பாச் செடி

நானோர் பூச் செடிபோலே
கவிப்பூ நிதம் பூப்பேன்!
யார் பூவை இரசிப்பார்கள்?
யார் அழகில் மகிழ்வார்கள்?
யார் வாசம் முகர்வார்கள்?
யார் தேனை எடுப்பார்கள்? Read the rest of this entry »

வேர்களை மறந்து

வேர்களின் வாழ்வு பற்றி
விரிவாகப் பேச மாட்டீர்.
வேர்களின் மூச்சைக் காக்கும்
விதம் பற்றி நினைக்க மாட்டீர்.
வேர் வாழக் காற்றும் நீரும்
வேணும்… நீர் உதவ மாட்டீர். Read the rest of this entry »

இயற்கையோடு இயை!

என்னுடன் கூட எழுந்து வரும் வெயில்.
எந்தன் பாதையைக் குளிர்த்தும் திடீர் மழை.
என் விழிக்கு வழி காட்டும் சுடர் ஒளி.
என் முகம் புத்துயிர்க்கத் தொடும் பனி.
என் சகபாடி யாகும் சுழல் காற்று.
என் துணை, சக பயணி எனும் முகில். Read the rest of this entry »

நம்பிக்கை

கால்கள் இன்றைக்கும் ஓய்ந்திட வில்லையே.
கைகள் இன்றும் களைத்ததும் இல்லையே.
வாய்கள் ஊமையாய்ப் போனது இல்லையே.
மனங்கள் என்றும் மயங்கிய தில்லையே.
தாகம், பசி, நோ, தணியாத போதிலும்
தவிப்பின் ஏக்கம் அடங்கிட வில்லையே. Read the rest of this entry »

கண்ணீர்க் குமுறல்

கண்ணீர்த் துளி சிறிது.
கடல் கோடி தரம் பெரிது.
என்றாலும் உங்கள் ஒவ்வொரு
கண்ணீர்த் துளியும்
ஒன்றல்ல இரண்டல்ல
ஒரு நூறு துயர்க்கடலைக் Read the rest of this entry »

துயில்

மூன்றாம் பிறையினது மூலைகளில்
கயிறிணைத்துத்
தூளிகட்டி உன்னைத்
துயிலவைக்க நான் நினைக்க…
மூன்றாம் பிறையே முழுத்தூளி
என என்னை Read the rest of this entry »

மாற்றம்

திடீரென்று காற்று திசையினை மாற்றிற்று!
அடித்திங்கு நின்றகாற்று
அப்பக்கம் போயிற்று!
என்ன குழப்பம்?
எம்மீது ஏன் கோபம்?
என்னதான் காரணம்? Read the rest of this entry »

இரவு

இரவினது மெளனத்தைக் கலைத்தது
பெருமூச்சினோசை.
கருமிருளில் புதைந்துளன
கணக்கற்ற ஏக்கங்கள்.
கவியும் குளிரில் களைத்து அடங்கிடுது
அவிந்த இதயத்தின் அனல். Read the rest of this entry »

தவிர்த்துச் செல்.

எழுதாதே கவிதைகளைத் தினமும்
என நீ சொன்னாய்.
சுவாசிக்க வேண்டாம் நீ தொடர்ந்து
எனச் சொன்ன
மாதிரி இருந்தது…
என் கவியே என் சுவாசம்! Read the rest of this entry »

பொய்மைகள் என்றுதான் போகும்?

உண்மையாக உழைத்துக் களைப்பவன்
உரிமை, ஊதியம், பலன்கள், கவுரவம்
என்பவை இன்றி அவமதிக்கப் பட
ஏய்த்து மேய்ப்பவன் பொய்வேடம் பூண்பவன்
தன் நடிப்பால் உலகை மயக்குவோன்
தகுதிகள் அற்றும் தலைவனாய் மாறுவான்! Read the rest of this entry »

ஞான வழிக் கலங்கரை

நல்லைக் கந்தனின் கோவில் நிழல் இன்று
‘நாயன்மார்க்கட்டைத்’ தாண்டியே ‘செம்மணி’
எல்லை மட்டும் கவிந்து ஒளிர்ந்தது!
எவர்க்கும் தனது இருப்பிடத்தின் திசை
சொல்லியே வரவேற்றது! கம்பீரத்
தோற்றத்தில் ‘நல்லை வேலாய்’ நிமிர்ந்தது! Read the rest of this entry »

மாற்றம்?

வெளித்துக் கிடக்கிறது வானம்.
கவலையற்றுக்
குளிர்ந்து திரிகிறது காற்று.
வழமைபோல்
ஒளிர்ந்து மலர்கிறது பகல்.
வளங்கள் பெருகி Read the rest of this entry »

வியப்பு

கடல், ஆழி, சமுத்திரத்தை
தன் உள்ளங் கைகளுக்குள்
பிடித்திருக்கும் பூமி!
விரல்களெனக் கண்டம் ஐந்து!
விரல்களின் இடுக்குகளில் விழுந்து
நீர் ஒழுகாமல் Read the rest of this entry »

மரண வலை?

மீண்டும் அயலில் விழுந்ததா மரணவலை?
நீண்ட தனிமை
நிதான ஒடுக்கங்கள்
தாண்டிப் பழையபடி
தன்னிசையை மீட்க…அன்று
நரம்பறுந்த யாழ்…நரம்பைச் சீர்செய்து Read the rest of this entry »

நீளும் இடைவெளிகள்

இடைவெளி பெருகிடுது…
எதை எவர்தான் தீண்டினாலும்
தொடலாம் மரணம்….கை தூர விலகிடுது!
யார்மேல் யார் பட்டாலும்
தொற்று நீக்கி தெளித்து
பேதமின்றிக் கைகூப்பும் பெருமை Read the rest of this entry »

கவியரங்கக் கவிதைகள்
பெரியோர்கள் போற்றுதும்..
எனது புதிய பதிவுகள்
ஒலிப் “பதிவு”
ஒளிப்பதிவுவெளியீடுகள்

முகப்புத்தகத்தில் தொடர
வருகைதந்தோர்
  • 105116Total reads:
  • 77211Total visitors:
  • 0Visitors currently online:
?>