வாழும் குரல்…..

இனிய குரல்வளத்தின் அதிஉச்ச எல்லையிது!
கனக்கக் குரல் உளது
கந்தர்வக் குரல் உனது!
உணர்ச்சிகள் சகலதிற்கும் ஏற்ப உருமாறி
கணக்கற்ற பாவங்கள்
காட்டும் குரல் நினது! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தலைமுறையின் தேவ கீதம்

காற்றிருக்கும் நாள் வரை நின் கானமிருக்கும் -உந்தன்
கந்தர்வக் குரலில் என்றும் ஈரமிருக்கும்
ஊற்றடைத்துப் போச்செனினும் ஓசை உயிர்க்கும் -உடல்
உக்கும் மண்ணுள்… உன் இசையோ பூத்துச் சிரிக்கும் ! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அன்றும் இன்றும்

எல்லாமும் வழமைபோல்
இயங்கிக்கொண் டிருந்ததன்று!
எல்லோரும் தம்வீடு வாசல், கிடைத்தவேலை,
என்றிருந்தார்;
வாகனங்கள் மண்ணெண்ணை உண்டு …கரும்
வண்ணப் புகை பறிய வந்து போச்சாம். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உய்யும் வழியை உரை

பாவிகள் நோய்க் காவிகளாய் மாறி னார்…அப்
பாவிகளும் காவிகளாய் மாறு கின்றார்!
பாவமெது செய்தார்? மெய் தழுவித் தொட்டு
பயங்கரத்தைப் பவ்வியமாய் வாங்கிக் கொண்டார்!
ஏவ எவர் மீதினிலும் இறங்கும் பேயாய்
எண்திக்கும் பரவுகிற கிருமி தொற்றி… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அறியாதார் அறியாதாரே

மனிதர்களில் அநேகமானோர் மிருகம் போலாய்
வாழ்வதுதான் வழமை! மண்ணில் பிறந்து வந்து
மனிதர்கள் மனிதர்களாய் வாழ்ந்தால் நன்மை!
மனிதர்களில் சிலர் தலைவர் ஆவார் உண்மை!
மனிதர்களில் தலைவரானோர் மக்கள் உய்ய
வழி, வகையைக் காட்டல்..மேன்மை! இதனை விட்டு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அஞ்சுதல் அஞ்சாமை பேதமை!

ஏனின்னும் நாங்கள் எதிலும் அலட்சியமாய்,
ஏனின்னும் நாங்கள்
எதிலும் அசட்டையாய்,
ஏனின்னும் நாங்கள் எதையும் புரியாது,
ஏனின்னும் நாங்கள் எதற்கும் பயப்படாது,
அஞ்சுதல் அஞ்சாமை பேதமை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அநாதை உலகு

அநாதையாச்சு வானம். அநாதையாச்சு முகில்கள்.
அநாதையாச்சு காற்று.
அநாதையாச்சு வெய்யில்.
அநாதையாச்சு கதிரும். அநாதையாச்சு நிலவும்.
அநாதையாச்சு கடலும். அநாதையாச்சு கரையும்.
தனிமைப் படுத்தல் …சுய Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

என்னாகும் நாளை?

என்னாகும் நாளை… இன் றெவர்தான் தேர்ந்தோம்?
எது எதுதான் நடக்குமென எவர்தான் காண்போம் ?
இன்று சூழும் அவலமுகில் கலைந்தா ஓடும்?
இல்லை பெரும் அழிவு மாரி அடித்தா ஓயும்?
இன்றைக்கிவ் எச்சரிக்கை எமையா காக்கும்?
இல்லை பேர் இடராகி எமையா மாய்க்கும்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

‘நிலை’ மாறும் காலம்

பாயில் புரண்டு படுக்குது –நேரம்
பகலும் இரவும் வீணாகுது –திருக்
கோயில் கதவும் அடைத்தது –இராக்
கோழியும் கூவ மறந்தது –மனம்
நாயாய் அறைக்குள் அலையுது –ஒரு
நடை வெளிச்செல்ல விரும்புது –புவி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உயிர் மலர்வதெவ்வாறு?

ஒளிபடர்ந்துன் இரவை உறிஞ்சி
அகன்றபின்னும்
விழிமூடி அகக்கண்ணும் குருடாகத்
தூங்குகிறாய்!
புதுக்காற்று வீசும் சுகந்தப் பொழுது
மூச்சில் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

முதுசத்தின் ஞான வேர்

தொண்ட மானாற்றின் ஓரம்
சுரந்தது கருணை மையம்.
பண்டைநாள் முதலாய் மாந்தர்
உடற் பசி யோடு …ஆன்ம
வன்பசி தணிக்கும் ஸ்தானம்.
வாய்கட்டி, மனதால் போற்றி, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அனைத்துலகும் அடங்கிய அகாலம்!

உலகம் முழுவதும் ஒரேநேரம் சிறையிருக்கும்.
உலகம் முழுதும் ஒரேசமயம் தனித்திருக்கும்.
உலகம் முழுவதும்
ஒரேநேரம் பயந்திருக்கும்.
உலகம் முழுதும்
ஒரேசமயம் நேர்ந்திருக்கும். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கடவுளா இது?

உயிருள்ள தெனச்சொல்ல முடியாது;
ஏனென்றால்
உயிரின் அடிப்படைக் கலமல்ல இது!
எனினும்
உயிரில்லை எனவுமெண்ண முடியாது;
‘நிறமூர்த்த’ Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பழி சாய்க்க வா!

இடரேதும் தொடராதெம் பொழுதோடணும் –எங்கள்
இரு கண் உன் எழில்முற்றும் நிதம் காணணும்.
கொடுமைகள் தொலைந்தெங்கள் குடி வாழணும்–உந்தன்
குளிர் வேலின் ஒளியில் நாம் முடி சூடணும்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எமக்கின்று துணை யாரு?

நீல மயிலேறி நீழல் எனமாறி
நீயும் வரும்போது அருகாக
நின்று… நினைக்கண்டு நெஞ்சு நிறை அன்பு
நேர்த்திகளும் தீர்த்து மகிழோமோ?
காலப் பிழையென்று கண்ணும் உணராத
காலன் எமைத்தீண்ட வரும்போது Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment