நாடு

மாறுபட்ட மனம் கொண்ட
பல கூட்டம் குழு வகையும் ,
வேரறுத்து முதுகினிலே குத்தி
வெளியினிலே
பாசம் பொழியும் உட் பகையும் ,
ஆள்வோனை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சூரன் போர்

சூரனுக்கும் முருகனுக்கும் தொடங்கியதே
சூரன் போர்.
ஆணவம்,கன்மம், மாயை — யாம்
மும் மல அசுரர்
தர்மத்தைத் தாக்க Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

புது(திர்)க் கோலம்

புள்ளிகளைச் சேர்த்துப் போட்டோம் 
புது(திர்)க் கோலம்.
புள்ளிகள் ஒருவரிடம் 
போதா திருந்ததனால் 
அவரிடம் இருந்த அவருடைய புள்ளிகளை, 
இவரிடம் இருந்த இவருடைய புள்ளிகளை, 
உவர்க ளிடம் இருந்த உதிரியான புள்ளிகளை,
என்றும் இலாதவாறு இணைத்துக் 
கலந்து புது 
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தொடர்பு

தூண்டிலிலே முள் கொழுவி,
துளி உணவால் ஆசைகாட்டி,
மீனினை ஏமாற்றிப் பிடித்து விலைபேசி,
யாருக்கோ விற்று இலாபமீட்டி —
ய(ம)வன் குலத்தில்
ஒராளை யேனுந்தான் பழிவாங்க
நினைத்த அதே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தவமும் வரமும்

நீ கதைக்க நானுனக்குத்
தெம்பைத் தருகின்றேன்!
நீ சிரிக்க எனது மகிழ்வை அருள்கின்றேன்!
நீ அசைய நானுனக்கு
சக்தியை ஊட்டுகிறேன்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நாளையும் போம்

வேளை நெருங்கிடணும் –விடிவொன்று
வென்று வரவேணும் –வெறும்
பாழைச் சுமந்த நிலம் –பச்சைசாத்தி
பலனைப் பெறவேணும் –இன்று
வாளைச் சுழற்றுபவர் –அகன்றவர்
வாலும் அறவேணும் –நாங்கள்
ஊழை ஜெயித்தவர்கள் –எனப்பிற
ஊர்கள் சொ(ல்)ல வேணும் ! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சுரணை

யாருக்கு இங்கே எதைப்பற்றி கவலையுண்டு?
யாரெவர்க்கு மனிதத்தைப்
பற்றி அக்கறையுண்டு?
தாமுண்டு, தம்பாடு உண்டு, தொழில் உழைப்பு
சோறுண்டு, என்பதன்றி
யார்க்குச் சுரணையுண்டு? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மழை ஏக்கம்

துளிகளை ஊசிகளாய் ஆக்கி
தொடுகைமுறை
சிகிச்சை ‘அக்குபஞ்சர்’
செய்கிறது தூறல் மழை!
அண்ணாந்து பார்த்தேன்;
பெண்மை முகிற் கைகளினால்
எண்ணற்ற துளிகள் அள்ளி
என் முகத்தில் நீர்க்கோலம்
வரைகிறது; Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நம்பிக்கை

விந்தைகள் ஆயிரம் செய்து விளைந்த நம்
வீரத்தை யார் மறந்தார்கள்? –அதன்
வேரினை யார் அறுத்தார்கள்? –வெறுஞ்
சந்தையாய் மாறி உழலும் நிலத்திலார்
தங்கம் விளைத்திடுவார்கள்? –இந்தத்
தப்பைத் திருத்துவ தார் கொல்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நிஜம்

கனவெல்லாம் கலைகின்ற காலம் ஆச்சு!
கண்களின் முன் நனவின் சாயம் வெளுத்துப் போச்சு!
சனிமாற்றம் நிரந்தரமாய்த் துயர் தந்தாச்சு!
சபை சந்தியில் மானம்…. வேண்டும் ஏச்சு!
முனிப்பயங்கள் அற்று சடலங்கள் இல்லா
முற்றத்தில் நடைப்பிணமாய்த் தொடரும் வாழ்வு!
தனித்தவிலே அடிக்கின்றோம் எங்கும்; சேர்ந்து
தனித்தாழத் தடுக்கிறது பிரிவின் வீச்சு! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

புதிய சகலகலா வல்லி மாலை

நெஞ்சைக் கரைக்கும் நிஜக்கலைகள் யாவும்
நினதருளால்
விஞ்சிக் குவிந்தன விண்வரையும்…நாங்கள்
வியந்தவற்றை
பஞ்சாக்கி வாழ்வின் பழிதுடைக்கப் பாவித்தோம்
பாரடி நின்
கஞ்சமலர்ப் பாதம் கதியாம் சகல
கலாவல்லியே ! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அர்த்தம் உணர்ந்து அறி

வல்லமைகள் கோடி வரமாய்த் தரும்சக்தி
தொல்லை துயர்கள் துடைப்பாளாம் –“இல்லை
எவரு” மென அஞ்சாதே! ஈடில்லா அன்னை
அவளே துணையாம் அணை! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

குணம்

சூரியன் ஒன்றுதான் .
அதன் குணங்கள் என்றும் ஒன்றே!
சூரியனின் செயற்பாட்டில்
துளியும் வேறு பாடில்லை.
சூரியனின் வரவு மறைவில் ஏதும்
மாற்றமில்லை! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உய்வோம் முருகால் உயர்ந்து

நல்லூரின் நாதன், நமைஇயக்கும் ஞானசக்தி
வல்லோன், நினைத்த வரம் தருவோன் –எல்லோரும்
ஏற்கும் எழில்நிபுணன், ஈடில் அருள்மழையோன்
காற்று நிலம்அவன்தீ காண்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வருஷத்தில் ஒரு வசந்தம்

நல்லூர் கொடியேறின் நாடொளிரும்.
தீர்த்தமாடி
எல்லா முகமும் எழில் சாத்தும்.
காஞ்சிபுரம்
மாறுகரை வேட்டியுடன்
நகைநட்டும் படையெடுக்கும்.
கோவிலடி மின்னிக் கொலுவிருக்க Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment