மர(ன)ம்

மரம் தனது அன்பை
அயலிலுள்ள உயிர்களுக்குத்
தருகிறது… பூக்கள், காய்கள்,
பழம் விதையாய்;
இதநிழலாய்;
கிளைகள் இலைகள் அசையவரும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மர(ன)ம்

மெய்

மெய்யென்று சொன்னது பொய்யாகிப் போனதே
மேனியைத் தீ தின்றதே!
மீட்டிய நினைவுகள் மட்டுமே மிஞ்சுதே
மெய்யுடல் இன்றில்லையே!
ஐயகோ எத்தனை அழகு புனைந்தனம்
அடிக்கடி குளிப்பாட்டியே Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மெய்

எதார்த்தக் கவிதை எழுது!

கண்களில் ஆயிரம் கனவு ததும்பக்
கவிதை எழுதடா கவிஞா!
காலத்தை வென்றிடும் கற்பனை கூட்டி நற்
கருத்தை விதையடா கவிஞா!
புண்களை மாற்றிடும் பொது மருந்தொன்றையே
பூசடா கவிதையாய்ப் புலவா! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எதார்த்தக் கவிதை எழுது!

புனல் வாதம்

சற்று ஓய்ந்து கிடந்து…மறுபடி
சாரை சாரையாய்க் கொட்டும் மழை! நிலம்
முற்றாய் ஊறிச் சிதம்பி நிரம்பியே
மூழ்கிற்று; வீடு, வயல்கள்,தெரு,குளம்
வற்றாக் கிணறுகள் யாவும் நிறைந்தது.
மனங்களும் ஈரஞ் சுவறி நடுங்குது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புனல் வாதம்

மீட்டிற்று

ஓர் ஐந்து மணித்துளிதான்…
உயிரிழந்து சடலமாகி
மாய்ந்தது மின்…இந்த வளத்திரு நாடெங்கும்!
இப்படி ஒருநிலமை,
தொழில்நுட்பச் சேதாரம்,
எப்பவும் நடந்ததுவோ முன் எங்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மீட்டிற்று

இயற்கையொடு இழைதல்

எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.
எதிர்வுகூறிப் பார்த்திருந்தோம்.
இதோவரும்…
இன்னும் இருமணியில்…
இரவினில்…
கொட்டும் மழையென்று Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கையொடு இழைதல்

விதி

வேட்டையாடுது வேட்டுகள் -குண்டு
விண்ணைப் பிய்த்துச் சிதைக்குது -அட
ஏட்டிக்குப் போட்டிப் பீரங்கி; -நிலம்
இறக்க உழுதன டாங்கிகள்; – கணைப்
போட்டி இரவும் தொடருது – சனம்
போக்கிடம் அற்று அலையுது – “எவர் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on விதி

பிராயச்சித்தம்

உண்மை அறம் நேர்மை – நெஞ்சில்
ஊற… இரக்கம் கருணை கரிசனை
கொண்டு தாழ்வுயர்வுதனை-தூக்கி
கொஞ்சாது யாவர்க்கும் நன்மை சமநீதி
எண்ணுவோர் இங்கு இல்லை -மக்கள்
எண்ணம் அறிந்து அவர்க்காய் உழைக்கிற Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பிராயச்சித்தம்

நிரந்தரம்

இரவு நிரந்தரம் இல்லை.
பகலுந்தான்
நிரந்தரம் இல்லை.
நிலவிரவு நிலைக்கவேண்டும்
என்று நினைத்தாலோ…
எழிற்பகலே நீளவேண்டும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நிரந்தரம்

தடங்கள்

வானம் பொழிதல் வழமை;
ஆண்டாண்டாய்
மாரிகளில், சித்திரைச் சிறுமாரிக் காலத்தில்,
வானம் பொழிதல் வழமை;
வானமொரு
‘அட்சய பாத்திரமாய்’ அள்ளி Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தடங்கள்

மனது பூக்கும் வாழ்வு.

காலை விடிகாலை காலும் பனியூறி
காற்றுஞ் சிலிர்ப்போடு நகரும்.
காதில் ‘திருவெம்பா’ கானம் விழும்போது
காய்ந்த மனங்கூடக் கரையும்.
சூழும் இருளுக்குள் தோன்றும் ஒளிதீபச்
சூடு உயிரெங்கும் பரவும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மனது பூக்கும் வாழ்வு.

நடுகை

மாரி இறங்கிவர, மண்ணும் இழகிவிட,
ஊரே குளிர்ந்து
ஒடுங்கிக் கிடக்க, நல்ல
நேரம் இதுவாக,
நெருப்புக் கோடை தணித்து…
வாற வருடம் மண்ணில் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நடுகை

சுடர்

எல்லாம் எரிந்து இறுதிச் சாம்பல் எஞ்ச…
கொஞ்சம் அதைக்காற்றுக் கொண்டுபோக…
மழைகரைத்து
மிஞ்சியதில் பாதியினை
விரைந்து வெள்ளம் அகற்ற…
எரிந்த அடையாளம் ஏதுமற்று; Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சுடர்

வரலாற்றை எழுதுதல்

நேற்றைய கதைகள் நிமிர்ந்த எம் மனச்சுவரில்
ஏற்கனவே எழுதிவைக்கப் பட்டன;
வரலாறாய்
மாற்றிவிடப் பட்டன!
வலிந்தவற்றை இனித்திருத்த
முடியாது; Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வரலாற்றை எழுதுதல்

சூரர்

உண்மைக் கெதிராய் உறுதியாய் நிற்பார்கள்.
நன்மை உலகில் நடக்கத் தடுப்பார்கள்.
தன்முனைப்பு, அகங்காரம்
தானெனும் ஆணவம், மமதை,
கொண்டு குதிப்பார்கள்.
அப் பாவிக் குடிகளினை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சூரர்