரீக நடப்பினுக் கேற்றதாய், Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

பெளர்ணமிப்பா!

உடலின் அசதிக்கும்;
உயிர் மனது பகல் முழுதும்
அடைந்த வலிகாயம் அத்தனைக்கும்;
ஒத்தடங்கள்
கொடுத்துக்கொண் டிருக்கிறது
தன்(ண்) ஒளியால் குளிர்நிலவு! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

குணம்

வானிலே சிட்டாய் மகிழ்ந்தேறிப் போம்;
நூறு
கானம் இசைத்துக் கவிக்குயிலாய்ச் சுற்றிவரும்.
மீனாக ஆழ்கடலில் விளையாடும்.
வளை நண்டாய்
ஓடி உயிர்ப்பயத்தில் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

வழமை

சின்னத் துளி…
முகிலின் சிறையுடைத்து வீழ்ந்தாலெம்
மண்சிலிர்க்கும்;
அதனின் மனம் குளிர்ந்து
உறங்குநிலை
கொண்டு நிலத்துள் கொடுகிக் கிடந்த விதை Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

என் பெருமை!

மலடியல்ல எங்களின் மாதா!
என்றென்றும்
கலைகளெலாம் தேர்ந்த
கவிக்குழந்தைகள் தம்மை
அன்றிருந்து இன்றுவரை
அடுத்தடுத்துப் பெற்றபடி…, Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

கடவுளுக்கு நிகர்!

கால நதியோரம் கால்கள் விளையாடும்
காயம் அதில் மூழ்கி முழுகும்.
காய்ந்து, உடல்மேலே காணும் கழிவெல்லாம்
கழுவிவிட நெஞ்சு முயலும்.
தோலில் படிந்தூறும் தோசம் தொலைத்தோட்டி
தூய்மை மனமென்று அடையும்? Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

உன்னை உணர்!

காலகாலமாய்க் கல்லாய்க் கிடந்தவா!
கண்ணை மூடியே என்றும் துயின்றவா!
சீலம் யாதெனத் தேறா தலைந்தவா!
தேசு யாவும் மறந்து உலைந்தவா!
சாலவே பெரும் பேர் புகழ் கொண்டதோர்
சந்ததி அதன் விழுதென வந்தும்…உன் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

காப்பு வழி?

என்ன கொடுமையிது? -எங்கள்
எட்டுத் திசையும் நலிந்து துவண்டு
துன்பத்தில் தோய்கிறது! -அதன்
சுவாசம் நொடிந்து திணறிடுது!
புன்னகை தோற்றலைந்து -பேய்கள்
புகுந்ததாய் முகங்கள் இருண்டுறைந்து Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment