என் கவிதை

இந்த உலகில் இருக்கும் அனைவரையும்
எந்த ஒரு கொம்பனாலும்
திருப்திப் படுத்திவிட
முடியாது….என்பதுபோல்
எல்லோரும் விரும்ப வல்ல Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

சரி செய்!

விழுந்துதான் எழும்பு கின்றாய்.
வீதிகள் தோறும் சுற்றி
அழுது அர்ச்சனைகள் செய்தாய்.
அபிஷேகம் வாரா வாரம்
பழுதின்றிப் புரிந்தாய். அள்ளிப் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

கலை ஞானி

இயற்கை தனது எளிய கரங்களால்
எங்கு எங்கோ நிறங்கள் தொகுத்து தான்
முயலாது தென்றல் தூரிகை யால் தொட்டு
முங்கி எடுத்து மோனமாக மிக
இயல்பொடு வரைகின்ற வகை வகை Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

சரிதம்

வாழும் வகையறியோம் –எங்கள்
வாழ்வினுக்கு வரம்பேதறியோம்.
வாழ்வில் வளம் பெருக்கும் –வழி
வாசல் எவையென யாம் புரியோம்.
ஆளும் முறைதெரியோம் –அர
சாட்சியின் நுட்பங்கள் யாதுணரோம்.
ஆயினும் வாயின் வீச்சால் –இந்த
அண்ட சராசரம் போய் வருவோம். Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

கவிப்பணி

கவிதையோ ஒரு சுட்ட ரவையென,
கவிதையோ ஒரு அக்கினிக் குஞ்சென,
கவிதையோ ஒரு நல்ல விதையென,
கவிதையோ ஒரு வீரிய விந்தென,
கவிதையோ துளி அமிலம் விசமென
கவிதையோ மனதில் விழும் சொல்லென
புவியில் நேரடியாய் எம் மாற்றமும்
புரிவதில்லை; தாக்கம் புரிவதும் இல்லை! Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

முகம்

முகத்துடனே வந்தாய் என் முன் என்று
தான் இருந்தேன்!
முகமூடி அது என்று
முடிவில் தான் கண்டுகொண்டேன்!
முகமூ டியே முகமாய் மூட, Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

நடு நிலை

எனது சொந்த விருப்பு வெறுப்புக்காய்,
எனது நட்டம்
இலாபம் இவற்றுக்காய்,
என்னுடைய நன்மைக்காய்,
என் தப்பிப் பிழைப்புக்காய், Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

தூர்

இரவுதனைத் தூர் வாரி
எங்கே தான் கொட்டிற்றோ ….
வருமிந்தப் பகற்பொழுது?
மாலை வாடப்… பகல் தன்னை
தூர்வாரி எங்கேதான் கொட்டிடுமோ
துயர் இரவு? Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

மீண்டெழுவாய்

கண்களில் நீர்த்துளி கண்டு துடைத்துக்
கசிந்து உருகுகிறேன். –உந்தன்
கால் கையில் காய்ந்து உறைந்த குருதியை
கழுவி அகற்றுகிறேன். –உடற்
புண்களின் சீழினை ஒற்றிப் புதுத்துணி
போட்டு மருந்திடுவேன். –சிறு Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

நதிகளின் கனவுகள்

கடலுக்குப் புரியாது நதிகளது கனவுகள்!
கடல் தேடிப் பாய்ந்து ,
களைத்து வந்து ஆர்ப்பரித்து,
கடலோடு சங்கமித்துக், களித்து,
இரண்டறவே Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

சிறப்பு

பார்த்துக் கொண்டிருந்தேன்
பரந்த பெருங் கடலை ….
பார்க்க விரிந்து கடலளவாய் ஆச்சு மனம்!
நீந்தத் தொடங்கினேன்
நெடிய அலைகடலை…. Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

‘படைப்புழு’ புழுத்து….

எங்கிருந்து வந்தன இந்தப் படைப்புழுக்கள்?
இங்கிருந்தே போனவையோ?
இங்கு நேற்று அழித்தவையோ?
தங்கள் உருமாற்றி தங்கள் குணம் மாற்றி
தங்கள் தடம்மாற்றி Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

நோக்கு

மீன்களின் கண்களுக்கு விளங்கும்
கடல் நீளம்.
ஆந்தையின் கண்கள் அறியும்
இரவின் ஆழம்.
சீயத்தின் கண்களுக்குப் புரியும்
வனத்தின் எல்லை. Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

கவிஞனும் சிவனே !

கடலாழ மான கவிதைகள் பாடி
ககனத்தை அளப்பானாம் கவிஞன் .
கனவுக்குள் நீந்தி நனவுக்குள் நோண்டி
கவின் நூறு காண்பானாம் கலைஞன். Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment

ஓயாத வாழ்க்கை!

ஓயாது அலையடிக்கும் உலராத கடல்,
நித்தம்
ஓயாது கோலமிடும்
ஒய்யார முகிலினங்கள்,
ஓயா இயற்கையின் உயிர்மூச்சாய் காற்று,
அதன் Continue reading →

Posted in கவிதைகள் | Leave a comment