கருகக் கூடுமோ?

ஊர டங்கு தொடர்ந்து வளர்ந்தது.
உயிர்ப் பயத்தில் பார் அடங்கிக் கிடந்திடும்
காலம்…இங்கும் கனத்துத் தவிக்குது.
கவலை பேயாய்க் கவிந்து படர்ந்தது.
வேரில் விழுந்து அரிக்கும் கிருமியால்
விழுதும் நொந்து விருட்சம் முழுவதும் Read the rest of this entry »

இறைவரை கண்டோம் நேரில்!

தெய்வங்கள் தம்மை நேரில்
திசைகளில் கண்டோர் இல்லை!
தெய்வங்கள் சிலையாய் நிற்கும்;
செயற்படும் அழகைப் பார்த்து
உய்தவர் இல்லை! நஞ்சைத்
தான் உண்டு உலகைக் காத்த Read the rest of this entry »

புதுமை ஆண்டு

புதிய தானதோர் ஆண்டு மலர்ந்தது!
புதுமை இம்முறை….யாரும் எவர்களும்
புதிதுடுத்து உயிர்த்து திருத்தலம்
போய்…அறுசுவை உண்டு சிலிர்த்திடும்
கதைகள் இல்லை! வீட்டில் இருந்துயிர்
களித்து குடும்பத்தி னோடு கதைத்துண்டு Read the rest of this entry »

இயல்பு வாழ்வு

தெளிவாச்சு வானம்! தெளிவாச்சு ஆழி!
தெளிவாச்சுக் காற்று!
தெளிவாச்சு கங்கை!
“ஆம்…மீண்டும் எங்கள் அழகியற்கை
வான் மலைகள்
ஆறின் தெளிவோட்டம் அதிசயம்” Read the rest of this entry »

உணர்ந்ததை மறந்தால்….

ஆயிரம் கோடி ஆண்டுகள் தாண்டி
அழியலை பூமியின் அழகு.
ஆழவந் தேபத் தாயிரம் ஆண்டா
அறியலை நீ..புவி மனது.
பாயிரம் தானே பார்த்தனை இன்னும்
பயிலலை யே புவி அறிவு. Read the rest of this entry »

ஊர் மாறி உரு மாறி

காலாற யான் நடந்த களிமண் வீதி
காப்பற்றாய் மாறிநிற்கும்! காற்றை வாங்கி
மேலெல்லாம் ஒத்தடங்கள் பிடிக்கும்…மூலை
வேம்பு நின்ற இடத்தில் தொலைத் தொடர்பைக் காவும்
கோபுரமா நிழல் விரிக்கும்? கிடுகு வேலி
குறைந்தெங்கும் மதில் சூழும்…மாரி வெள்ளம் Read the rest of this entry »

செய் பிழை

காலம் கடத்தி ஆற்றவேண்டிய கடமை
காலம் கடத்தியே
ஆற்றப் படல் வேண்டும்!
காலம் கடத்தாது ஆற்றவேண்டிய கடமை
காலம் கடத்தாதே
ஆற்றப் படல் வேண்டும்! Read the rest of this entry »

கனவாக ஏன் கலைந்தாய்?

தீயணைக்கச் சென்றவனே….
சா அணைக்க ஏன் சரிந்தாய்?
தீ அணைந்திருக்கும் அங்கு;
தீப்பிடித்து.. எம் நெஞ்சு!
நீ அணைத்த தீயாலே நிஜம்
தப்பிப் பிழைத்ததன்று! Read the rest of this entry »

வேசம்

அகத்திலே… எனைவீழ்த்த அம்புகளைக்
கூர்தீட்டி,
அகத்திலே… எனைச் சாய்க்க
அரிய வியூகம் ஆக்கி,
அகத்திலே…
எனைப்புதைக்க ஆசைக் கிடங்குவெட்டி, Read the rest of this entry »

கவி அறிக!

கவிதை என்பது கசிந்து உருகியும்,
கவிதை என்பது கட்டி இறுக்கியும்,
கவிதை என்பது கொஞ்சிக் குலாவியும்,
கவிதை என்பது கெஞ்சி அளாவியும்,
கவிதை கண்ணீர் சிந்த இழக்கியும்,
கவிதை கிச்சுக் கிச்சுக்கள் மூட்டியும், Read the rest of this entry »

சுயமழிப்பு

பகலைப் பகலாய் இருக்க விடாது …கரு
முகில்கள்;
பகலின் முகத்தை அவைமறைக்கும்!
இரவை இரவாய் இருக்க விடாது…ராவில்
எரியும் விளக்குகள்;
இரவியல்பெழில் சிதைக்கும்! Read the rest of this entry »

தாகம்

சாவுக்கும் வாழ்வுக்கும் சாட்சியாய்
நின்ற நம்
வீதியோரப் பனைகளை
விசிறியாக்கிப் போம்…காற்று
தேன் நக்கித் தாகம் ஆற்றும்
திக்கிலுள்ள பூக்களிலே! Read the rest of this entry »

தாய்மை

எத்தனை இடர்களை எவரெவர் புரிந்தாலும்,
எத்தனை துன்பத்தை இற்றைவரை
மனுக்குலத்தோர்
செய்து அழித்தாலும்,
சிதைத்து முடித்தாலும்,
வையத் துயிர் உடலை வாட்டி வறுத்தாலும், Read the rest of this entry »

பிடி

நெகிழ்ந்த கயிறுகள் நின்று
மீண்டும் இறுகி
அகத்தைப் புறத்தை
அழுத்தத் தொடங்கியதால்…
அசைக்க முடியாமல் அலறி ஓயும்
கை கால்கள். Read the rest of this entry »

ஊர் இதம்

வண்ணமயில் தோகை விரித்தாடுகிற போது
வாய்திறந்து சந்த கவி பாடுகிற போது
என் மனது விண் படியில் ஏறுகிற போது
இன்பமெழும்… ஆம் இதற்கு ஈடு இணை ஏது? Read the rest of this entry »

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 94946Total reads:
  • 70391Total visitors:
  • 0Visitors currently online:
?>