பெருமை

“எம்மிடமும் அன்றே இருந்ததொரு
யானையென”
எம்பெருமை பேசி,
இன்றுவரை அதைவைத்தே
எம்காலம் ஓட்டி,
இன்று ஒரு பூனைகூட Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வறுமை

படைப்புக்கள் தாம் எதையும் பேசவேண்டும்.
பாடவேண்டும்.
வெடித்துச் சிரிக்கவேண்டும்.
வெவ்வேறு இரசங்களுடன்
ஒருஉணர்வை, ஏதோஓர் உண்மையை, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பொட்டு

என்ன நடந்தது ?
இன்று மட்டும் இரவுவானில்
இரத்தத்தில் நிலாப்பொட்டை வைத்துவிட்டுப்
போனது யார்?
யாருடைய ரத்தம்?
தனதா? பிறனினதா?
விண்ணிலும் தேர்தலா?
வானம் வேட்பளானோடா?

(கிரகண இரவு அன்று (31.01.2018) தோன்றிய இரத்த நிலவு )

Posted in கவிதைகள் | Leave a comment

பேதம்

இவ்வானும் முகில்களும் இருகரையும்
தென்னைகளும்
கொடுத்துத்தான் வைத்தவைகள்!
குனிந்து தினம் தம் முகத்தைப்
பார்த்து இரசித்துளன….
ஆற்றுக் கண்ணாடியிலே….!
“ஆற்றுக் கண்ணாடி
அதன்முகத்தை எங்குபார்க்கும்?”
கேட்கின்றேன்….
இயற்கையிலும் பேதமுண்டா? புரியலையே….!

Posted in கவிதைகள் | Leave a comment

உன் இசை

சிலரின் இசை…தேன்!
சிலரின் இசை…மது!
சிலரின் இசை…பால்!
சிலரின் இசை…தயிர், நெய்!
சிலரின் இசை…தண்ணீர்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

போக்கு….வரவு ?

“தான் போனால் போதும்.
தான் மட்டுமே முந்திப்
போனாலே போது”மெனப் போகிறார்
ஒவ்வொருவர்களும்!
ஆறுதலாய்ப் போக ஆருக்கும் விருப்பமில்லை.
“தாமதித்துப் போனால் சுகப்பயணம்”… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பொங்கு நீ பொங்கு!

காயம் விழப் பொங்கு.
கவலை அழப் பொங்கு.
காதல் உடன் பொங்கு.
கவிதை வரப் பொங்கு.
ஆசை கெடப் பொங்கு. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

படையல்

யாருக்குப் படைக்கப் படுகிறது இவ்வுணவு?
நீலநிற வாழைத் தலைவாழை
நெடும் இலையில்
வெள்ளருசிச் சோறாய்
வெண்முகில்கள் சுற்றிவர… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உயிர்ப்பு

இலைகளை எரித்தது வெயில்.
நிமிர்ந்துநின்ற
கிளைகளை முறித்தது
கிளம்பிவந்த பேய்க்காற்று.
பூக்களைச் சபித்து
மொட்டுதிர்த்தது குளிர்மை. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தொலைந்த சுவைகள்

முதல் முத்தம் போல முதலில் சுவைத்த உருசி
மறக்காது என்றென்றும்.
மறக்கவில்லை இன்றைக்கும்!
இளமையில் …இற் றைக்கு முப்பது ஆண்டின்முன்…
சுவைத்த சுவை…நாக்கின் அரும்புகளின்
ஞாபகத்தில்
இருக்கிறது இன்றும்! Continue reading

Posted in நிகழ்வுகள் | Comments Off on தொலைந்த சுவைகள்

மொழி

வானம் ஒரு உதடு!
மண்ணோ மறு உதடு!
ஆம்…இவைக் கிடையே அசையும்
நா….கடலாச்சு!
கடல் நா…காற்று
‘அண்ணங்களை’ வளைந்து
தொடத்தோன்றும்….பிரபஞ்ச சுருதி!
வான் மண்ணாம்
உதடுகள் பேச நினைத்தவைதான்
மொழிகள்…..அறி!

Posted in கவிதைகள் | Leave a comment

சுகப் பயணம்

தட்டி வானுக்குள் தலைதிருப்ப
இடமின்றி,
முட்டி மோதி, மூட்டை முடிச்சு
வாழைக்குலைகள்
பெட்டிக் கருவாடு
மீனோடு மீனாகி,
திட்டி பள்ளம் ஏறி,
திரண்ட புழுதிப்பூ
சூட்டி,…. திகட்டாத சுகப்பயணம்
‘குளிர்ப்படுத்தி’
போட்டுறைய வைக்க,
‘குஷன் சீற்’ அணைத்திறுக்க,
சிறப்பு படக் காட்சி சீராட்ட
காப்பற் ரோட்
வருடி உறங்கவைக்கும் போதும்
வருதிலையே!

Posted in கவிதைகள் | Leave a comment

கடன்

மனமெனும் நெய்யில் நினைவெனும் தீயை
வளர்த்துளே வழிபடு கின்றோம்.
வலி பகிராமல்… வதை உரையாமல்…..
வரங்களுக்காய்த் தவம் செய்தோம்.
கனவுகள் வெந்து நனவிலும் நொந்து
கவிதையில் நேர்ந்தழுகின்றோம்.
கழியுமோ சாபம்? கலையுமோ தாகம் ?
கடன் அடைக்காதின்றும் உள்ளோம்!

Posted in கவிதைகள் | Leave a comment

மழைப் பேச்சு

ஓயாமல் பகலிரவாய் உளறிடுது வானமழை!
கோபத் துடனெனினும் குளிராய்த்தான்
ஊரினது
காது செவிடுபட
கத்திக்கொண் டிருக்குதின்று!
யார் கேட்பார் என்ற கவலையற்று
வாய் உழைய
ஓர் ‘சில் வண்டாய்’ இடைவிடா திரைகிறது!
வீடுகளில் ஜன்னல் கதவுகளில்
துளி எச்சில்
மோத முழங்கிடுது முறைத்து!
கண்களிலே
கோபமின்னல் வெட்டித் தெறிக்கக்
குமுறி …எங்கோ
ஏதோ ஓர் மேசையில் இடித்தும்
முழங்கிடுது!
“கேட்கோமோ” எனக்காத்துக் கிடந்து
நனைந்து தோய்ந்த
அயலெல்லாம்… மழைப்பேச்சுக்கு
அஞ்சி வீட்டுள் ஒதுங்க…,
வெயிலினது திட்டைமட்டும் வேண்டி
வெடித்துலர்ந்து
உயிர்வரண்ட மண்ணும்
உதிர்ந்து காய்ந்த மரம் செடியும்
மேனியெல்லாம் காதாக்கி
மழைப்பேச்சைப் பருகி நிற்க…,
ஓரிரு சொல் கேட்டே உயிர்க்கத்
தவித்த வயல்
நாற்றழுகி முளை அழுகி ஜலசமாதி ஆகிடுது! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மீள் நடுகை

வானில்வாழும் நீராவி
முகில்களெனும் வண்டியேறி,
கூதலில் குளிர்ந்தொடுங்கி,
குதித்துத் துளிகளாகி,
காற்றின் தெருக்களில் கால்நடையாய் வழுக்கி,
தூரப் பயணமாகி, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment