கண்முன் உருவான அதிசயம் !

எப்படித்தான் சாத்தியம் என்றெவரும் பார்த்தோம்!
எடுத்த அடி வைக்குமுன்னர் புதிதாய் வேறு
செப்புதற்கு அரிய, நிஜப் புரட்சி யான
‘செயல் – வடிவம்’ பெறுவதனை மலைத்துக் கண்டோம்!
அப்படியோர் மகிமை…இன்றுலகம் போற்றும்
‘ஆறு திரு முருகனது’ தமிழ் சைவம் சேர்
ஒப்பரிய சாம்ராஜ்ய எல்லை நீளும்!
உயர் தெய்வ ஆசியொடன் னார் பேர் வாழும்! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

சாஸ்வதம்

பறக்க எழும் மனது.
பறக்க விடும் சிறகு.
தொடுவானம் தாண்டிச் சுடரும்
ஒளிப்பந்தை
அடைய உயர உயர
அயராமல்
அலைகையில்…. Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

இருள்

இருட்டுக்கு அஞ்சி எங்கே நாம்
ஓட ஏலும்?
இரவில் இருட்டு என்திசையிலும் அப்பி
இருக்க…
அதற்கஞ்சி எங்கே ஒளிய ஏலும்? Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

நாப்பாம்பு

ஒவ்வொரு நாக்குகளும்
உருவில் அசைந்திடையில்
ஒவ்வொரு வகைப்பாம்பாய்
உவமிக்கும் என்மனது!
பாம்புகளில் உண்டு பல்வகைமை
நாக்குகளாம் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

காலத்துடன் வாழ்தல்

காலமெனும் பட்சி
இரவு பகற் சிறகை
மாறிமாறி அடித்துப் பறந்து வர
வரலாறு
தாவி நகர்கிறது! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மிருக நேயம்

அப்படி என்ன அகோரப் பசி தீக்கு?
எப்படி மூண்டதென
எம்மூளை தேறு முன்னே…
ஐம்பது கோடி ஐந்தறிவு சீவன்களை
வெம்மையுள் வீழ்த்தி
உலகின் பெரும் ‘வேள்விக்
குண்டமெனப்’ பெருங்காட்டைக் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மண் மீட்பு

மண்ணை மீட்டிடல் என்பதை நாங்களும்
மறந்து பத்தாண்டு ஓடிப் பறந்தது.
மண்ணின் மீட்பு என்ற விடயம் நம்
மைந்த ருக்குப் புரியாப் புதிராச்சு.
மண்ணை மீட்டிடல் என்பதன் அர்த்தத்தை
மாறிப் புரிந்த நம் மக்கள் …தடை விழ
மண்ணை வெற்றுக் காணிகளில் நின்று
வலிந்து மீட்கிறார்…யார்தான் தடுப்பது? Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

அன்பர்களுக்கு

அமைதியாகத் தானே அன்றுவரை யான் இருந்தேன்!
அமைதிச் சொரூபமாயும்
அள்ளி அள்ளி வளமெல்லாம்
அட்சய பாத்திரமாய் அனுதினமும்
யான் அருள
உட்கொண்டீர்…நானும் ஓயா துதவிசெய்தேன்!
அன்னாய் என வந்தீர்
அமுது நிதம் ஊட்டிவிட்டேன்!
என்மீது கரிசனைகள் ஏதுமற்று
உமக்கேற்ப Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

புனிதம்

மீள மீளப் பாறைகளில் 
வந்து வந்து மோதியே 
போம்…அலைகள் 
பாறைகளின் அழுக்ககற்றி புனிதமாக்கும் 
தீவிர பணியில் திளைக்கிறதா?
இல்லாட்டில் 
பாறைகளில் மோதிமோதித் 
தமைத்தாம் துவைத்தபடி 
“தாம் புனிதம் ஆகிடலாம்” என்று 
தவித்தனவா?
யார் – யாரைப் புனிதமாக்க வேண்டும் 
என்று புரியாது- 
தான்…இவைகள் போராடி 
விடை தெரியா துள்ளனவா?
பாறைகளும் கரையாத மனதோடு 
பார்த்துளதா?

Continue reading →
Posted in கவிதைகள் | Leave a comment

வீதி விதி

துப்பாக்கி, கைக்குண்டு ,
ஆர்.பி.ஜி , எறிகணையை 
அப்போது நம்பி அலைந்த 
எமதர்மன் 
எப்போதோ டெங்கை,
தற்கொலையை, கொலையை, நம்பி… 
இப்போது அநேகமாக 
நம்புகிறான் விபத்துகளை !
எப்பாதை தனில் வருவான் இவன் 
சொல்வார் யார் பதிலை?

Posted in கவிதைகள் | Leave a comment

பாரதி ‘பா ரத’ சாரதி

எட்டய புரத்தில் அன்று 
எழுந்த தீக் குஞ்சு …இன்று 
தொட்டு அடிமுடிகள் காணா 
சுடர்ப் பிழம்பாகி …எங்கள் 
பட்டிகள் தொட்டி எங்கும் 
பரவியே சமூகக் குப்பை 
முற்றாக எரித்து என்றும் 
முளாசுது தொடர்ந்து வென்று.

Continue reading →
Posted in கவிதைகள் | Leave a comment

அழிவின் விளிம்பில்

காலாதி காலமாய் கடவுளுக் கஞ்சியே 
காய்த்தது எங்கள் வாழ்வு.
கற்பென்றும் மானமே கண்ணென்றும் நீதிமுன் 
கைகட்டிற் றெங்கள் ஆழ்வு.
வேல்கொண்டு வாள்கொண்டு வென்று நிமிர்ந்தாலும் 
மிக்க பண்பாடு கண்டு 
விழுமியம் காத்தது விதியை மதித்தது 
மேன்மை நூல் கற்று நின்று.
வாழ்விலே நேர்த்தியும் வரலாற்றில் கீர்த்தியும் 
வாழ்முறை கூர்ப்பும் கொண்டு 
மண்ணிலே நூறாண்டு மாண்போ டுயிர்த்தது 
வையம் வியக்க அன்று.
காலங்கள் மாறிற்று கோலங்கள் மாறிற்று 
கடன் ‘மேற்கில்’ நித்தம் பெற்று 
கைவிட்டு… வாழ்க்கையை மாண்பினை ஆயுளை 
கருகுது புதுமை என்று!.

Continue reading →
Posted in கவிதைகள் | Leave a comment

வானவில் வாழ்த்து

வெயிலும் மழையும் விமர்சயாய் 
மணம் முடிக்க 
கையில் குளிர் முகிலைப் 
பூச்செண்டாய் ஏந்தி 
ஏழு வர்ண வானத்து வில்லாம் கிளி…சாரற் 
பாமாலை தூவி 
பன்னீர் தெளித்து …வாழ்த்துச் 
சொல்கிறது வானரங்கில் 
சுக அந்தி நகர்கிறது!
எல்லையில்லாக் கற்பனைக்குள் 
இதயம் குளிக்கிறது!

Posted in கவிதைகள் | Leave a comment

மக்கள் ஆட்சி

முடிந்தது தேர்தல் கூத்து!
மும்முர மாக எண்ணி 
விடிந்ததும் அநேக மாக 
விடை…”வென்றார் இவர்தான்” என்று 
பட படப்போடு செய்தி 
பரவிடும்! வென்றோன் நாமம் 
வெடிகளால் அதிரும்! வீழ்ந்தோன் 
மீசை… மண் உதிர வேகும்!

Continue reading →
Posted in கவிதைகள் | Leave a comment

காலத்துடன் வாழ்தல்

காலமெனும் பட்சி
இரவு பகற் சிறகை
மாறிமாறி அடித்துப் பறக்க
வரலாறு
தாவி நகர்கிறது!
Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment