Archive for the ‘கவிதைகள்’ Category

பௌர்ணமி அழைப்பு

வானத்தில் வெள்ளிக் குடமாக வட்டநிலா!
வானக் குடத்தால் வழிந்து
எண் திசையும்
பாயும் அமுதம்போற் பரவும் நிலவின்ஒளி!
நிலவு விளக் கொளிர,
நின்ற இருள் கலைய,
அலைபொங்கி ஆர்ப்பரிக்க,
Read the rest of this entry »

தீபாவளி(லி)

ஆடும் வரைக்கும் பேயாட்டம் ஆடிவிட்டு, 
ஆடும் வரைக்கும் 
அறம் நியாயம் மறந்துவிட்டு,
ஆடி…ஒருவன் அழிக்கவர 
அவனின்முன் 
தோற்றுவிடக் கூடாது என்று 
Read the rest of this entry »

சுஜித்

மண்ணை அறியாது விண்ணை அறிவதற்கு
எண்ணியது தவறென்று
இருவயதுப் பாலகன் நீ
இந்தப் புவிக்குயிரை விட்டுப் படிப்பித்தாய்!
தாகத்தால் நா உலர்ந்து தவித்த
ஆழ் துளைக்கிணற்றின்
வாயில் துளிநீராய் வீழ்ந்து
வற்றிப் போய்விட்டாய்!
Read the rest of this entry »

தும்பிச் சூரன்!

ஈட்டி முனைக்கூரில்
தன் ஒருகாற் பெருவிரலை
ஊன்றிநின் றொருநூறு யுகங்கள்
தவம் செய்து
சாகா வரம் பெற்றுச்
சகலரையும் ஆட்டுவித்த
Read the rest of this entry »

கீழடி

தெய்வத் தமிழே! திசைதிக்கில் மூத்தவளே 
வையத் தினுக்கே வழிகாட்டி –உய்விக்கும் 
அன்னாய்…உனதுசேய்கள் ஆம்…உன் பெருமைகளைக் 
கண்டோமே கண்முன் களித்து!

Read the rest of this entry »

யாமறிவோம்

எங்களுக்குத் தெரியும் எதைச் செய்ய வேணுமென்று!
எங்களுக்குத் தெரியும் 
எதுசெய்தால் தவறென்று!
உங்களது கட்டளையை,
உங்களது வேண்டுகோளை ,
உங்களது ஆதரவை,
உங்கள் புறக்கணிப்பை,
உங்கள் உடன்பாட்டை,
Read the rest of this entry »

சொற்களை உயிர்ப்பித்தோன்

சடங்களெனக் கிடந்தன சொற்கள்
தரையெங்கும்
உடைந்து உதிர்ந்த கற்களென நொருங்கினவாம்!
பழுத்து விழுந்து சிதையும் சருகுகளாய்
அழுகி ஒழுகி அழியும் 
உடம்புகளாய்க்
கிடந்தன சொற்கள்…
Read the rest of this entry »

சுயம்

மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…உயிர்
மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…உடல்
மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…மரம்
மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…இனம்
Read the rest of this entry »

மதமதம்

மனிதர் களையும் 
புனிதர் களையும் 
தனித்துவ எல்லை தாண்டி 
எரித்துப் புதைப்பதற்கு 
மதம்பிடித்து அலைகிறது மதம்;
அந்த மத மதத்தால் 
புதைந்தும் எரிந்தும் 
பொருளிழக்கும் 
மனித இனம்!

நினைவுக் குரங்கு

நினைவுக் குரங்கு 
நிமிடத்துக் கொருதரம்….தான் 
நினைத்தபடி அங்குமிங்கும் நின்று 
பாய்ந்து கொப்புமாறி 
ஓரிடமும் கணமும் ஒதுங்காமல் 
குதித்துப் 
பாய்கையிலே…..
Read the rest of this entry »

எவ்வாறு புரியும் இவ் உலகு?

நேற்றிருந்தேன் மொட்டாய்.
இன்றுபூத்தேன் பூவாய்.
நாளை முகிழ்வேன்யான் காய்,கனியாய்.
அதன் பின்னே
வீழ்வேன் கனியிருந்து வித்தாய்.
நேற்றிருந்து
நாளைக்கும் அதன்பின்பும்
எனை நகர்த்துமாம் காலம்!
நான் நம்பு கின்றேன் யான்
Read the rest of this entry »

பாவலனாம் காவலன்

கண்ணீரின் மழையிலே ககனங்கள் நனையவே
கவிஞானி பா இசைத்தான்.
கற்பனை ஆழியில் அற்புதம் பலநூறு
கவிமகன் மீட்டெடுத்தான்.
Read the rest of this entry »

நிழலென நீங்கான்

தலையினைக் குறி வைத்திடும் வேட்டினை 
தலைப் பாகையோடு சென்று விழ வைக்கும் 
கலை அறிந்தவன் கந்தன்…! உளத்தினால் 
கசிந்து உருகி அழைக்கும் அடியவர் 
மலைத் துயர்கள் முகிலாய்க் கலைந்திட, 
மனக் கவலைகள் மாய்ந்தே மடிந்திட, 
பல புதுமைகள் கணமும் நடத்துவான்!
பாச நிழலென நீங்கான்…தொடருவான்!

Read the rest of this entry »

வாழ்வில் தா ஒளி

உன்னடியே தஞ்சமென்று வந்து விழுந்தோம் –உந்தன்
ஒளிமுகத்தைக் கண்டு உள இருளைக் களைந்தோம்
எம் செயலில் ஏதுமில்லை என்று உணர்ந்தோம் –என்றும்
எல்லாமும் நீ பார்த்துக் கொள்வாய் என்று தெளிந்தோம்

Read the rest of this entry »

இன்னுமின்னும் நூறு சந்ததிக்கும்….

சந்தன வாசமும் செந்தமிழ் வேதமும் 
தண் மணி நாதமும் தவழும்.
சங்கொலி, தேன் குழல், சந்தக் கவிஇலயம், 
சல்லாரியால் இசை மலரும்.
Read the rest of this entry »

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 77021Total reads:
  • 56352Total visitors:
  • 0Visitors currently online:
?>