ஒளிர்வாய்

அழகென்ற கொடிஆடும் அகிலத்திலே -வாழ்ந்தும்
அதையாரும் இரசிக்கின்ற மனமில்லையே
வளம் கோடி குவிந்தாலும் மனம் ஏங்குதே -யாரும்
வயிறார உணவுண்ண வழியில்லையே! Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on ஒளிர்வாய்

வராதிடர்

வாழவே வழியற்ற நாட்டிலே
வாழ்வதென்பதோர் சாதனை.
வாழ்வு என்பதன் அர்த்தம் என்பதை
யார் உணர்ந்தனம்? போதனை- Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on வராதிடர்

இயற்கை நீதி

போலிகளின் முகத்தில் கரிபூசுமாம் காலம்!
வேசங் களுக்குள் விழுந்து;
முகமூடி
பூண்டு தம் முகத்தைப் புதைத்து;
தங்களது
உண்மைச் சுயரூபம் Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கை நீதி

நினைவலைகள்

நினைவுகள்தாம் எம்மை வழிநடத்தும்
ஆசான்கள்.
நினைவுகள் தான் எமக்கு
கரைகாட்டும் கலங்கரைகள்.
நேற்றை நினைவுகள் தான்
நாளை நனவுகளின் Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on நினைவலைகள்

சூழும் அறம்.

வரலாறு தடுமாறும் நேரம் – எங்கும்
வலி சூழ எழும் சோக கீதம்
தருமங்கள் இடும் நூறு சாபம் -செய்த
தவறுக்கா பரிகாரம் தேடும்? Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on சூழும் அறம்.

மெய்

நீங்கள் உரைத்துவிட்டால்,
நீவிர் நினைத்தபடி
ஓங்கிக் குரல்வைத்தால்,
உம் தோழர் எல்லோரும்
சேர்ந்து முழங்கிவிட்டால்,
சிந்தனையைப் பகிர்ந்தால், Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on மெய்

காப்பதார்…எம் கதை தேறி?

வீதிகள் தோறும் மானுட வெள்ளம்
வேதனை தீர்த்திடத் தேங்கும்.
“மேதினி பார்த்தே மீட்டிட வேண்டும்
விரைவில்” எனும் குரல் ஓங்கும்.
நீதியும் செத்து நியாயமும் பட்டு
நிதி திருடப்பட வீங்கும் Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on காப்பதார்…எம் கதை தேறி?

மே’ தின நிஜம்!

யார் தான் உழைப்பாளி இந்த உலகிலே?
யார் தாம் ‘உழைப்பவர்’ இந்தப் புவியிலே?
வேர்வை வார்த்து, நரம்பு தசைகளில்
வியக்க வைத்திடும் சக்தி பிறப்பித்து,
ஊரை ஒவ்வொரு கற்களைக் கொண்டுமே
உயரச் செய்து, உழைப்புக்கு ஏற்றதாய் Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on மே’ தின நிஜம்!

துணை செய்க!

வாசலில் புது வாழ்வு வந்திடும்
வல்லமைகளும் தந்திடும்.
மாண்டு போனநம் மான மென்பதை
மண்ணில் மீண்டுமே கொண்டரும்.
பேசிப் பேசியே வீழ்ந்த நம்மவர்
பீட்டைச் செய்கையால் மீட்டிடும். Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on துணை செய்க!

காலம்

கனவுகளைக் காவு எடுக்கிறது
கொடுங்காலம்.
கனவுகள் அடைகாக்கப் பட்டுக்
கவனமாக
நனவுகளின் குஞ்சுகள்
நாளை பொரிக்குமென
மனங்களெல்லாம் நம்பி மகிழ்ந்திருக்க… Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on காலம்

மாற்றம்?

வரலாற்றைத் தன்னுடைய இஷ்டம்போல் மாற்றி
வரைந்தது காலத்தின் கை;
வாழ்வும் தலைகீழாய்
மாறிற்று!
நாங்கள் வழிவழியாய்ச் சொன்னகதை,
பாடிய பாடல்களின் பண், Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on மாற்றம்?

கோடை மழைக்குளிப்பு!

இந்த மழை எதை எதைக் கழுவப் பெய்கிறது?
இந்த அனற் கோடையிடை
‘சித்திரைச் சிறுமாரி’
எதை எதனைக் கழுவிடுது?
எதைக்குளிக்க வார்த்திடுது?
எதை எதை திருமுழுக்கு ஆட்டி அருள்கிறது? Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on கோடை மழைக்குளிப்பு!

தமிழழகி

தென்றல் தனில்ஊறித், திசையெல்லாம்
சென்றோடி,
மன்றேறி,
தாய் மண் மடியில் மழலையென
நின்று மெருகேறி,
நிலவுக்கும் கைநீட்டி, Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on தமிழழகி

சுதந்திரம்?

யாரை விரும்புவது?
யார்யாரை வெறுப்பது?
யாரை இரசிப்பது?
யார்யாரை மறுப்பது?
யாரைப் புகழ்வது? யார்யாரை இகழ்வது?
யாரை இணைப்பது? Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on சுதந்திரம்?

துணை செய்க!

வாசலில் புது வாழ்வு வந்திடும்
வல்லமைகளும் தந்திடும்.
மாண்டு போனநம் மான மென்பதை
மண்ணில் மீண்டுமே கொண்டரும்.
பேசிப் பேசியே வீழ்ந்த நம்மவர்
பீட்டைச் செய்கையால் மீட்டிடும். Continue reading →

Posted in கவிதைகள் | Comments Off on துணை செய்க!