ஆற்றாமை

நான் அன்பைக் காட்டி நடப்பதனால்
நிதமுமெனைச்
சூழ்ந்த…,
என்மேற்தம் கோபம் வெறுப்புகளைக்
காட்ட முடியாத…,
நட்பு உறவுகளால்
பழிவாங்கப் பட்டு
பலதிட்டைப் பெற்று
அடிபட்டும் நொந்துளன…
என்வளர்ப்புப் பிராணிகள்.

Posted in கவிதைகள் | Leave a comment

பழையதும் புதியதும்

இன்று புதியது என்பது நாளைக்கு
இழிந்த பழசுதான்! எல்லோரும் போற்றிடும்
இன்றையின் நாக ரீகமே என்பது
இனிவரும் நாளில் அதரப் பழசுகாண்!
இன்றை நவீனம் நாளை மரபடா! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நிஜவெற்றி

வேலை கிடைத்ததென்று வேகப் புயலானாய்.
வேலை கிடைத்ததென்று
வெட்டிப் பிடுங்குகிறாய்.
வேலைக்கு நூறு சதவீத விசுவாசம்
கூட்டிப் பெருக்கிக் குத்தி முறிகின்றாய். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

செய்நன்றி

 

எப்போதோ ஓர்நாள் என்றோ ஒருதடவை
என்னுடைய உணவின்
உண்ணத் தகுந்ததெல்லாம்
உண்டு….உண்ண முடியாத மீதிகளை
“உண்ணட்டும்” என்று Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இன்றும் சுடும் சொல்

ஒவ்வொரு சொற்களுக்கும் ஒவ்வொரு அர்த்தமுண்டு.
ஒவ்வொரு சொற்களுக்கும்
ஒவ்வொரு பொருட்களுண்டு.
“ஒருசொல் உடலென்றால்”
உயிர்அதன் பொருளென்பேன்.

Posted in நிகழ்வுகள் | Leave a comment

தந்தை ஈகம்

“இரத்தத்தை பாலாக்கி ஊட்டினாளாம் நம் அன்னை…”
பெரிய விடயம் தான்.
ஈகத்தின் உச்சம் தான்.
என்றாலும் தந்தை என்றொருவர் அங்கில்லை 
என்றிருந்தால் ….இரத்தம்  Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நாயகன்

 

வெளித்தோற்றம் ‘நாயகன்.’
உள்ளேயோ நீ ‘வில்லன்.’
ஆழகான நண்பன். அகத்தில் முதற்பகைவன்.
பேரில் பெரியோன்.
பெருமையில் மிகஇழிந்தோன்.
ஊரில் உயர்ந்தோன். உளத்தில் மிகத்தாழ்ந்தோன்.
“உன்பிழைக்கு ஆதரவாய்
உரைக்கவில்லை அன்று ஏதும்,
உன்தவறைத் தண்டித்தார்
உதவவில்லை அன்று நானும்”
என்பதற்காய்
உள்ளே கறுவிக், குரோதவிசம்
கொண்டபடி,
வெளியே குளிரச் சிரித்தபடி,
என்னை இழிவுசெய்ய எண்ணி,
சபையேறிச்,
சொன்னாய் பழிப்புரைகள்!
சொறிந்தாய் என்செயல், இயல்பை!
மேலாண்மை கொள்ள
விசயம், பலம், ஆற்றல் இன்றி
கீழான வார்த்தைகளால்
உனது கிழிந்தமனம்,
சீழ்ப்பிடித்த சிந்தை,
அழுகிய சிந்தனைகள்,
தாழ்ந்த குணம்,
நாற்றம் குறையா மலஇதயம்,
காட்டி….
எனது துகிலைக் களைய ஏங்கி,
கூத்திட்டாய்…
உன்வேட்டி அவிழ்ந்ததும் அறியாமல்…!
கோமணம்நீ கட்டாது வந்ததுவும் தெரியாமல்…!!
நான்தானுன் மானத்தை….
அவிழ்ந்தவேட்டி தனைஎடுத்துப்
போர்த்து மறைத்தேன்!
பொய்யனுன் பிழைபொறுத்தேன்!
ஏனென்றால் வெளியேயும் உள்ளேயும் ‘நண்பன்’யான்!
நானுள்ளும் புறத்தினிலும் வில்லனல்ல..
‘நாயகன்’தான்!

Posted in கவிதைகள் | Leave a comment

கடந்து போன கவிதை ஊழியன்

‘பால்வீதி’ வரையும் பயணித்த பாவலவன்.
‘சுட்டு விரலாலே’
சொர்க்கத்தை தொட்டுவந்தோன்.
‘நேயர் விருப்பத்தில்’
நிஜ நியாயம் பேசியவன். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அதே தினம்

 

மீண்டும் அதேதினம்போல் பெருகிற்றுச் சனவெள்ளம்.
மீண்டும் அதேதினம்போல் எழுந்தது
அவலஓலம்.
மீண்டும் அதேதினம்போல் வெடித்தன கதறல்கள்.
மீண்டும் அதேதினம்போல்
விளைந்தன அடிபிடிகள். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தேடல்

 

நட்டாற்றில் நின்ற நாலுலட்சம் பேரினோலம்
எட்டவில்லை தோட்டா
வேலிகளைக் கடந்தெங்கும்.
கண்டுமே காணாத கனவான் களும்…நேரே
கண்டுமே கண்மூடிக் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

திசைகளைத் தகர்த்தல்

 

திசைகள் அவை எட்டும் சிதறிக் கிடந்ததிங்கு.
திசைகள் ஒருஎட்டும்
தெளிவாய் விரிந்ததிங்கு.
இங்கேநான் நிற்கின்றேன்…
என்தலைமேல் எண்திசையும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நம்பிக்கை நிழல்

 

எங்கேதான் போவதென இலக்கற்ற ஓர்இலவம்
பஞ்சாய் அலைந்தபடி
முடியாப் பயணத்தில்
ஒவ்வொரு திசையுமோர் விபச்சாரி போலழைக்க
எவ்வாறு மீண்டேன் என
அறியா தெனைக்காத்து
இங்கின்று நிற்கின்றேன்!
எப்படிநான் இங்குவந்தேன்?
என்மூளை சொன்னபடி, என்னிதயம் சொன்னபடி,
என்னுணர்வு சொன்னபடி,
என்னுள்ளே கேட்கின்ற
அந்த அசரீரி அழைத்தபடி, வந்தேனா?
என்னென்று இங்குவந்தேன்?
எப்படி இந்நிலையடைந்தேன்?
என்னென்று வந்ததடை எல்லாஞ் சமாளித்தேன்?
என்னென்றும் மனங்கவர்ந்தேன்?
எவ்வாறு வாகைகொண்டேன்?
என்பது எனக்கே விளங்காப் புதிராக..,
என்பாதை முன்பு அறியா வியப்பாக..,
என்பயணத்தை எண்ண Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காணாமல் ஆக்கப் பட்டவர்கள்

காலப் பனிக்கட்டி உருகிக் கரைந்து…கண்
ணீராய்ப் பரவி
குடியிருந்த நிலங்களினை
மூழ்கடிக்க…
குடும்பச் சுமைமுதுகில் கட்டியதால்
மீட்க முடியாமல் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பணிப்பெண்

(இலங்கையிலிருந்து பணிப்பெண்களாக சென்ற 12 பெண்களின் சடலங்கள் சவூதி அரேபிய
பிணவறைகளில் —அண்மைய செய்தி)

தேட்டம் உனதுழைப்பால் திரளும்எனக் காத்திருப்பர்
வீட்டின் தலைவர்
விளையாடும் பிள்ளைகள்,
வாழ்வை நகர்த்த Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உழவுப் போர்.

நீரற்று வாடும் நிஜப்பயிர்க ளாய்… நீவிர்
தார்வீதி வெயிலில்
தளிர்போல் வதங்குகிறீர்!
வரண்டு இலையுதிர்த்த மரங்களென
உடைகளைந்தீர்!
வெறுங் கோவணம் பூண்டீர்
வரங்கேட்டுத் தவஞ்செய்தீர்!
எலிகளும் பாம்புகளும் எத்தனையோ படிமேலாய்…
இறந்தபின் நிம்மதியாய் இருக்க
இறந்தஅவை
கௌவிக்…
கிடைக்காத நிம்மதி நியாயத்தை
எவ்வாறேனும் பெறவே பசிப்போர் புரிகின்றீர்!
பொறுக்க முடியாமல்
பொத்திவைத்த மானத்தைத்
துறந்துங்கள்…
வாழ்வின் நிர்வாண நிலைசொல்ல
நிர்வாண மாக நின்றீராம் டில்லியினில்!
மண்டையோட்டு மாலைபோட்டீர்,
மண்சோறு தான் தின்றீர்,
பாதிமீசை மழித்தீர், பாதிமொட்டை அடித்தீர்,
தாலி  அறுத்தீர் 
கைவளையலை உடைத்தீர்,
சாட்டையால் உங்களைநீர் சரமாரியாய் அடித்தீர்
குத்துக் கரணமிட்டடீர்,
குமரிகள்போல் சேலையினைக்
கட்டியும் போராடி கவனத்தை ஈர்க்க நிற்பீர்!
ஊருலகம் கண்டு உமக்கிரங்க
ஏதேதோ
வேலைகளில் மூழ்கிற்று ஆழும் உயர்வர்க்கம்…
ஏனென்று கேட்கவில்லை இளகவில்லை
ஆட்சிபீடம.;…
ஊருக்கே சோறூட்டும் உழவனின்–
இழுக்கின்ற
சேடத்தைச் சீராக்கும் சிரத்தையற்று,
அவர்களது
தேவைகளைக் கேட்கும் திராணியற்று,
அம்மணத்துச்
சாமிகளை, நடிகைகளைச்
சமஸ்த்தானத்தில் ஏற்றி
ஆலாத்தி எடுத்தபடி ஆணவமாய்…
அதிகாரம்!

Posted in கவிதைகள் | Leave a comment