அச்சம் ஆளும் நாட்கள்

எப்படித்தான் இந்தத் துன்பம் எங்களையும் சூழ்ந்தது?
ஏழு கடல் தாண்டி இன்றெம் ஊரும் தீப்பிடிக்குது.
இப்ப எட்டுத் திக்கும் இந்த நோயில் வெந்து சாகுது,
எம்மூர் வெப்பம் எம்மைக் காக்கும் என்றம்; ஏன் பிழைக்குது? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கலியின் கோலம்

சகுனிகளே அதிகமாக வாழும் காலம்.
தருமமொடு சத்தியத்தைத் தனியே நம்பி
அகம் புறத்தில் தருமர்களாய் வாழ்ந்தால் மட்டும்
ஆகாது; முள்ளை முள்ளாலே கொய்யும்
வகையினிலே….புறத்தோற்றத் தருமர் கூட
மனதினுள்ளே சகுனிகளாய் மாற வேண்டும்!
மிகப்பெரிய வாழ்க்கைப்போர் நடக்கும் இந்த
மேதினியின் தீயைத் தீயால் அணைக்க வேண்டும்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காதல் வெல்ல

காதல் எனும் மாயை –வந்து
கண்ணை மறைத்தாலும்–அட
சாதலைக் காட்டியேனும் –அதைச்
சாதிக்க நின்றாலும் –உயிர்ப்
பாதி என புகழ்ந்து –உடற்
பாடம் பயின்றாலும் –வரும்
மோதல் சில தினத்தில் –மோகம்
முப்பது நாள் ஆகும்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இயற்கையோடு இணங்கு

காற்று பூக்களின் தேனைக் குடிக்குது.
கடல் அலை தொடு வானைச் சுவைக்குது.
ஊற்று நீர் மண்ணோ டூடிக் கலக்குது.
ஒளி இருளினைத் தின்று செமிக்குது.
சோற்றுக் காகவே சேற்றில் இறங்கையில்
சொறி சிரங்கு வந்தாலும் கால் பூக்குது.
தோற்று அழியாது பூமி…மனிதர் செய்
துன்பம் பொறுத்தும் தொடர்ந்து அருளுது. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பழி

ஆழ்ந்து உறங்கும் கிராமத்தை
அயல் வெள்ளம்
பாய்ந்து அடித்துப் பலிவாங்கிச் செல்வதுபோல்,
சாவென்னும் பாம்பு கெளவியே
இழுத்தோட Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

யதார்த்தம்

எத்தனை எத்தனை தத்துவம் கண்டனர்!
எத்தனை சத்திய வேதம் பயின்றனர்!
எத்தனை நீதிநூல் கற்றுத் தெளிந்தனர்?
எத்தனை மார்க்க உபதேசம் பெற்றனர்?
முத்தி வழி, வகை, மூலம், உணர்ந்தனர்.
மூத்த பலர் சொல் அனுபவம் தேர்ந்தனர். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சு’தந்திரம்’

உப்பிட்டவர் களை உள்ளளவும் நினைக்கத்
துப்பற்றுக் கடைகளிலே
தொங்கிடுது கருவாடு!
உப்பிடுதல் உயிர்க்கு …வாழ்வு;
உடல் அழுகா திருப்பதற்கு
உப்பிடுதல் வேறு; Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உறவு

மரம் நிமிர்ந்தே நிற்கிறது.
வந்து வந்து பலநூறு
பறவைகள் அமர்கிறது.
பறந்து பல திரும்பிடுது.
மரத்துக்குக் கவலையில்லை.
வந்துபோகும் பறவைகளால் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நிலா விருட்சம்

அமாவாசை வயலில்
அடுத்த தினங்களினில்
பிறைச் செடி முளைக்கும்!
பின் அது நிதம் வளர்ந்து
முழு நிலா விருட்சமாகும்!
அதன் ஒளி விழுதுகள் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மறம்

அம்பு, வில், வேல், ஈட்டி,
அதன்பின் வாள், துப்பாக்கி,
குண்டுகள், விச வாயு, ஏவுகணை, அணுகுண்டு,
என்று பரிணாம வளர்ச்சி பெற்றுக்
கூர்ப்படைந்த
ஆயுதங்கள்…. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இரசிப்பு

உன்னுடைய கவிதைகளை
நான் இரசிக்க வில்லை
என்பதற்காய் கவலை
எதும் உனக்கு இராதது போல்…..
என்னுடைய கவிதைகளை
நீ இரசிக்கவே இல்லை
என்பதற்காய் கவலை
எனக்கேதும் இல்லை நண்பா…!

Posted in கவிதைகள் | Leave a comment

கண்முன் உருவான அதிசயம் !

எப்படித்தான் சாத்தியம் என்றெவரும் பார்த்தோம்!
எடுத்த அடி வைக்குமுன்னர் புதிதாய் வேறு
செப்புதற்கு அரிய, நிஜப் புரட்சி யான
‘செயல் – வடிவம்’ பெறுவதனை மலைத்துக் கண்டோம்!
அப்படியோர் மகிமை…இன்றுலகம் போற்றும்
‘ஆறு திரு முருகனது’ தமிழ் சைவம் சேர்
ஒப்பரிய சாம்ராஜ்ய எல்லை நீளும்!
உயர் தெய்வ ஆசியொடன் னார் பேர் வாழும்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சாஸ்வதம்

பறக்க எழும் மனது.
பறக்க விடும் சிறகு.
தொடுவானம் தாண்டிச் சுடரும்
ஒளிப்பந்தை
அடைய உயர உயர
அயராமல்
அலைகையில்…. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இருள்

இருட்டுக்கு அஞ்சி எங்கே நாம்
ஓட ஏலும்?
இரவில் இருட்டு என்திசையிலும் அப்பி
இருக்க…
அதற்கஞ்சி எங்கே ஒளிய ஏலும்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நாப்பாம்பு

ஒவ்வொரு நாக்குகளும்
உருவில் அசைந்திடையில்
ஒவ்வொரு வகைப்பாம்பாய்
உவமிக்கும் என்மனது!
பாம்புகளில் உண்டு பல்வகைமை
நாக்குகளாம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment